| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 927 | அமலனாதிபிரான் || 1 | அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன் நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே | அமலன், Amalan - பரிசுத்தனாய் ஆதி, Adhi - ஜகத்கார பூதனாய் பிரான், Piran - உபகாரகனாய் என்னை, Ennai - (இழி குலத்தவனான) என்னை அடியார்க்கு, Adiyarku - (தனது) அடியவர்களான பாகவதர்களுக்கு ஆள்படுத்த, Aalpadutha - ஆட்படுத்துகையாலே வந்த விமலன், Vimalan - சிறந்த புகரை யுடையனாய் விண்ணவர் கோன், Vinnavar Kon - நித்யஸூரிகட்குத் தலைவனாயிருந்து வைத்து (ஆஸ்ரிதர்கட்காக) விரை ஆர் பொழில், Virai Ar Pol - பரிமளம் மிக்க சோலைகளை யுடைய வேங்கடவன், Vengadavan - திருவேங்கடமலையில் வந்து தங்குமவனாய் நிமலன், Nimalan - ஆஸ்ரயிப்பார்க்கு அரியனாயிருக்கையாகிற குற்றமற்று;ஆஸ்ரித பாரதக்திரியத்தை வெளியிட்டு நிற்குமவனாய் நின்மலன், Ninmalan - அடியாருடைய குற்றத்தைக் காண்கையாகிற தோஷமில்லாத வத்ஸலனாய் நீதி வானவன், Neethi Vanavan - சேஷ சேஷி முறை வழுவாதபடி நியாயமே செல்லும் நிலமான பரமபதத்துக்கு நிர்வாஹகனாய் நீள் மதிள், Neel Mathil - உயர்ந்த மதிள்களை யுடைய அரங்கத்து, Arangathu - கோயிலிலே (கண் வளர்ந்தருளுகிற) அம்மான், Ammaan - ஸ்வாமியான அழகிய மணவாளனுடைய திரு கமல பாதம், Thiru Kamala Padham - திருவடித் தாமரைகளானவை வந்து, Vandhu - தானே வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே, En Kannin Ullan Okkindrathe - என் கண்ணுக்குள்ளே புகுந்தன போலிரா நின்றனவே |