| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 929 | அமலனாதிபிரான் || 3 | மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான் அந்தி போல் நிறத் தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில் உந்தி மேல தன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே | மந்தி, Mandhi - குரங்குகளானவை பாய், Pai - (ஒரு கிளையில் நின்றும் மற்றொரு கிளையில்) பாயப் பெற்ற வடவேங்கடம் மா மலை, Vadavengadam Ma Malai - வடதிசையிலுள்ள திருவேங்கடமென்னும் திருமலையிலே வானவர்கள், Vaanavarkal - நித்ய ஸூரிகள் சந்தி செய்ய நின்றான், Sandhi Seyya Nindraan - பூக்களைக் கொண்டு ஆராதிக்கும்படி நிற்பவனாய் அரங்கத்து, Arangathu - கோயிலிலே அரவு இன் அணையான், Aravu in Anaiyaan - திருவனந்தாழ்வானாகிற போக்யமான படுக்கையை யுடையனான அழகிய மணவாளனுடைய அந்தி போல் நிறத்து ஆடையும், Andhi pol nirathu aadiyum - செவ் வானம் போன்ற நிறத்தையுடைய திருப் பீதாம்பரமும் அதன் மேல், Adhan mel - அப் பீதாம்பரத்தின் மேலே அயனை படைத்தது ஓர் எழில் உந்திமேலது அன்றோ, Ayanaai padaithadhu oru ezhil undhimeladhu andro - பிரமனைப் படைத்த ஒப்பற்ற அழகை யுடைய திருநாபிக் கமலமும் ஆகிய இவற்றின் மேற்படிந்ததன்றோ அடியேன் உள்ளத்து இன் உயிரே, Adiyen ullathu in uyire - என்னுடைய மனஸ்ஸிலே விளங்குகிற இனிதான ஆத்ம ஸ்வரூபம். |