| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 931 | அமலனாதிபிரான் || 5 | பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன் வாரமாக்கி வைத்தான் வைத்த தன்றி யென்னுள் புகுந்தான் கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத் தம்மான் திரு ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே | பாரம் ஆய, Paaram Aaya - பொறுக்க முடியாத சுமையாயிராநின்ற பழ வினை, Pala Vinai - அநாதியான பாபங்களின் பற்று அறுத்து, Patru Aruthu - சம்பந்தத்தைத் தொலைத்து என்னை, Ennai - (அதனால் பாபம் நீங்கப் பெற்ற) அடியேனை தன் வாரம் ஆக்கி வைத்தான், Than Vaaram Aakki Vaithaan - தன்னிடத்தில் அன்பு உடையவனாகப் பண்ணி வைத்தான் (ரங்கநாதன்) வைத்தது அன்றி, Vaithadhu Andri - இப்படி செய்து வைத்ததுமல்லாமல் என்னுள் புகுந்தான், Ennul Pugundhaan - என் ஹ்ருதயத்திலும் ப்ரவேசித்து விட்டான் (இப்படிப்பட்ட பாக்கியத்தைப் பெறுதற்கு உறுப்பாக நான்) கோரம் மா தவம், (Ippadippatta Paagiyaththaip Perutharku Uruppaaga Naan) Koram Maa Thavam - உக்ரமான பெரியதொரு தபஸ்ஸை செய்தனன் கொல், Seydhanan Kol - (முற் பிறவியில்) செய்திருப்பேனோ என்னவோ? அறியேன், Ariyen - அறிகிறேனில்லை; அரங்கத்து அம்மான், Arangathu Ammaan - ஸ்ரீ ரங்கநாதனுடைய திரு ஆரம், Thiru Aaram - பிராட்டியையும் முக்தாஹரத்தையும் உடைத்தான மார்பு அது அன்றோ, Maarp Adhu Andro - அத் திரு மார்பன்றோ அடியேனை, Adiyenai - தாஸனான என்னை ஆள் கொண்டது, Aal Kondadhu - அடிமைப் படுத்திக் கொண்டது |