| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 932 | அமலனாதிபிரான் || 6 | துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன் அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும் உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே | துண்டம், Thundam - ஒரு துண்டாயிருக்கிற (கலா மாத்ரமான) வெண் பிறையன், Ven Piraiyan - வெளுத்த சந்திரனை (முடியிலே) உடையனான சிவனுடைய துயர், Thuyar - (பிச்சை யெடுத்துத் திரிந்த) பாதகத்தை தீர்த்தவன், Theerthavan - போக்கினவனும் அம் சிறைய வண்டு, Am Siraiya Vantu - அழகிய சிறகை யுடைய வண்டுகள் வாழ், Vaazh - வாழ்தற்கிடமான பொழில் சூழ், Pozhil Soozh - சோலைகள் சூழப் பெற்ற அரங்கம் நகர், Arangam Nagar - திருவரங்கப் பெரு நகரிலே மேய, Mae, Meya - பொருந்தி யிரா நின்ற அப்பன், Appan - ஸ்வாமியுமான ஸ்ரீரங்கநாதனுடைய அண்டர், Andar - அண்டத்துக்குட்பட்ட தேவாதி வர்க்கங்களையும் அண்டம், Andam - அண்டங்களையும் பகிரண்டம், Pakirandam - அண்டாவரணங்களையும் ஒரு மா நிலம், Oru Maa Nilam - ஒப்பற்ற மஹா ப்ருதிவியையும் எழு மால் வரை, Ezh Maal Varai - ஏழு குல பர்வதங்களையும் முற்றும், Muttrum - சொல்லிச் சொல்லாத மற்றெல்லாவற்றையும் உண்ட, Undu - அமுது செய்த கண்டம் கண்டீர், Gandam Kandeer - திருக் கழுத்துக் கிடீர் அடியேனை, Adiyenai - தாஸனான என்னை உய்யக் கொண்டது, Uyyak Kondadhu - உஜ்ஜீவிப்பித்தது |