| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 935 | அமலனாதிபிரான் || 9 | ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய் ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான் கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில் நீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே | மா, Maa - பெரிதான ஆல மரத்தின் , Aala Marathin - ஆல மரத்தினுடைய இலை மேல், Iai Mel - (சிறிய) இலையிலே ஒரு பாலகன் ஆய், Oru Paalakan Aay - ஒரு சிறு பிள்ளையாகி ஞாலம் ஏழும் உண்டான், Gnalam Yezhum Undaan - ஏழுலகங்களையும் திருவயிற்றிலே வைத்து நோக்கினவனும் அரங்கத்து, Arangathu - கோயிலிலே அரவு இன் அணையான், Aravu In Anaiyaan - திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளியின் மீது சாய்ந்தருள் பவனுமான ஸ்ரீ ரங்கநாதனுடைய கோலம், Kolam - அழகிய மா, Maa - சிறந்த மணி ஆரமும், Maani Aramum - ரத்நங்களாற் செய்யப்பட்ட ஹாரமும் முத்து தாமமும், Muthu Thaamamum - முத்து வடமும் (ஆகிய இவை போன்ற பல்லாயிரம் திருவாபரணங்கள்) முடிவு இல்லது, Mudivu Illadhu - எல்லை காண முடியாமல் அபரிமிதமாக விளங்கா நிற்கப் பெற்றதும் ஓர் எழில், Oru Yezhil - ஒப்பற்ற அழகை யுடையதும் நீலம், Neelam - கரு நெய்தல் மலர் போன்றதுமான மேனி, Meni - திருமேனி யானது என் நெஞ்சினை, En Nenjinai - எனது நெஞ்சினுடைய நிறை, Nirai - அடக்கத்தை கொண்டது, Kondadhu - கொள்ளை கொண்டு போயிற்று; ஐயோ!, Aiyo! - இதற்கென் செய்வேன்? என்கிறார். |