| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 936 | அமலனாதிபிரான் || 10 | கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானு அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே | கொண்டல் வண்ணனை, Kondal Vannanai - காள மேகம்போன்ற வடிவையுடையனும் கோவலன் ஆய் வெண்ணெய் உண்ட வாயன், Kovalan Aay Vennay Unda Vayan - கோபால குமாரனாகப் பிறந்து வெண்ணெயமுது செய்த திருவாயை யுடையனும் என் உள்ளம், En Ullam - என்னுடைய நெஞ்சை கவர்ந்தானை, Kavarnthaanai - கொள்ளை கொண்டவனும் அண்டர் கோன், Andar Kon - நித்யஸூரிகட்குத் தலைவனும் அணி அரங்கன், Ani Arangan - (பூமண்டலத்துக்கு) அலங்காரமான திருவரங்கத்தில் கண்வளர்ந்தருள்வபனும் என் அமுதினை, En Amudhinai - எனக்குப் பரம போக்யமான அம்ருதமாயிருப்பவனுமான அழகிய மணவாளனை கண்ட கண்கள், Kanda Kangal - ஸேவிக்கப் பெற்ற (பரமபத நாதனையும்) காணா, Kaana - காண மாட்டா. |