திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 94 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
94பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 9
வெண் புழுதி மேல் பெய்து கொண்ட அளைந்ததோர் வேழத்தின் கருங்கன்றுபோல் தெண் புழுதி யாடித் திரிவிக் கிரமன் சிறு புகர் படவியர்த்து ஒண் போதலர் கமலச் சிறுக் காலுரைத்து ஒன்றும் நோவாமே தண் போது கொண்ட தவிசின் மீதே தளர்நடை நடவானோ–1-7-9
பதவுரை Show / Hide
திரிவிக்கிரமன்,Thirivikraman - (தனது) மூவடியால் (உலகங்களை) அளந்தவனாகிய இவன்
வெள் புழுதி,Vel puzhudi - வெளுத்த புழுதியை
மேல் பெய்து கொண்டு,Mel peythu kondu - மேலே போகட்டுக் கொண்டு
அளைந்தது,Alaindhathu - அளைந்ததாகிய
ஓர் வேழத்தின் கரு கன்று போல்,Or vezhathin karu kanru pol - ஒரு கரிய குட்டியானை போல,
தெள் புழுதி,Thel puzhudi - தெளிவான புழுதியிலே
ஆடி,Aadi - விளையாடி
சிறு புகர் பட,Siru pugar pada - சிறிது காந்தி உண்டாக வேர்த்துப் போய்,
வியர்த்து,Viyarndhu - வேர்த்துப் போய்,
போது,Podhu - உரிய காலத்திலே
அலர்,Alar - மலர்ந்த
ஒள்,Ol - அழகிய
கமலம்,Kamalam - தாமரைப் பூவை ஒத்த
சிறு கால்,Siru kaal - சிறிய பாதங்கள்
உறைத்து,Uraithu - (ஏதெனும் ஒன்று) உறுத்த (அதனால்)
ஒன்றும் நோவாமே,Ondrum novamae - சிறிதும் நோவாதபடி
தண் போது கொண்ட,Than podhu konda - குளிர்ந்த புஷ்பங்களுடைய
தவிசின் மீது,Thavisin meedhu - மெத்தையின் மேலே
தளர்நடை நடவானோ,Thalar nadai nadavano - இளநடையை நடக்கமாட்டானோ? (நடக்கவேணும்.)