| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 96 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 11 | ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன் தன்னை தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர்நடை நடந்ததனை வேயர் புகழ் விட்டு சித்தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார் மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே–1-7-11 | ஆயர் குலத்தினில் வந்து,Aayar kulaththil vandhu - இடையர் குலத்திலே வந்து தோன்றிய,Thondriya - அவதரித்த அஞ்சனம் வண்ணன்,Anjanam vannan - மை போன்ற கருநிறமுடையனான கண்ணன் தன்னை,Thannai - தன்னை (க்கண்டு) தாயர்,Thaayar - தாய்மார்கள் மகிழ,Magizha - மனமுகக்கவும் ஒன்னார்,Onnar - சத்ருக்கள் தளர,Thalara - வருத்தமடையவும் தளர்நடை நடந்தனை,Thalar nadai nadaththana - தளர்நடை நடந்ததை வேயர்,Veyar - வேயர் குடியிலிருப்பவரெல்லாராலும் புகழ்,Pugazh - புகழப் பெற்ற விட்டு சித்தன்,Vittu siththan - பெரியாழ்வார் சீரால்,Seeraal - சிறப்பாக விரித்தன,Viridhthana - விவரித்துச் சொன்ன பாசுரங்களை உரைக்க வல்லார்,Uraikka vallaar - சொல்ல வல்லவர்கள் மாயன்,Maayan - ஆச்சர்யமான குணங்கள யுடையவனும் மணி,Mani - நீல மணி போன்ற வண்ணன்,Vannan - நிறமுடையனுமான எம்பெருமானுடைய தாள்,Thaal - திருவடிகளை பணியும்,Paniyum - வணங்க வல்ல மக்களை,Makkalai - பிள்ளைகளை பெறுவார்கள்,Peruvaarhal - அடைவார்கள். |