திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: இரண்டாம் திருவந்தாதி - தனியன் (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
தனியன் 29இரண்டாம் திருவந்தாதி - தனியன் || (என்பிறவி தீர )
திருக்குருகைப்பிரான் பிள்ளான்
என்பிறவி தீர விறைஞ்சினே னின்னமுதா அன்பே தகளியளித்தானை - நன்புகழ்சேர் சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல்மல்லைப் பூதத்தார் பொன்னங் கழல்
பதவுரை Show / Hide
In, இன் - போக்யமான
Amudha, அமுதா - அம்ருதமாக
Anbethakali, அன்பேதகளி - அன்பேதகளி என்னும் ப்ரபந்தத்தை
Alithan, அளித்தான் - க்ருபைசெய்து கொடுத்தவராய்
Nal, நல் - ஸ்லாக்யமான
Pugazh, புகழ் - கீர்த்தியை
Ser, சேர் - அடைந்திருக்கிறதுமாய்
Seethathaar, சீதத்தார் - குளிர்த்தியையுடைய
Muthukkal, முத்துக்கள் - முத்துக்களானவை
Serum, சேரும் - அடைந்திருக்கிறதுமான
Kadalmallai, கடல்மல்லை - திருக்கடல்மல்லை என்கிற திவ்யதேசத்தில் அவதரித்த
Boothaththaar, பூதத்தார் - பூதத்தாழ்வாருடைய
Ponn am, பொன்அம் - மிகவும் ஸ்ப்ருஹணீயமான
Kazhalai, கழலை - திருவடிகளை
En, என் - என்னுடைய
Piravi, பிறவி - ஸம்ஸாரம்
Theera, தீர - நசிக்கைக்காக
Irainjinen, இறைஞ்சினேன் - வணங்கினேன்