திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: உபதேச ரத்னமாலை - தனியன் (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
தனியன் 50உபதேச ரத்னமாலை - தனியன் ||
ஸ்ரீ கோயில் கந்தானை அண்ணன்
முன்னம் திருவாய்மொழிப் பிள்ளை தாம் உபதேசித்த நேர் தன்னின்படியை தணவாத சொல் மணவாள மா முனி தன்னன்புடனே செய்த யுபதேச ரத்ன மாலை தன்னைத் தன்நெஞ்சு தன்னில் தரிப்பவர் தாள்கள் சரண் நமக்கே
பதவுரை Show / Hide
முற்காலத்தில் ஸ்வ ஆசார்யரான ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை உபதேசித்து அருளின கிராமத்தை அதிக்ரமியாமல் அனுவர்த்தித்தே
பேசுமவரான ஸ்ரீ மணவாள மா முனிகள் தம்முடைய பரம கிருபையினால் செய்து அருளின ஸ்ரீ உபதேச இரத்தின மாலை என்கிற
திவ்யப் பிரபந்தத்தை தங்கள் ஹ்ருதயத்திலே -கண்ட பாடம் செய்து தரிக்கின்றவருடைய திருவடிகளே -நமக்குத் தஞ்சம் –