திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| தனியன் 35 | சிறிய திருமடல் - தனியன் || திருமங்கையாழ்வாரையும் அவரது திவ்வியாயுதத்தையும் வாழ்த்துகிறது இது. (எப்பெருமானது வைபவங்களைப் பொறாத பாவிகளைக் கண்டித்து ஒழிப்பவரும், கலி தோஷம் நீங்கும்படி உலகை வாழ்விப்பவரும், திருக்குறையலூரைத் திருவவதாரஸ்தலமாக வுடையவரும், மங்கைநகர்க்கு அரசருமான திருமங்கையாழ்வார் பல்லாண்டு பல்லாண்டாக வாழவேணும். அவரது திருக்கையிலே திகழ்வதும் எம்பெருமானை வெருட்டித் திருமந்திரோபதேசம் செய்வித்துக் கொண்டதுமான வேலும் வாழி என்றதாயிற்று) | எம்பெருமானார் வாழிபரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர் வாழ்வேந்தன் -வாழியரோ
மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன்
தூயோன் சுடர்மான வேல் | பதவுரை Show / Hideபரகாலன், parakalan - சத்ருக்களுக்கு ம்ருத்யு போன்று இருப்பவர் வாழி, vazhi - வாழ்ந்தருள வேண்டும் கலிகன்றி, kalikanri - கலியினால் வரும் தோஷத்தை போக்குபவரான வாழி, vazhi - திருமங்கையாழ்வார் வாழி குறையலூர், kuraiyalur - திருக்குறையலூரிலே வாழ், vazh - நித்யவாஸம் பண்ணும் (எம்போதும் இருக்கக்கூடிய) வேந்தன், venthan - அரசன், வேந்தன், ராஜாவானவர் வாழி, vazhi - வாழி மாயோனை, maayonai - வயலாளி மணவாளன் கண்ணன் (ஆச்சரியமான குணத்தை உடைய ஸர்வேஸ்வரன் அவனிடத்தே) வாள்வலியால், valvaliyal - தன் வாளின் வலிமையைக் காட்டி மந்திரம், mandiram - பெரிய திருமந்திரத்தை கொள், kol - உபதேசிக்கபெற்றவராய் மங்கையர், mangaiyar - திருமங்கையில் உள்ளாருக்கு கோன், kon - நிர்வாககராய் தூயேன், thuyen - உள்ளும் புறமும் ஒக்க சுத்தியையுடையவரான ஆழ்வாருடைய சுடர், sudar - ஒளியையுடைத்தாய் மானம், maanam - மிகப்பெரியதான வேல், vel - வேலானது வாழி, vazhi - வாழ்ந்திடுக |
| தனியன் 36 | சிறிய திருமடல் - தனியன் || (முள்ளிச் செழுமலரோ) | பிள்ளை திருநறையூர் அறையர் முள்ளிச் செழுமலரோ தாரான் முளை மதியம்
கொல்லிக் கென்னுள்ளங் கொதியாமே வள்ளல்
திருவாளன் சீர்க்கலியன் கார்க்கலியை வெட்டி
மருவாளன் தந்தான் மடல் | பதவுரை Show / HideSezhum, செழும் - செழிப்புள்ள Or, ஓர் - ஒப்பற்ற Mulli malar thaaran, முள்ளி மலர் தாரான் - முள்ளிப்பூக்களாலே கட்டப்பட்ட மாலையை உடையவராய் Vallal, வள்ளல் - கொடையாளியாய் Thiruvaalan, திருவாளன் - (பகவத் கைங்கர்யமாகிற) செல்வத்தையுடையராய் Maruvaalan, மருவாளன் - (கையில்) பொருந்திய வாளையுடையராய் Seer Kaliyan, சீர் கலியன் - கல்யாண குணங்களுடைய கலிகன்றியானவர் Mulai mathi am kollikku, முளை மதி அம் கொள்ளிக்கு - உதிக்கிற சந்திரனாகிற அழகிய நெருப்புக்கு En ullam, என் உள்ளம் - என்னுடைய நெஞ்சு Kothiyame, கொதியாமே - பரிதபிக்காதபடி Kaar Kaliyan, கார் கலியை - கறுத்த கலிதோஷத்தை Vetti, வெட்டி - போக்கி Madal thandhaan, மடல் தந்தான் - ‘சிறிய திருமடல்' என்னும் திவ்யப்ரபந்தத்தைத் தந்தருளினார் |