திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: திருசந்தவிருத்தம் - தனியன் (2 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
தனியன் 16திருசந்தவிருத்தம் - தனியன் || (தருச்சந்தப் பொழில்)
திருக்கச்சி நம்பிகள்
தருச்சந்தப் பொழில் தழுவு தாரணியின் துயர்தீர திருச்சந்த விருத்தம் செய் திருமழிசைப் பரன்வருமூர் கருச்சந்தும் காரகிலும் கமழ் கோங்கும் மணநாறும் திருச்சந்தத்துடன் மருவு திருமழிசை வளம்பதியே
பதவுரை Show / Hide
Tharu sandham Pozhil thazhuvu tharaniyin, தரு சந்தம் பொழில் தழுவு தாரணியின் - வ்ருக்ஷங்களினுடைய அழகையுடைய சோலைகளாலே சூழப்பட்ட பூமியிலே உள்ளவர்களுடைய
Thuyar theera, துயர் தீர - துக்கம் தீரும்படியாக
Thiruchandha virutham sei, திருச்சந்த விருத்தம் செய் - திருச்சந்த விருத்தம்' என்னும் திவ்யப்ரபந்தத்தைச் செய்தருளிய
Thirumazhisai paran varum oor, திருமழிசை பரன் வரும் ஊர் - திருமழிசைப்பிரான் திருவவதரித்த திவ்யதேசம் எதுவென்றால்
Karu sandhum, கரு சந்தும் - பெருமை பொருந்திய சந்தன மரங்களும்
Kaar akilum, கார் அகிலும் - கறுத்த அகிற்கட்டைகளும்
Kamazh kongum, கமழ் கோங்கும் - மணம் மிக்க கோங்கு மரங்களும்
Manam naarum, மணம் நாறும் - பரிமளம் வீசப் பெற்றதாய்
Thiru, திரு - பெரிய பிராட்டியார்
Sandhathudan, சந்தத்துடன் - அபிநிவேசத்தோடு
Maruvu, மருவு - பொருந்தி வாழப்பெற்றதான
Thiru mazhisai valam pathiye, திரு மழிசை வளம் பதியே - திருமழிசை என்னும் செல்வம் மிக்க திருநகரியே யாம்
தனியன் 17திருசந்தவிருத்தம் - தனியன் || (உலகும் மழிசையும்)
திருக்கச்சி நம்பிகள்
உலகும் மழிசையும் உள்ளுணர்ந்து தம்மில் புலவர் புகழ்க்கோலால் தூக்க உலகுதன்னை வைத்தெடுத்த பக்கத்தும் மாநீர் மழிசையே வைத் தெடுத்த பக்கம் வலிது
பதவுரை Show / Hide
Pulavar, புலவர் - ஸர்வஜ்ஞராகிய சதுர்முகர்
Ulagum, உலகும் - (திருமழிசை தவிர மற்ற) எல்லா உலகங்களையும்
Mazhisaiyum, மழிசையும் - திருமழிசையையும்
Thammil ul unarnthu, தம்மில் உள் உணர்ந்து - தனித்தனியே தம் நெஞ்சில் ஆராய்ந்து (விஸ்வகர்மாவை கொண்டு)
Pugazh kolaal thookka, புகழ் கோலால் தூக்க - துலாக்கோல் நாட்டி நிறுப்பிக்க
Ulagu thannai vaithu edutha pakkathum, உலகு தன்னை வைத்து எடுத்த பக்கத்தும் - உலகங்களை எல்லாம் வைத்து நிறுத்த தட்டிற்காட்டிலும்
Maa neer mazhisai vaithu edutha pakkame validhu, மா நீர் மழிசை வைத்து எடுத்த பக்கமே வலிது - சிறந்த நீர்வளம் மிக்க திருமழிசையை வைத்து நிறுத்த தட்டே வலிமிக்கதாயிருந்தது