திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| தனியன் 6 | திருப்பல்லாண்டு - தனியன் || (இது தான் திருப்பல்லாண்டுத் தனியனாயிருக்கும் . அந்தத் திருப்பல்லாண்டு பாடுகைக்கடியான பெரியாழ்வார் வைபவத் தைப் பெருக்கப் பேசி , அவரை ப்ரணிபாத நமஸ்காரம் பண்ணும்படி சொல்லுகிறது ) | ஸ்ரீ நாத முனிகள் குருமுகம் அநதீத்ய ப்ராஹ வேதான் அசேஷான்
நர பதி பரிக்லிப்தம் சுல்கம் ஆதாதுகாம
ஸ்வசுரம் அமர வந்த்யம் ரங்க நாதஸ்ய ஸாக்ஷாத்
த்விஜகுல திலகம் தம் விஷ்ணு சித்தம் நமாமி | பதவுரை Show / HideGuru Mukham,குருமுகம் - ஆசார்ய முகத்தாலே Anaditya,அநதீத்ய - அப்யசிக்காமலே Prah,ப்ராஹ - உபன்யசித்தாரோ Vedhan,வேதான் - வேதங்களை Aseshan,அசேஷான் - சமஸ்தமாகிய Nara Pathi,நர பதி - ஸ்ரீ வல்லப தேவன் என்கிற ராஜாவினால் Parikliptham,பரிக்லிப்தம் - ஏற்படுத்தப்பட்ட Sulkam,சுல்கம் - வித்யா சுல்கத்தை Adhathukama,ஆதாதுகாம - க்ரஹிப்பதற்கு ஆசை உள்ளவராய் Svasuram,ஸ்வசுரம் - மாமனாரும் Amara,அமர - தேவதைகளால் Vandhyam,வந்த்யம் - ஸ்தோத்ரம் செய்வதற்கு தக்கவரும் Ranga Nathasya,ரங்க நாதஸ்ய - ஸ்ரீ ரெங்க அதிபனுக்கு Saakshath, ஸாக்ஷாத் - பிரத்யக்ஷமாய் Dwija Kula,த்விஜகுல - ப்ராஹ்மண வம்சத்துக்கு Thilagam,திலகம் - அலங்கார பூதருமாகிய Tham Vishnu Sitham,தம் விஷ்ணு சித்தம் - அந்த பெரியாழ்வாரை Namami,நமாமி - சேவிக்கிறேன் |
| தனியன் 7 | திருப்பல்லாண்டு - தனியன் || (இதில் ஸ்ரீ வில்லி புத்தூர் பட்டர்பிரானான பெரியாழ்வார் அவதரண ஸ்தலத்தை அனுசந்திப்பார்- திருவடிகளைத் தொழுகையால் உண்டான ப்ரீதியையும்- அவர் செயலைச் சொல்லுகையால் உண்டான விரோதி நிவர்த்தியாதிகளில் த்ருப்தியையும் மனசோடே சொல்லி உலாவுகிறதாய் இருக்கிறது) | ஸ்ரீ பாண்டிய பட்டர் மின்னார் தட மதிள் சூழ் வில்லிபுத்தூர் என்று ஒரு கால்
சொன்னார் கழல் கமலம் சூடினோம் -முன்னாள்
கிழி யறுத்தான் என்று உரைத்தோம் கீழ்மையினில் சேரும்
வழி யறுத்தோம் நெஞ்சமே வந்து | பதவுரை Show / HideMin,மின் - மின்னுதல் (மணிகளால் ஒளி விடுதல்) Ar,ஆர் - நிறைந்த அதிகமான Thadam,தடம் - அகலப்பரப்பும் உயர்ந்து ஓங்குகையும் உள்ள Mathil,மதிள் - திரு மதிளாலே Soozh,சூழ் - வளைக்கப்பட்ட Villi Puthoor endru,வில்லி புத்தூர் என்று - ஸ்ரீ வில்லி புத்தூர் என்று Oru kaal sonnaar,ஒரு கால் சொன்னார் - ஒரு தரம் உச்சரிதவருடைய Kazhal Kamalam,கழல் கமலம் - திருவடித் தாமரைகளை Soodinom,சூடினோம் - விசேஷ புஷ்பமாக முடித்தோம் Munnal,முன்னாள் - புருஷார்த்தம் வெளியாக காலத்தில் Kizhi,கிழி - பொருள் முடிப்பை Aruthaan endru,அறுத்தான் என்று - அறுத்து வெளி இட்டவர் என்று Uraththom,உரைத்தோம் - சொல்லப் பெற்றோம் ஆகையால் Keezhmai,கீழ்மை - நரகத்தில் Ini,இனி - இனிமேல் Seerum,சேரும் - முன் போல் செல்லுகிற Vazhi,வழி - மார்க்கத்தை Aruththom,அறுத்தோம் - அறப் பண்ணினோம் Nenje,நெஞ்சே - மனசே Vandhu,வந்து - சம்ஸார ரஹீதராய் வந்து |
| தனியன் 8 | திருப்பல்லாண்டு - தனியன் || (இதில் பிரபந்த வக்தவான பெரியாழ்வார் திருவடிகளில் உபாய ச்வீகாரத்தை -சொல்கிறது) | ஸ்ரீ பாண்டிய பட்டர் பாண்டியன் கொண்டாட பட்டர்பிரான் வந்தான் என்று
ஈண்டிய சங்கம் எடுத்தூத -வேண்டிய
வேதங்களோதி விரைந்து கிழி யறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று | பதவுரை Show / HidePandiyan,பாண்டியன் - ஸ்ரீ வல்லப தேவன் என்கிற பாண்டிய ராஜன் Kondada,கொண்டாட - மேன்மேல் ஏத்த Pattar Piran,பட்டர்பிரான் - ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு தலைவன் Vandhaan endru,வந்தான் என்று - எழுந்து அருளினான் என்று Eendiya,ஈண்டிய - கூடின அநேகமான Sangam eduthu,சங்கம் எடுத்து - சங்குகளைக் கொண்டு Ootha,ஊத - அநேகர் சப்திக்க Vendia,வேண்டிய - அக்காலத்துக்கு ஆவஸ்யகமாகிய Vedhangal,வேதங்கள் - வேதார்தங்களை Oodhi,ஓதி - தெரியச் சொல்லி Viraindhu,விரைந்து - தாமசியாமல் Kizhi,கிழி - வித்யா சுல்கமாகிய பொருள் முடிப்பை Yaruthaan,யறுத்தான் - அறுத்தவனுடைய Paadhangal,பாதங்கள் - திருவடிகளே Yaamudaiya,யாமுடைய - நாங்கள் ஆஸ்ரயமாக உடைய Patru,பற்று - ஆதாரம் |