திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: திருப்பள்ளியெழுச்சி - தனியன் (2 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
தனியன் 19திருப்பள்ளியெழுச்சி - தனியன் || (திருமாலை ஆண்டான் தனியன்) யார் ஒரு ஆழ்வார் பர வா ஸூ தேவ மூர்த்தியான பெரிய பெருமாளை ராஜோபசார யோக்யராக நினைத்து திருப்பள்ளி யுணர்த்துமதான திவ்ய பிரபந்தத்தை அருளிச் செய்தாரோ -அப்படிப்பட்ட ஞானம் முதலிய குணங்கள் அமைந்த தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரை துதிக்கின்றேன்
திருமாலையாண்டான்
तमेव मत्वा परवासुदेव रङ्गेशयं राजत्रदर्हणीयम् । प्रावोधिक योऽकृत सूक्तिमालां भक्ताङ्किरेणुं भगवन्तमीडे ॥ தமேவ மத்வா பராஸுதேவம் ரங்கேயம் ராஜவதர்ஹணீயம் | ப்ராபோதிகீம் யோ≤க்ருத ஸூக்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே ||
பதவுரை Show / Hide
Ya, ய: - யாவரொரு ஆழ்வார்
Rajavath, ராஜவத் - அரசனைப் போல்
Arhaniyam, அர்ஹணீயம் - பூஜிக்கத்தக்கவராய்
Rangesayam, ரங்கேஸயம் - திருவரங்கத்தரவணையில் பள்ளிகொள்பவரான பெரியபெருமாளை
Thamparavasudevam eva, தம்பரவாஸுதேவம் ஏவ - அப்படிப்பட்ட ஸாக்ஷாத் பரவாஸுதேவனாகவே
Madhva, மத்வா - ப்ரதிபத்திபண்ணி
Prabodhikeem, ப்ராபோதிகீம் - திருப்பள்ளியுணர்த்துமதான
Sookthimalam, ஸூக்திமாலாம் - பாமாலையை
Akrutha, அக்ருத - அருளிச்செய்தாரோ
Tham, தம் - அப்படிப்பட்ட
Bhagavantham, பகவந்தம் - ஞானம் முதலிய குணங்கள்
Bhakthangrirenum, பக்தாங்க்ரிரேணும் - அமைந்த தொண்டரடிப்பொடியாழ் வாரை
Eede, ஈடே - துதிக்கின்றேன்
தனியன் 20திருப்பள்ளியெழுச்சி - தனியன் || (திரு அரங்க பெருமாள் அரையர் அருளி செய்தது) வண்டுகளானவை நெருங்கிப் படிந்து இருக்கப் பெற்ற காலணிகள் சூழ்ந்த அழகிய திருவரங்கத்தில் -கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாளை திருப்பள்ளி யுணர்த்துமவராய்-பரம உபகாரகராய் தொண்டர் அடிப் பொடி என்னும் திரு நாமம் உடையவரான ஆழ்வார் திருவவதரித்த தேசமாவது சிறந்த வைதிகர்கள் பொருந்தி வாழ்வதற்கு இடமான சீர்மையை யுடைய திரு மண்டங்குடி என்கிற அநாதியான நகரமாகும் என்று பெரியோர் கூறுவர்.
திருவரங்கப்பெருமாளரையர்
மண்டங் குடியென்பர் மாமறையோர் மன்னியசீர்த் தொண்ட ரடிப்பொடி தொன்னகரம்-வண்டு திணர்த்தவயல் தென்னரங்கத் தம்மானைப் பள்ளி யுணர்த்தும் பிரானுதித்த வூர்
பதவுரை Show / Hide
Vandu, வண்டு - வண்டுகளானவை
Thinartha, திணர்த்த - நெருங்கிப் படிந்திருக்கப் பெற்ற
Vayal, வயல் - கழனிகள் சூழ்ந்த
Then, தென் - அழகிய
Arangathu, அரங்கத்து - திருவரங்கத்தில் (கண்வளர்ந்தருள்கிற)
Ammanai, அம்மானை - பெரிய பெருமாளை
Palli unarthum, பள்ளி உணர்த்தும் - திருப்பள்ளியுணர்த்துமவராய்
Piran, பிரான் - பரமோபகாரகராய்
Thondaradipodi, தொண்டரடிப்பொடி - தொண்டரடிப் பொடி என்னுந் திருநாமமுடையரான ஆழ்வார்
Udhitha oor, உதித்த ஊர் - திருவவதரித்த திவ்ய தேசமானது
Maa maraiyor, மா மறையோர் - சிறந்த வைதிகர் கள்
Manniya, மன்னிய - பொருந்தி வாழத்தகுந்த
Seer, சீர் - சீர்மையையுடைய
Mandangkudi, மண்டங்குடி - திருமண்டங்குடி என்கிற
Thol nagaram, தொல் நகரம் - அநாதியான நகரமாகும்
Enbar, என்பர் - என்று பெரியோர் கூறுவர்