திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: திருப்பாவை- தனியன் (3 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
தனியன் 9திருப்பாவை- தனியன் || ஸ்ரீ நீளா தேவியின் அவதாரமான ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டியின் திருமுலைத்தடங்களாகிற மலைச்சாரலிலே சயனித்துக் கொண்டிருப்பவனும், தான் சூடிக்களைந்த மாலையாலே விலங்கிடப்பட்டுள்ளவனுமான கண்ணன் எம்பெருமானைத் திருப்பள்ளியுணர்த்தி வேதங்களின் இறுதிப்பகுதியான வேதாந்தங்களிலே தெளிவாகக் காட்டப்பட்டுள்ள தன்னுடையதான பாரதந்த்ரியத்தை (எம்பெருமானுக்கே ஆட்பட்டு இருக்கும் தன்மையை) அறிவிப்பவளாய், நிர்பந்தமாகச் சென்று அவனை அனுபவிப்பவளான ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கு இந்த நமஸ்காரமானது காலம் உள்ளவரை ஆகவேண்டும்.
பராசர பட்டர்
நீளா துங்க ஸ்தனகிரி தடீ ஸுப்தம் உத்போத்ய க்ருஷ்ணம் பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சத சிரஸ் சித்தம் அத்யாபயந்தீ | ஸ்வோசிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யாபலாத்க்ருத்ய புங்க்தே கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவாஸ்து பூய: ||
பதவுரை Show / Hide
Neelaathunga sthanagirithati suptham, நீளாதுங்க ஸ்தநகிரிதடீ ஸுப்தம் - நப்பின்னைப் பிராட்டியின் உயர்ந்த திருமுலைத் தடங்களாகிற மலைச்சாரலில் கண்வளர்ந்தருளுமவனை
Svochishtaayaam, ஸ்வோச்சிஷ்டாயாம் - தன்னால் சூடிக் களையப்பட்ட
Sraji, ஸ்ரஜி - மாலையிலே
Nigalitham, நிகளிதம் - விலங்கிடப்பட்டவனுமான
Krishnam, க்ருஷ்ணம் - கண்ணபிரானை
Udhpodhya, உத்போத்ய - திருப்பள்ளி யுணர்த்தி
Sruthi satha siras sitham, ஸ்ருதி சத சிரஸ் சித்தம் - பற்பல வேதங்களின் தலையான பாகங்களாலே தேறின (வேதாந்த ஸித்தமான)
Svam, ஸ்வம் - தன்னுடையதான
Paararthyam, பாரார்த்யம் - பாரதந்த்ரியத்தை (எம்பெருமானுக்கே ஆட்பட்டு இருக்கும் தன்மையை)
Adyaapayanthi, அத்யாபயந்தீ - அறிவியா நின்றவளாய்
Yaa palaathkruthya, யா பலாத்க்ருத்ய - எவள் அந்த பலத்தைக் கொண்டு கண்ணனை
Pungthe, புங்க்தே - (அக்கண்ணபிரானை) அநுபவிக்கிறாளோ
Godha thasyai, கோதா தஸ்யை - அப்படிப்பட்ட பெருமையை யுடையளான ஆண்டாளின்பொருட்டு
Booyo Booya Eava, பூயோபூய ஏவ - காலதத்துவ முள்ளதனையும்
Idham idham Nama, இதம் இதம் நம: - இந்த இந்த நமஸ்காரமானது
Asthu, அஸ்து - ஆயிடுக
தனியன் 10திருப்பாவை- தனியன் || அன்னங்கள் உலாவும் வயல்களையுடைய ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாள் நாச்சியார் திருப்பாவை என்னும் ப்ரபந்தத்தை அருளிச்செய்து, அதை இனிய இசையுடன் பாடி ஸ்ரீரங்கநாதனுக்கு அழகிய பாமாலையாக ஸமர்ப்பித்தாள். பூக்களால் ஆன மாலையையும் தான் முதலில் சூடி பின்பு அந்த எம்பெருமானுக்கு அதை ஸமர்ப்பித்தாள். அப்படிப்பட்ட பெருமையை உடைய ஆண்டாள் நாச்சியாரைப் பாடு
உய்யக்கொண்டார்
அன்னவயற் புதுவை ஆண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவைப் பல்பதியம் - இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை சூடிக்கொடுத்தாளைச் சொல்லு
பதவுரை Show / Hide
Annam vayal, அன்னம் வயல் - ஹம்ஸங்கள் (உலாவுகின்ற) வயல்களையுடைய
Pudhuvai, புதுவை - ஸ்ரீவில்லிபுத்தூரில் (திருவவதரித்த)
Andal, ஆண்டாள் - ஆண்டாள்' என்னுந் திருநாமத்தை யுடையளும்
Pannu, பன்னு - ஆராய்ந்து அருளிச்செய்யப்பட்ட
Thirupavai pal pathiyam, திருப்பாவை பல் பதியம் - திருப்பாவையென்னும் பல பாசுரங்களை
In isaiyaal, இன் இசையால் - இனிய இசையுடன்
Paadi, பாடி - பாடி (அவற்றை)
Arangarku, அரங்கற்கு - ஸ்ரீரங்கநாதனுக்கு
Nal paa maalai, நல் பா மாலை - விலக்ஷணமான பாமாலையாக
Koduthaal, கொடுத்தாள் - ஸமர்ப்பித்தவளும்
Poomaalai, பூமாலை - (செண்பகம் முதலிய) பூக்களினாலாகிய மாலையை
Soodi, சூடி - (தான் முந்துறக் குழலிற்) சூடி
Koduthaalai, கொடுத்தாளை - (பிறகு ரங்கநாதனுக்கு) ஸமர்ப்பித்தவளுமான கோதையை
Sol, சொல் - அநுஸந்திக்கக் கடவை
தனியன் 11திருப்பாவை- தனியன் || பூக்களால் ஆன மாலையைத் தான் சூடிப் பின்பு எம்பெருமானுக்கு ஸமர்ப்பித்த ஒளி விடும் கொடியைப் போன்றவளே! பலகாலமாக அனுஷ்டிக்கப்படும் பாவை நோன்பைத் திருப்பாவை மூலமாக அருளிச்செய்த, திருக்கைகளில் வளையல்களை அணிந்திருப்பவளே! நீ மன்மதனைக் குறித்து “என்னைத் திருவேங்கடமுடையானுக்கு ஆட்படுத்த வேண்டும்” என்று கூறியதை, நாங்கள் அவனிடத்திலே கூற வேண்டாதபடி நீயே எங்களுக்கு அருள்புரிவாயாக.
உய்யக்கொண்டார்
சூடிக்கொடுத்த சுடர்க் கொடியே! தொல்பாவை பாடியருள வல்ல பல்வளையாய் – நாடி நீ வேங்கடவற்கு என்னை விதியென்ற இம்மாற்றம் நாங்கடவா வண்ணமே நல்கு
பதவுரை Show / Hide
Soodik kodutha, சூடிக் கொடுத்த - (பூமாலையைத் திருக்குழலிற்)சூடி (அதனை எம்பெருமானுக்கு) ஸமர்ப்பித்த
Sudar kodiye, சுடர் கொடியே - தேஜோ மயமான கொடிபோன்றவளே!
Thol paavai, தொல் பாவை - அநாதி ஆசார ஸித்தமான நோன்பை
Paadi, பாடி - (திருப்பாவை முகமாகக்) கூறி
Arula valla, அருள வல்ல - (அடியார்திறத்துக்) கருணைபுரிய வல்லவளும்
Pal valaiyaai, பல் வளையாய் - பல வளைகளை அணிந்துள்ளவளுமான கோதாய்!
Nee, நீ - நீ
Naadi, நாடி - (மன்மதனை) நாடி
Ennai Vengadavar ku vidhi endra I maatram, என்னை வேங்கடவற்கு விதி என்ற இ மாற்றம் - ("காமதேவா! நீ என்னைத் திருவேங்கடமுடையானுக்கு வாழ்க்கைப் படுத்தவேணும்'' )என்று (காமனைக் குறித்துக்) கூறிய கூற்றை
Naam kadavaa vannam, நாம் கடவா வண்ணம் - யாம் மீறாதொழியுமாறு
Nalku, நல்கு - அருள்புரிவாயாக