திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: திருமாலை- தனியன் (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
தனியன் 18திருமாலை- தனியன் || (மற்றொன்றும் வேண்டா மனமே) இதில் மநஸ்ஸைக்குறித்து, பகவத் விஷயத்தில் வாசிகமாக அடிமை செய்த ஆழ்வார் திருநாமத்தை நிரந்தர அநுஸந்தாநம் பண்ணும்படி சொல்லுகிறது.
திருவரங்கப் பெருமாளறையர்
மற்றொன்றும் வேண்டா மனமே மதிளரங்கர் கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ் - உற்ற திருமாலை பாடுஞ்சீர்த் தொண்டரடிப் பொடியெம் பெருமானை யெப்பொழுதும் பேசு
பதவுரை Show / Hide
Maname, மனமே - என் நெஞ்சமே!
Madhil Arangar, மதிள் அரங்கர் - ஸப்த ப்ராகாரங்களையுடைய திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்பவரும்
Kanru inam, கன்று இனம் - பசுக்கூட்டங்களை
Meitha, மேய்த்த - மேய்த்தவருமான எம்பெருமானுடைய
Kazhal inai keezh, கழல் இணை கீழ் - இரு திருவடிகளிலும
Utra, உற்ற - ஊன்றிய பக்தியையுடையவரும்
Thirumaalai paadum, திருமாலை பாடும் - திருமாலை' என்னும் பிரபந்தத்தைப் பாடுமவரும்
Seer, சீர் - கல்யாண குணங்கள் பொருந்தியவரும்
Thondar adi podi, தொண்டர் அடி பொடி - தொண்டரடிப்பொடி என அழைக்கப்படுமவருமான
Em Perumaanai, எம் பெருமானை - எங்களுடைய ஸ்வாமியை
Epozhuthum, எப்பொழுதும் - எல்லாக்காலத்திலும்
Pesu, பேசு - அநுஸந்தித்துப்போரு
Matru ondrum, மற்று ஒன்றும் - வேறு ஒரு புருஷார்த்தமும்
Venda, வேண்டா - வேண்டுவதில்லை