திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: திருவாசிரியம் - தனியன் (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
தனியன் 33திருவாசிரியம் - தனியன் || (காசினியோர்)
அருளாளப்பெருமாள் எம்பெருமானார்
காசினியோர் தாம்வாழக் கலியுகத்தே வந்துதித்து ஆசிரியப்பா வதனாலரு மறைநூல் விரித்தானைத் தேசிகனைப் பராங்குசனைத் திகழ்வகுளத் தாரானை மாசடையா மனத்துவைத்து மறவாமல் வாழ்த்துதுமே
பதவுரை Show / Hide
Kaasiniyor thaam, காசினியோர் தாம் - பூலோகத்திலுள்ளார்
Vaazha, வாழ - உஜ்ஜீவிக்கும்படி
Kaliyugathe, கலியுகத்தே - கலியுகத்தில்
Vandhu, வந்து - (பரமபதத்தில்நின்றும்) வந்து
Udhithu, உதித்து - அவதரித்து
Aasiriyapaa athanaal, ஆசிரியப்பா அதனால் - ஆசிரியப்பா என்கிற பாக்களாலே
Aru, அரு - அறிவதற்கரிதான
Marai, மறை - வேதமாகிற
Nool, நூல் - சாஸ்த்ரத்தை
Virithaanai, விரித்தானை - விஸ்தரிக்கச் செய்தவராய்
Desikanai, தேசிகனை - ஆசார்யராய்
Thigazh, திகழ் - விளங்காநின்ற
Vagulatharanai, வகுளத்தாரானை - மகிழம்பூமாலையை அணிந்தவரான
Parangusanai, பராங்குசனை - நம்மாழ் வாரை
Maasu adaiyaa, மாசு அடையா - அஹங்கார மமகாரங்களாகிற அழுக்குச் சேராத
Manathu, மனத்து - மநஸ்ஸில்
Vaithu, வைத்து - ஸ்த்தாபித்து
Maravaamal, மறவாமல் - மறவாதபடி
Vaazhthuthum, வாழ்த்துதும் - மங்களாசாஸநம் பண்ணுவோம்