திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: திருவிருத்தம் - தனியன் (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
தனியன் 32திருவிருத்தம் - தனியன் || (கரு விருத்தக்குழி)
கிடாம்பியாச்சான்
கரு விருத்தக்குழி நீத்த பின் காமக் கடுங்குழி வீழ்ந்து ஒருவிருத்தம் புக்குழலுறுவீர்! உயிரின் பொருள்கட்கு ஒருவிருத்தம் புகுதாமல் குருகையர்கோனுரைத்த திருவிருத்தத் தோரடி கற்று இரீர் திருநாட்டகத்தே
பதவுரை Show / Hide
Karu, கரு - கர்ப்பஸ்தாநமாகிற
Virutha, விருத்த - விருத்தமான (ஹேயமான)
Kuzhi, குழி - பள்ளத்தில் நின்றும்
Neetha pin, நீத்தபின் - நழுவினபின்
Kaamam, காமம் - காமமென்கிற
Kadum, கடும் - க்ரூரமான
Kuzhi, குழி - பள்ளத்தில்
Veezhndhu, வீழ்ந்து - விழுந்து (பிறகு)
Oru virutham, ஒரு விருத்தம் - ஒரு கார்யத்திற்கும் யோக்யதையில்லாத கிழத்தனத்தை
Pukku, புக்கு - அடைந்து
Uzhaluvir, உழலுறுவீர் - திரிகிற ப்ராணிகளே
Uyirin, உயிரின் - ஜீவாத்மாவாகிற
Porulkatku, பொருள்கட்கு - வஸ்துக்களுக்கு
Oru mirutham, ஒருமிருத்தம் - ஒரு துர்நடத்தையும்
Pukuthamal, புகுதாமல் - சேராமற்படிக்கு
Kurugaiyarkon, குருகையர்கோன் - திருநகரிக்கு ஸ்வாமியான நம்மாழ்வார்
Uraitha, உரைத்த - அருளிச்செய்த
Thiruviruthathu, திருவிருத்தத்து - திருவிருத்தமென்கிற திவ்யப்ரபந்தத்தில்
Oradi, ஓரடி - ஒருபாதத்தை
Katru, கற்று - அப்யஸித்து
Thirunattakathu, திருநாட்டகத்து - ஸ்ரீவைகுண்டத்தில்
Ireer, இரீர் - (நிஸ்சிந்தராய்) இருங்கோள்