திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| தனியன் 46 | திருவெழுகூற்றிருக்கை - தனியன் || (சீரார் திருவெழுகூற்றிருக்கை) | எம்பெருமானார் சீரார் திருவெழுகூற்றிருக்கை யென்னுஞ் செந்தமிழால்
ஆராவமுதன் குடந்தைப் பிரான் தனடியிணைக்கீழ்
ஏரார் மறைப் பொருளெல்லா மெடுத்திவ்வுல குய்யவே
சேராமற் சொன்ன அருண் மாரி பாதம் துணை நமக்கே | பதவுரை Show / HideSeer, சீர் - (சப்தார்த்தங்களினுடைய) குணங்களினாலே Aar, ஆர் - நிறைந்த Thiruvezhukootrirukkai ennum, திருவெழுகூற்றிருக்கை என்னும் - திருவெழுகூற்றிருக்கை என்று ப்ரஸித்தமாய் Sem, செம் - ஸுந்தரமான Tamizhaal, தமிழால் - த்ராவிட ரூபமான திவ்ய ப்ரபந்தத்தினால் Aaraa, ஆரா - த்ருப்தி பிறவாத Amudham, அமுதம் - அம்ருதம்போல் நிரதிசய போக்யனாய் Kudanthai, குடந்தை - திருக்குடந்தையில் எழுந்தருளியிருக்கிற Piraan than, பிரான் தன் - உபகாரகனான ஸர்வேஸ்வரனுடைய Adiyinai keezh, அடியிணைக்கீழ் - ஸ்ரீபாதங்களின் கீழே (விஷயமாக) Er, ஏர் - (நிர்த்தோஷத்வமாகிற) அழகினால் Aar, ஆர் - பூர்ணமான Marai, மறை - வேதங்களினுடைய Porul ellaam, பொருள் எல்லாம் - அர்த்தங்கள் அனைத்தையும் Edutha, எடுத்த - உத்தரித்து Ivvulagu, இவ்வுலகு - இந்த லோகத்திலுள்ளார் Uyya, உய்ய - உஜ்ஜீவிக்கும்படி Soraamal, சோராமல் - (ஒன்றும்) நழுவாமல் Sonna, சொன்ன - அருளிச் செய்த Arulmaari, அருள்மாரி - திருமங்கையாழ்வாருடைய Paadham, பாதம் - திருவடிகளே Namakku, நமக்கு - நமக்கு Thunai, துணை - தஞ்சம் |