திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: நான்முகன் திருவந்தாதி - தனியன் (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
தனியன் 31நான்முகன் திருவந்தாதி - தனியன் || (நாராயணன் படைத்தான்)
ஸ்ரீராமப்பிள்ளை
நாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு ஏரார் சிவன் பிறந்தா னென்னும்சொல்- சீரார் மொழி செப்பி வாழலாம் நெஞ்சமே மொய்பூ மழிசைப் பரனடியே வாழ்த்து
பதவுரை Show / Hide
Narayanan, நாராயணன் - ஸ்ரீமந்நாராயணன்
Naanmuganai, நான்முகனை - நான்கு முகங்களையுடைய ப்ரஹ்மாவை
Padaithaan, படைத்தான் - ஸ்ருஷ்டித்தான்
Naanmuganukku, நான்முகனுக்கு - அப்பிரமனுக்கு
Er aar Sivan pirandhaan, ஏர் ஆர் சிவன் பிறந்தான் - ஸாதநாநுஷ்டாநத்தினால் பூர்ணனான சிவன் பிறந்தான்
Ennum sol, என்னும் சொல் - என்னும் இவ்வார்த்தையைச்சொல்லுவதாய்
Seer aar, சீர் ஆர் - பெருமைகள் பொருந்தப்பெற்றதான
Mozhi seppi, மொழி செப்பி - இப் பிரபந்தத்தைச் சொல்லி
Vaazhalam, வாழலாம் - வாழ்ச்சி பெறலாம்
Nenjame, நெஞ்சமே - என் நெஞ்சே!
Moi poo Mazhisai paran adiye, மொய் பூ மழிசை பரன் அடியே - பூக்கள் நிரம்பிய திருமழிசைப்பிரானுடைய திருவடிகளையே
Vaazhthu, வாழ்த்து - மங்களாசாஸனம் செய்வாயாக