திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| தனியன் 34 | பெரியதிருவந்தாதி - தனியன் || (முந்துற்ற நெஞ்சே) (முந்துற்ற நெஞ்சித்யாதி, இதுபெரிய திருவந்தாதித் தனியனாகப் பெரியோர்களாலே அநுஸந்தித்துக்கொண்டு போருமதாயிருக்கும், ஆகையால் இதுவும் அந்த ஸப்தத்தை அநுவதித்தாயிற்றிருப்பது.(முந்துற்ற நெஞ்சே முயற்றி தரித்து) 'முயற்றி சுமந்தெழுந்து முந் துற்ற நெஞ்சே'' என்றது முன்பின்னாயிருக்கிறது) | எம்பெருமானார் முந்துற்ற நெஞ்சே! முயற்றி தரித்துரைத்து
வந்தித்து வாயார வாழ்த்தியே சந்த
முருகூருஞ்சோலசூழ் மொய் பூம் பொருநல்
குருகூரன் மாறன் பேர் கூறு | பதவுரை Show / HideMundhutra nenje, முந்துற்ற நெஞ்சே - ஆழ்வாரை ஆஸ்ரவிக்க என்னைக்காட்டிலும் முன் செல்லும் மனமே Muyatri, முயற்றி - முயற்றி' என்று ஆரம்பித்துள்ள திவ்யப்ரபந்தத்தை Tharithu, தரித்து - (புத்தியிலே) தரித்து Uraithu, உரைத்து - (வாயாலே ) சொல்லி Vanthithu, வந்தித்து - (ஆழ்வாரை) வணங்கி Vazhthi, வாழ்த்தி - வாய் ஓயும் வரை மங்களாஸாஸனம் பண்ணி Murugu oorum, முருகு ஊரும் - தேன் பெருகும்படியான Sandham solai, சந்தம் சோலை - சந்தன மரங்களையுடைய சோலைகளாலே Soozh, சூழ் - குழப் பட்டதாய் Moy, மொய் - நீர் நிறைந்ததும் Poo, பூ - அழகியதுமான Porunal, பொருநல் - தாம்ரபரணி நதியையுடையதான Kuru kooran, குரு கூரன் - திருநகரிக்கு ஸ்வாமியான Maran per kooru, மாறன் பேர் கூறு - நம்மாழ்வாருடைய திருநாமத்தை அநுஸந்தித்துப் போரு |