திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: பெரிய திருமடல் - தனியன் (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
தனியன் 37பெரிய திருமடல் - தனியன் || (பொன்னுலகில் )
பிள்ளை திருநறையூர் அறையர்
பொன்னுலகில் வானவரும் பூமகளும் போற்றி செய்யும் நன்னுதலீர்! நம்பி நறையூரர் மன்னுலகில் என்னிலைமை கண்டும் இரங்காரே யாமாகில் மன்னு மடலூர் வன் வந்து
பதவுரை Show / Hide
Nal nudhalir, நல் நுதலீர் - அழகிய நெற்றியை உடையவர்களே!
Pon ulagil, பொன் உலகில் - பரமபதத்தில்
Vaanavarum, வானவரும் - நித்ய ஸூரிகளும்
Poomagalum, பூமகளும் - பெரியபிராட்டியாரும்
Pottri seyyum, போற்றி செய்யும் - திருப்பல்லாண்டு பாடும்
Nambi naraiyoorar, நம்பி நறையூரர் - பரிபூர்ணரான திருநறையூர் நம்பி
Mannu ulagil, மன்னு உலகில் - நித்யமான பூலோகத்தில்
En nilamai kandum, என் நிலைமை கண்டும் - என்னுடைய தசையைக் (துயறத்தை) கண்டபின்பும்
Irangare aamagil, இரங்காரே ஆமாகில் - கருணை புரியவில்லை யாகில்
Vanthu, வந்து - அவர் இருக்குமிடம் வந்து
Mannum madal oorvan, மன்னும் மடல் ஊர்வன் - நிலையாக மடலூரக்கடவேன்