திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: பெரிய திருமொழி - தனியன் (5 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
தனியன் 23பெரிய திருமொழி - தனியன் || கலிகன்றி என்று திருநாமம் கொண்டவர், கவிகளில் ஸூர்யன் போல் ப்ரகாசிப்பவர், அடியேன் அஞ்ஞாந இருளைத் தம் ஒளிமிக்க சொற்களால் முற்றிலும் அகற்றிய ஞானக் கதிரவனான திருமங்கை ஆழ்வாரை த்யானிக்கிறேன்
திருக்கோஷ்டியூர் நம்பி
கலயாமி கலித்வம்ஸம் கவிம் லோகதிவாகரம் யஸ்ய கோபி: ப்ரகாஸாபி ஆவித்யம் நிஹதம் தம:
பதவுரை Show / Hide
யஸ்ய, yasya - யாரொருவருடைய
ப்ரகாஸாபி, prakasapi - ஒளி படைத்ததான
கோபி, gopi - கிரணம் (சூர்யகிரணம்), இவ்விடத்தில் திருமங்கை ஆழ்வாரின் ஒளி படைத்த பாசுரங்கள்
ஆவித்யம், avidyam - அக்ஞானத்தாலே ஏற்பட்டதான, அக்ஞான ப்ரயுக்தம் (அறிவின்மையாகிற)
தம, tama - அந்தகாரம் (இருளானது), உள் இருட்டானது
நிஹதம், nihatham - போக்கபட்டதோ அப்படிபட்டவராய்
கலித்வம்ஸம், kalithvamsam - கலி தோஷத்தை போக்கக்கூடியவரான
லோக திவாகரம், loka divakaram - நாட்டாருக்கு சூரியனான
கவிம், kavim - பரகால கவியை
கலயாமி, kalayami - த்யானம் பண்ணுகிறேன் (நன்றியோடு நினைக்கிறேன்)
தனியன் 24பெரிய திருமொழி - தனியன் || திருமங்கையாழ்வாரையும் அவரது திவ்வியாயுதத்தையும் வாழ்த்துகிறது இது. (எப்பெருமானது வைபவங்களைப் பொறாத பாவிகளைக் கண்டித்து ஒழிப்பவரும், கலி தோஷம் நீங்கும்படி உலகை வாழ்விப்பவரும், திருக்குறையலூரைத் திருவவதாரஸ்தலமாக வுடையவரும், மங்கைநகர்க்கு அரசருமான திருமங்கையாழ்வார் பல்லாண்டு பல்லாண்டாக வாழவேணும். அவரது திருக்கையிலே திகழ்வதும் எம்பெருமானை வெருட்டித் திருமந்திரோபதேசம் செய்வித்துக் கொண்டதுமான வேலும் வாழி என்றதாயிற்று)
எம்பெருமானார்
வாழிபரகாலன் வாழி கலிகன்றி வாழி குறையலூர் வாழ்வேந்தன் -வாழியரோ மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன் தூயோன் சுடர்மான வேல்
பதவுரை Show / Hide
பரகாலன், parakalan - சத்ருக்களுக்கு ம்ருத்யு போன்று இருப்பவர்
வாழி, vazhi - வாழ்ந்தருள வேண்டும்
கலிகன்றி, kalikanri - கலியினால் வரும் தோஷத்தை போக்குபவரான
வாழி, vazhi - திருமங்கையாழ்வார் வாழி
குறையலூர், kuraiyalur - திருக்குறையலூரிலே
வாழ், vazh - நித்யவாஸம் பண்ணும் (எம்போதும் இருக்கக்கூடிய)
வேந்தன், venthan - அரசன், வேந்தன், ராஜாவானவர்
வாழி, vazhi - வாழி
மாயோனை, maayonai - வயலாளி மணவாளன் கண்ணன் (ஆச்சரியமான குணத்தை உடைய ஸர்வேஸ்வரன் அவனிடத்தே)
வாள்வலியால், valvaliyal - தன் வாளின் வலிமையைக் காட்டி
மந்திரம், mandiram - பெரிய திருமந்திரத்தை
கொள், kol - உபதேசிக்கபெற்றவராய்
மங்கையர், mangaiyar - திருமங்கையில் உள்ளாருக்கு
கோன், kon - நிர்வாககராய்
தூயேன், thuyen - உள்ளும் புறமும் ஒக்க சுத்தியையுடையவரான ஆழ்வாருடைய
சுடர், sudar - ஒளியையுடைத்தாய்
மானம், maanam - மிகப்பெரியதான
வேல், vel - வேலானது
வாழி, vazhi - வாழ்ந்திடுக
தனியன் 25பெரிய திருமொழி - தனியன் || திருமங்கையாழ்வாருடைய ஸ்ரீஸூக்திகளின் பெருமை சொல்லுகிறது இது (இவருடைய ஸ்ரீஸூக்திகளை ஓதி உணர்ந்தால் மனனக மலங்களெல்லாம் அற்று ஹ்ருதயம் நிர்மலமாகும்; இந்த ஸ்ரீஸூக்திகளை ஓதுமவர்களுக்கு ”அண்டமாள்வதாணை” என்றபடி பரமபதம் ஸித்தமாதலால் ஸம்ஸாரத்தை அடியறுப்பவையாம் இவை; எழுத்து, சொல், பொருள், யாப்பு, அலங்காரம் என்று தமிழ் நூல்களிற் சொல்லப்பட்டுள்ள இலக்கணங்களுக்கு இலக்கியமாம் இவை; ஸகலவேதங்களிலும் சொல்லப்பட்டுள்ள அர்த்தங்கள் இவ்வாழ்வாருடைய ஸ்ரீஸூக்திகளில் சுருங்கக் காணலாயிருக்கையாலே வேதஸாரமுமாம் இவை; இந்த ஸ்ரீஸூக்திகள் அவதரித்தபின்பு பாஹ்யகுத்ருஷ்டி மதங்களெல்லாம் மாண்டுபோயினவாதலால் பரசமயப் பஞ்சுக்கு அனலின் பொறியாம் இவை)
கூரத்தாழ்வான்
நெஞ்சுக்கிருள்கடி தீபம் அடங்காநெடும்பிறவி நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழநன்னூல் துறைகள் அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப் பஞ்சுக்கனலின்பொறி பரகாலன் பனுவல்களே!
பதவுரை Show / Hide
பரகாலன், parakalan - ப்ரதிபக்ஷத்துக்கு (வேதத்திற்கு புறம்பானது) காலானான ஆழ்வார் அருளிச்செய்த
பனுவல்கள், panuvalgal - பாட்டுக்களானவை
நெஞ்சுக்கு, nenjukku - மனதில் இருக்கிற
இருள், irul - இருட்டை, அக்ஞானத்தை
கடி, kadi - போக்கவல்ல
தீபம், deepam - விளக்காயும்
அடங்கா, adanga - எதுக்கும் அடங்காத
நெடும், nedum - நெடுகிபோகிற
பிறவி, piravi - பிறப்பாகிற
நஞ்சுக்கு, nanjukku - விஷத்துக்கு
நல்ல, nalla - உயர்ந்த
அமுதம், amudham - ச்லாக்யமான அம்ருதமாயும்
நல், nal - விலக்ஷனமான
தமிழ்நூல்துறைகள், tamizhlnoolthuraigal - திராவிட சாஸ்திர மார்க்கமான
அஞ்சுக்கு, anjukku - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி (பஞ்சுலக்ஷனம்), 5 அடையாளங்களுக்கும்
இலக்கியம், ilakkiyam - லக்ஷ்யமாயும்
ஆரணம், aaranam - வேதத்தின்
சாரம், saaram - சாரமாயும்
பரசமய, parasamaya - இதர மதங்களான
பஞ்சுக்கு, panjukku - பருத்திக்கு
அனலின்பொறி, analinpori - நெருப்புப் பொறியாக இருக்கும் பரகாலனுடைய பாசுரங்கள்
தனியன் 26பெரிய திருமொழி - தனியன் || எம்பார் என்னுமாசிரியர் எம்பெருமானார் திருவடிகளிலே வந்து வணங்கிப் பிரார்த்திக்கின்றார் ( ஸ்வாமிந்! தேவரீரையொழிய வேறுயாரும் அடியோங்களுக்குப் புகலாவாரில்லை ; தத்துவ நூல்களில் எங்களுக்கு உண்டான எவ்வளவோ ஸம்சயங்களை இதுவரையில் தேவரீர் போக்கியருளி மஹோபகாரம் செய்திருக்கிறது. அதெல்லாம் பெரிதல்ல; திருமங்கையாழ்வாருடைய திவ்யஸூக்திகளை எவ்வளவு ச்ரமப்பட்டுக் கண்டபாடஞ் செய்தாலும் மறப்பின் மிகுதியாலே தரிக்கமுடியாமல் வருந்துகிற எங்களுக்கு எப்படியாவது அந்த ஸ்ரீஸூக்திகளையெல்லாம் தரிக்கும்படியான மனவுறுதியை அருள் செய்யவேணும்)
எம்பார்
எங்கள் கதியே இராமாநுச முனியே சங்கை கெடுத்தாண்ட தவராசா ! – பொங்குபுகழ் மங்கையர்கோன் ஈந்த மறை ஆயிரம் அனைத்தும் தங்கு மனம் நீ எனக்குத் தா!
பதவுரை Show / Hide
எங்கள் கதியே, engal kathiye - எங்களுக்கு அடைக்கலமாய் இருக்குமவரே
இராமாநுச , Ramanuja - இராமாநுஜன் என்னும் திருநாமத்தையுடையவராய்
முனியே, muniye - ஆத்மாக்களின் ரக்ஷனத்தை மனனம் பண்ணுபவரே
சங்கை, sangai - வேத சாஸ்திரத்தில் இருக்கும் ஐயங்களை எல்லாம்
கெடுத்து, keduthu - போக்கி
ஆண்டு, aandu - எல்லாரையும் அடிமை கொண்டவரான
தவராசா, thavarasa - எதிராஜரே
பொங்கு, pongu - மிகுந்த
புகழ், pugazh - பெருமையுடைய
மங்கையர்கோன், mangaiyarkon - திருமங்கையில் உள்ளாருக்கு ராஜாவான திருமங்கையாழ்வார்
ஈந்த, eendha - அருளிச்செய்த
மறை, marai - வேத ரூபமான
ஆயிரம் அனைத்தும், ayiram anaithum - ஆயிரம் பாட்டாக இருக்கும் பெரிய திருமொழி பிரபந்தமும், அனைத்தும்
தங்கு மனம், thangu manam - தரித்திருக்கும்படியான மனதை
நீ எனக்கு தா, nee enakku tha - அடியேனுக்கு, தேவரீர் தந்தருள வேண்டும்
தனியன் 27பெரிய திருமொழி - தனியன் || ஸர்வேச்வரனைத் தனிவழியிலே வழிபறிக்க வேணுமென்று முயற்சி கொண்டு திருவரசடியிலே மறைந்திருந்த திருமங்கைமன்னனே!, வேற்படை யேந்திய திருக்கையாலே அடியேனுடைய பாவங்களைக் கண்டித்தொழிக்கவேணு மென்றதாயிற்று.
சோமாசியாண்டான்
மாலைத் தனியே வழி பறிக்க வேணுமென்று கோலிப்பத விருந்த கொற்றவனே! வேலை அணைத்து அருளும் கையால் அடியேன் வினையை துணித் தருள வேணும் துணிந்து
பதவுரை Show / Hide
Maalai, மாலை - சர்வேஸ்வரனான வயலாளி மணவாளனை
Thaniye vazhi, தனியே வழி - தனி வழியிலே
Parikka venum, பறிக்க வேணும் - கொள்ளையடித்துவிட வேண்டும்
Enru koli, என்று கோலி - முயன்று, ஆசைப்பட்டு
Padha virunda, பத விருந்த - (அரச மரத்தடியிலே) பதுங்கி இருந்த
Kotravane, கொற்றவனே - அரசனான திருமங்கை மன்னனே
Velai, வேலை - வேல் என்னும் ஆயுதத்தை
Anaithu arulum, அணைத்து அருளும் - அணைக்கும்படியான
Kaiyaal, கையால் - திருக்கையாலே
Adiyen, அடியேன் - சேஷபூதனான என்னுடைய
Vinaiyai, வினையை - பாபங்களை
Thunindhu, துணிந்து - துணிவையுற்று
Thunith tharula venum, துணித் தருள வேணும் - வெட்டிக் களைந்தருள வேண்டும்