திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: பொது தனியன்கள் (5 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
தனியன் 1பொது தனியன்கள் || (இப்புவியில் அரங்கேசற்கு ஈடளித்தான் வாழியே என்று மணவாள மாமுனிகளின் பெருமை பேசுகிறது. ஸ்ரீமணவாள மாமுனிகள் திருவரங்கம் பெரிய கோயிலில் ஸ்ரீரங்கநாதர் முன்பே திருவாய்மொழியின் சிறந்த வியாக்கியமான ஈடு முப்பத்தாராயிரப்படியை காலக்ஷேபம் செய்தருளினார். காலக்ஷேப சாற்றுமுறையன்று ஸ்ரீரங்கநாதர் சிறுபிள்ளை வடிவுடன் ஓடிவந்து கை கூப்பி நின்று “ஸ்ரீ சைலேச தயாபாத்ரம்” என்று தொடங்கும் இந்த தனியனை வெளியிட்டார்)
அழகியமணவாளன் (ஸ்ரீரங்கம் நம்பெருமாள்)
ஸ்ரீ சைலேச தயாபாத்ரம் தீபக்யாதி குணார்ணவம் | யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம் ||
பதவுரை Show / Hide
Sri Sailesha,ஶ்ரீசைலேச - “ஶ்ரீசைலேசர்” என்கிற ஸ்வாமி ஸ்ரீதிருவாய்மொழிப் பிள்ளையின்
Dhayapathram,தயாபாத்ரம் - எல்லையற்ற கருணைக்குப் பாத்திரமானவரும்
Theepakyaadhi,தீபக்யாதி - பக்தி, ஞானம், வைராக்யம் போன்ற
Gunarnavam,குணார்ணவம் - குணங்கள் நிறைந்த சமுத்திரம் போன்றிருப்பவரும்
Yadhinthira Pravanam,யதீந்திர ப்ரவணம் - யதிராஜரான ஸ்ரீ ராமானுஜர் மீது அளவு கடந்த பக்தி நிறைந்தவருமான
Vandhe Ramya Jamadaram Munim,வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம் - அழகிய ஸ்ரீ மணவாள மாமுனிகளை அடியேன் வணங்குகிறேன்
தனியன் 2பொது தனியன்கள் || (இதில், என் ஆசார்யர் என ஆழ்வான் இராமாநுசரை வைத்துப் பாடியுள்ளார். இதை அநுஸந்திக்கும் ஒவ்வொருவரும் தமக்குப் பஞ்ச சம்ஸ்காரம் அருளிய தத்தம் ஆசார்யரை நினைந்து துதிப்பது க்ரமமாகும்)
கூரத்தாழ்வான்
லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாதயாமுந மத்யமாம் | அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் ||
பதவுரை Show / Hide
Lakshmi Natha Samarampaam,லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் - மஹாலக்ஷ்மியின் நாதனாகிய நாராயணனைத் தொடக்கமாகவும்
Nathayaamuna Madhyamaam,நாதயாமுந மத்யமாம் - நாத முனிகள் ஆளவந்தாரை நடுவாகவும்
Asmathaacharya Paryanthaam,அஸ்மதாசார்ய பர்யந்தாம் - என் ஆசார்யனை ஈறாகவும்
Vandhe Guruparamparaam,வந்தே குருபரம்பராம் - உடைய குரு பரம்பரையை வணங்குகிறேன்
தனியன் 3பொது தனியன்கள் || (அச்யுதனின் திருவடியில் பக்தியால் மற்றெல்லாவற்றையும் புல்லாக மதித்துத் தள்ளியவரும், அடியேன் குருவும், கருணைக் கடலேபோல் வடிவெடுத்தவரும் ஆகிய பகவத் ராமானுசரை அடி பணிகிறேன்)
கூரத்தாழ்வான்
யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாயமேநே | அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ: ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||
பதவுரை Show / Hide
Yo Nithyam,யோ நித்யம் - எப்பொழுதும்
Asyudha,அச்யுத - அச்யுதனின்
Padambhuja Yukma Rukma,பதாம்புஜ யுக்ம ருக்ம - பொன் போன்ற இரண்டு திருவடித் தாமரைகளில்
Asmath Kuroor,அஸ்மத் குரோர் - அஞ்ஞானத்தை போக்குபவரே குரு
Thrunaayamene, த்ருணாயமேநே - மிகவும் அற்பமான புல்லுக்கு சமமான
Vyamohatas Tathitarani, வ்யாமோஹதஸ் ததிதராணி - எப்பொழுதும் வைத்திருக்கும் பக்தியினாலே உலகில் உள்ள மற்ற எல்லாப் பொருள்களையும்
Bhagavathosya,பகவதோஸ்ய - ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் உடையை அத்தகைய பகவானும்
Dhayaka Sindho,தயைக ஸிந்தோ - கருணைக் கடலேபோல்
Ramanujasya Charanau Charanam Prapadye,ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே - ஸ்நந்த்ய பிரஜை முலையிலே வாய் வைக்குமா போலே ஸ்வாமி திருவடிகளில் சாய்ப்பதே நமக்கு பிராப்யம்
தனியன் 4பொது தனியன்கள் || (ஸ்ரீவைஷ்ணவ சந்தானத்தின் தலைவரும், ப்ரபந்நஜன கூடஸ்தரும் மகிழ மாலை அணிந்தவரும் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ நிறைந்த திருவடிகளை உடையவரும், தாய் தந்தை மனைவி மக்கள் ஏய்ந்த பெருஞ்செல்வம் எல்லாமும் ஆனவருமான நம்மாழ்வாரை வணங்குகிறேன்)
ஸ்ரீ ஆளவந்தார்
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதி சர்வம் யதேவ நியமேன மதநவ்யாநாம் ஆத்யஸ்ய ந குலபதேர் வகுளாபி ராமம் ஸ்ரீ மத ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா
பதவுரை Show / Hide
Maatha, மாதா - உத்பத்திக்கு முன்னே வரம் கிடந்தது,பெருகைக்கு வருந்தி, பத்து மாசம் கர்ப்ப தாரணம் பண்ணி, பிரசவ வேதனையை அனுபவித்து, அஸூத்திகளையும் மதியாதே, பால்ய தசையிலே ஆதரித்து, பகவான் ஆனாலும் இவன் புருஷ பாஷணம் பண்ணப் பொறுத்து, அகல இசையாதே
அவன் பிரியத்தையே வேண்டும் - மாதாவைப் போலே உபகாரகனாய் இருக்கை

Pitha, பிதா - அவள் பாத்ர மாத்ரமாம் என்னும்படி உத்பாதகனாய் , என்றும் ஒக்க ஹித பரனான பிதாவும்
Yuvathayas, யுவதயஸ் - இருவரையும் மறந்து விரும்பும், யுவதிகளைப் போலே நெஞ்சுக்கு இனியராய் இருக்கை
Thanaya, தனயா - அவளுடைய யௌவனத்தை அழிய மாறிப் பெற்றவனாய், பால்யத்தில் ஸூககரனாய், பக்வ தசையில் ரஷகனாய், ஆமுஷ்மிகத்தில் நிரய நிஸ்தாரகனான, புத் என்னும் நரகத்தை தாண்டுவிப்பவன் – புத்ரனைப் போல் இருக்கை
Vibhoothi, விபூதி - விபவம் இல்லாத போது இவை எல்லாம் அசத் சமமாய் இருக்கையாலே, இவற்றை நன்றாக்கும் ஐஸ்வர்யம் போலே உத்தேச்யமாய் இருக்கை
Sarvam, சர்வம் - அனுக்தமான சர்வ போகங்களுமாய் இருக்கை
Yatheva, யதேவ - அவதாரணத்தால்- சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரே -என்று இருக்கும் ஆழ்வார் நினைவுக்கே
Niyamena, நியமேன - என்றும் ஒக்க அவருக்கு பிரியம் என்று போமது ஒழிய, ப்ராமாதிகமாகவும் புறம்பு போவது அன்றிக்கே இருக்கை
Madanavyanaam, மதநவ்யாநாம் - இவருக்கு முன்பு உள்ளோர்க்கும் பின்பு உள்ளோர்க்கும் -ஸ்ரீ வைஷ்ணவ சந்தானங்களுக்கு அனைவருக்கும் ஆழ்வார் திருவடிகளே சர்வஸ்வம் -என்றதாயிற்று
Aathyasya, ஆத்யஸ்ய - வைதிக சந்தானத்துக்கு பிரதம ஆசார்யராய் இருக்கை
Na Kulapather, ந குலபதேர் - ஸ்திரீக்கு பர்த்ரு குலம் போலே கோத்ர ரிஷிகளும் அவரே என்கை
Vakulaabi raamam, வகுளாபி ராமம் - திரு மகிழ மாலையாலே அலங்க்ருதமாய் உள்ளத்தை - மகிழ் அலங்காரமான திருவடிகள் (மகிழ் மாலை மார்பினன் -வகுளாபரணர்)
Sri matha, ஸ்ரீ மத - ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யோடே நித்ய சம்யுக்தமாய் இருக்கை
Thathangri yugalam, ததங்க்ரி யுகளம் - அது -என்னும் அத்தனை ஒழிய
பேசி முடிக்க ஒண்ணாது -என்கை

Yugalam, யுகளம் - சேர்த்தியால் வந்த அழகை உடைத்தாய் இருக்கை
Pranamaami moorthna, ப்ரணமாமி மூர்த்நா - ஆழ்வார் உடைய திருவடிகளை நினைத்த வாறே
நம -என்று நிற்க மாட்டாதே
அவர் திருவடிகளிலே தலை சேர்க்கிறார்
தனியன் 5பொது தனியன்கள் || நிரவதிக பகவத் பிரேம யுக்தரான ஆழ்வார்கள் பதின்மரையும் அவர்களுக்கு சேஷ பூதரான மதுரகவி யதிவரர்கள் இருவரையும் தாம் நித்ய சேவை பண்ணும் படியை அருளிச் செய்கிறார்
பராசர பட்டர்
பூதம் சரஸ்ய மஹதாஹ்வய பட்ட நாத ஸ்ரீ பக்தி சார குலசேகர யோகி வாஹான் பக்தாங்க்ரி ரேணு பரகால யதீந்திர மிஸ்ரான் ஸ்ரீ மத் பராங்குச முநிம் பிரணாதோஸ்மி நித்யம்
பதவுரை Show / Hide
Bootham, பூதம் - பூதத்தார் (பூதத்தாழ்வார்)
Sarasya, சரஸ்ய - பொய்கையார் (பொய்கையாழ்வார்)
Mahathahvaya, மஹதாஹ்வய - பேயன் (பேயாழ்வார்)
Patta naatha, பட்ட நாத - பட்டர் பிரான் (பெரியாழ்வார்)
Sri, ஸ்ரீ - ஆண்டாள்
Bhakthi saara, பக்தி சார - பக்திசாரர் (திருமழிசையாழ்வார்)
Kulasekara, குலசேகர - ஸ்ரீ குலசேகரப் பெருமாள் (குலசேகராழ்வார்)
Yogi vaahaan, யோகி வாஹான் - முனி வாஹரான பாண் பெருமாள் (திருப்பாணாழ்வார்)
Bhakthangri renu, பக்தாங்க்ரி ரேணு - தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்
Parakaala, பரகால - மருவலர் தமுடல் துணிய வாள் வீசும் பரகாலன் (திருமங்கையாழ்வார்)
Yathindra mishraan, யதீந்திர மிஸ்ரான் - எதித்தலை நாதனான எம்பெருமானார் (எதிராசர்),
மிஸ்ர சப்தம் பெரியோரைச் சொல்லுகிறதாய் - அத்தாலே சடகோபனை சிந்தை யுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவரான மதுரகவிகளை சொல்லுகிறது என்னுதல் (மதுரகவி ஆழ்வார்)

Sri math Paraangusa munim, ஸ்ரீ மத் பராங்குச முநிம் - பராங்குசர் (நம்மாழ்வார்)
Pranathosmi nithyam, பிரணாதோஸ்மி நித்யம் - நித்யம் பிரணத: அஸ்மி (தினமும் இந்த மகான்கள் உடைய சங்கத்தை வணங்குகிறேன்)