திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: முதல் திருவந்தாதி - தனியன் (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
தனியன் 28முதல் திருவந்தாதி - தனியன் || (கைதைசேர்)
முதலியாண்டான்
கைதைசேர் பூம்பொழில்சூழ் கச்சிநகர் வந்துதித்த பொய்கைப் பிரான்கவிஞர் போரேறு வையத் தடியவர்கள் வாழ வருந்தமிழ் நூற் றந்தாதி படிவிளங்கச் செய்தான் பரிந்து
பதவுரை Show / Hide
Kaithai, கைதை - தாழைகள்
Ser, சேர் - நெருங்கிவர்த்திக்கிற
Poo, பூ - அழகிய
Pozhil, பொழில் - சோலைகளாலே
Soozh, சூழ் - சூழப்பட்ட
Kachi nagar, கச்சி நகர் - காஞ்சீநகரத்தில் (திருவெஃகாவிலே)
Vandhudiththa, வந்துதித்த - (பொற்றாமரைப் பொய்கையிலே) திருவவதரித்தவராய்
Kavingar poreru, கவிஞர்போரேறு - கவி ச்ரேஷ்டராய்
Poigai piran, பொய்கைப் பிரான் - உபகாரகரான பொய்கையாழ்வார்
Vaiyathu, வையத்து - பூமியிலுள்ள
Adiyavargal, அடியவர்கள் - தாஸபூதரான ஸ்ரீவைஷ்ணவர்கள்
Vaazha, வாழ - வாழும்படிக்கீடாக
Arum, அரும் - (அர்த்த நிர்ணயம் செய்யப்புகில்) அரிதாய்
Tamizh, தமிழ் - தமிழாகையாலே ஸுலபமாய்
Nootranthaadhi, நூற்றந்தாதி - நூறுபாட்டாயிருக்கிற அந்தாதியை
Parinthu, பரிந்து - ஸ்நேஹ யுக்தராய்க்கொண்டு
Padi, படி - பூமியிலே
Vilanga seidhaan, விளங்கச்செய்தான் - ப்ரகாசமாகும்படி செய்தருளினார்