திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: மூன்றாம் திருவந்தாதி - தனியன் (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
தனியன் 30மூன்றாம் திருவந்தாதி - தனியன் || (சீராரும்மாட) (மநஸ்ஸே ! ஸம்பத்தினால் நிறைந்தும் மண்டபங்களையுடையதுமான திருக்கோவலூரென்கிற திவ்யதேசத்திற்குள் ஜலத்தினால் நிறைந்து கறுத்திருக்கிற மேகம் போன்ற திருமேனியையுடைய ஸர்வேஸ்வரனை அநுபவிக்கத் தொடங்கி ஆராய்ந்து திருக்கண்டேனென்று தொடக்கமான திருவந்தாதியை அருளிச் செய்த ஸ்ரீமானான பேயாழ்வாருடைய திருவடிகளை ஆசைப்பட்டு சொல்லுகிடாய்)
குருகை காவலப்பன்
சீராரும்மாடத் திருக்கோவலூரதனுள் காரார்கருமுகிலைக் காணப்புக்கு - ஓராத் திருக்கண்டேனென்றுரைத்த சீரான்கழலே உரைக்கண்டாய்நெஞ்சே யுகந்து
பதவுரை Show / Hide
Nenje, நெஞ்சே - எனது நெஞ்சமே!
Seer aarum maadam, சீர் ஆரும் மாடம் - அழகு பொருந்திய மாடங்களையுடைய
Thirukkovalur adhanul, திருக்கோவலூர் அதனுள் - திருக்கோவலூரில் ஓர் இடைகழியில்
Kaar aar karu mugilai, கார் ஆர் கரு முகிலை - கார்காலத்துக் கரிய மேகம் போன்ற எம்பெருமானை
Kaanapukku, காண புக்கு - ஸேவிக்கப் புகுந்து
Oraa, ஓரா - நெஞ்சென்னும் உட்கண்ணாலே அநுஸந்தித்து
Thirukkanden endru uraitha, திருக்கண்டேன் என்று உரைத்த - திருக் கண்டேன்' என்று தொடங்கி நூறுபாசுரம் அருளிச்செய்த
Seeraan, சீரான் - சீர்மை பொருந்திய பேயாழ்வாருடைய
Kazhale, கழலே - திருவடிகளையே
Ugandhu urai kandai, உகந்து உரைக்கண்டாய் - மகிழ்ந்து பேசு