| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 0 | பெரிய திருமடல் - தனியன் || (பொன்னுலகில் ) 37 | பொன்னுலகில் வானவரும் பூமகளும் போற்றி செய்யும் நன்னுதலீர்! நம்பி நறையூரர் மன்னுலகில் என்னிலைமை கண்டும் இரங்காரே யாமாகில் மன்னு மடலூர் வன் வந்து | Nal nudhalir, நல் நுதலீர் - அழகிய நெற்றியை உடையவர்களே! Pon ulagil, பொன் உலகில் - பரமபதத்தில் Vaanavarum, வானவரும் - நித்ய ஸூரிகளும் Poomagalum, பூமகளும் - பெரியபிராட்டியாரும் Pottri seyyum, போற்றி செய்யும் - திருப்பல்லாண்டு பாடும் Nambi naraiyoorar, நம்பி நறையூரர் - பரிபூர்ணரான திருநறையூர் நம்பி Mannu ulagil, மன்னு உலகில் - நித்யமான பூலோகத்தில் En nilamai kandum, என் நிலைமை கண்டும் - என்னுடைய தசையைக் (துயறத்தை) கண்டபின்பும் Irangare aamagil, இரங்காரே ஆமாகில் - கருணை புரியவில்லை யாகில் Vanthu, வந்து - அவர் இருக்குமிடம் வந்து Mannum madal oorvan, மன்னும் மடல் ஊர்வன் - நிலையாக மடலூரக்கடவேன் |
| 2674 | பெரிய திருமடல் || 1 | மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின் சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள் மன்னிய நாகத்தணை மேலோர் மா மலை போல் மின்னு மணி மகர குண்டலங்கள் வில் வீசத் துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம் என்னும் விதானத்தின் கீழால் -இரு சுடரை மன்னும் விளக்காக வேற்றி மறி கடலும் பன்னு திரைக் கவரி வீச நில மங்கை தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல் மன்னிய சேவடியை வானியங்கு தாரகை மீன் என்னும் மலர்ப் பிணைய லேய்ந்த மழைக் கூந்தல் தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும் என்னும் இவையே முலையா வடிவமைந்த அன்ன நடைய வணங்கேய் அடி இணையைத் தன்னுடைய அம் கைகளால் தான் தடவத் தான் கிடந்ததோர் உன்னிய யோகத் துறக்கம் தலைக் கொண்ட பின்னைத் தன்னாபி வலயத்துப் பேரொளி சேர் மன்னிய தாமரை மா மலர்ப் பூ பூத்தம் மலர் மேல் முன்னம் திசை முகனைத் தான் படைக்க -மற்றவனும் முன்னம் படைத்தனன் நான்மறைகள்- | மன்னிய, Manniya - வாழ்ந்திடுக (மங்களாஸாசநம்) தான், Thaan - எம்பெருமான்றான் பல்பொறி சேர் ஆயிரம் வாய் வாள் அரவின், Palpori Ser Aayiram Vaai Vaal Aravin - பல புள்ளிகளையும் ஆயிரம் வாய்களையும் ஒளியையுமுடையனான திருவனந்தாழ்வானுடைய சென்னி மணி குடுமி, Sennai Mani Kudumi - படங்களில் விளங்குகின்ற மாணிக்கங்களின் நுனிகளில் நின்றும் பரவுகின்ற தெய்வம் சுடர் நடுவுள் மன்னி, Deivam Sudar Nadhuvul Manni - திவ்யமான தேஜஸ் ஸமூ ஹத்தினிடையே பொருந்தி அ நாகத்து அணை (மேல்), A Naagathu Anai Mel - அந்தத் திருவனந்தாழ்வானாகிற சயநத்தின்மேலே துன்னிய தாரகையின் பேர் ஒளிசேர் ஆகாசம் என்னும் விதானத்தின் கீழால், Thunniya Thaarakaiyin Peer Olisher Aakaasam Ennum Vidhaanaththin Keelaal - நெருங்கிய நக்ஷத்ரங்கள் நன்கு விளங்கப்பெற்ற ஆகாசமாகிற மேற்கட்டியின் கீழே மின்னு மணி மகர குண்டலங்களவில் வீச, Minnu Mani Makara Kuntalangalavil Veesa - ரத்நங்கள் விளங்குகின்ற மகர குண்டலங்கள் பள பள வென்று ஜ்வலிக்கப் பெற்றும் இரு சுடரை மன்னும் விளக்கு ஆக ஏற்றி, Iru Sudarai Mannum Vilakku Aaga Aetri - திருவாழி திருச்சங்குகளாகிற இரண்டு தேஜஸ்ஸுகளை என்று மணையாத திரு விளக்காகப் பெற்றும் மறி கடலும் முனம் நாள் நிலம் மங்கை தன்னை அளவிட்ட தாமரைப்போல் மன்னிய சே அடியை பன்னு திரை கவிர வீச, Mari Kadhalum Munam Naal Nilam Mangai Thannai Alavitta Thaamarai Pol Manniya Se Adiyai Pannu Thirai Kavira Veesa - அலையெறிகிற ஸமுத்ர ராஜன், முன்னொருகால் பூமிப்பிராட்டியை அளந்த திருவடித் தாமரையை நோக்கி பரம்பின அலைகளாகிற சாமரங்களை வீசப்பெற்றும், 1. வான் இயங்கு தாரகை மீன் என்னும் மலர் பிணையல் எய்ந்த, 1 Vaan Iyangu Thaarakai Meen Ennum Malar Pinaiyal Eyndha - ஆகாசத்திலே யுள்ள நக்ஷத்ரங்களாகிற புஷ்ப புஞ்சங்களை அணிந்துள்ளவளாய், 2. மழை கூந்தல், 2 Mazhai Koondhal - மேகங்களாகிற கூந்தலை யுடையளாய் 3. தென்னை உயர் பொருப்பும் தெய்வம் வடமலையும் என்னும் இவையே முலை ஆ, 3 Thennai Uyar Poruppum Deivam Vadamalaiyum Ennum Ivaiye Mulai Aa - திருமாலிருஞ் சோலை மலையையும் திருவேங்கட மலையையும் முலையாகவுடையளாய், 4. வடிவு அமைந்த, 4 Vadivu Amaindha - பொருத்தமான ரூபத்தை யுடையளாய் 5. அன்னம் நடைய, 5 Annan Nadaya - அன்னத்தின் நடைபோன்ற நடையை யுடையளாய் 6. அணங்குதான், 6 Ananguthaan - தெய்வப்பெண்ணாகிய பூமிப்பிராட்டி 7. தன்னுடைய அம்கைகளால் அடி இணையை தடவ, 7 Thannudaiya Amkaigalal Adi Inaiyai Thadava - தனது அழகிய கைகளாலே திருவடிகளைப் பிடிக்கப்பெற்றும், (ஆகிய இத்தனை விபவங்களுடனே) ஓர் மா மலை போல் கிடந்து, Oru Maa Malai Pol Kidandhu - விலக்ஷணமான வொருகருமலை சாய்ந்தாற் போலே பள்ளிக்கொண்டு ஓர் உன்னிய்யோகத்து உறக்கம் தலைக்கொண்ட பின்னை, Oru Unniyyogaththu Urakkam Thalaikkonda Pinnai - விலக்ஷணமாய் ஜகத்ரக்ஷணத்தைச் சிந்திக்கிறயோக நித்திரையை மேற்கொண்ட பின்பு தன் நாபி வலயத்து, Than Naabi Valayaththu - தனது நாபீ மண்டலத்தில் பேர் ஒளி சேர் மன்னிய தாமரை மா மலர் பூத்து, Paer Oli Ser Manniya Thaamarai Maa Malar Poothu - சிறந்த ஒளி பொருந்தியதும் என்று மழியாததுமான தாமரைப்பூவைப் புஷ்பிக்கச் செய்து அ மலர் மேல், A Malar Mel - அந்தத் தாமரைப் பூவிலே முன்னம் திசை முகதனை தான் படைக்க, Munnam Thisai Mugaththai Thaan Padaikka - முதல் முதலாக நான் முகக்கடவுளை ஸ்ருஷ்டிக்க மற்றவனும், Mattravanum - அந்தப் பிரமன் முன்னம் நால் மறைகள் படைத்தணன், Munnam Naal Maraihal Padaiththan - முதலில் நான்கு வேதங்களைவெளிப்படுத்தினான் |
| 2674 | பெரிய திருமடல் || 2 | அம்மறை தான் மன்னு மறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில் நன்னெறி மேம்பட்டன நான்கு என்றே நான்கினிலும் பின்னையது பின்னைப் பெயர் தரும் என்பதோர் தொன்னெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழிலையும் என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தித் துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெஞ்சுடரோன் மன்னு மழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்- இன்னதோர் தன்மையராய் ஈங்குடலம் விட்டு எழுந்து தொன்னெறிக் கண் சென்றார் எனப் படும் சொல் அல்லால் இன்னதோர் காலத்து இனையார் இது பெற்றார் என்னவும் கேட்டு அறிவதில்லை- | அம்மறை தான், Ammairai Thaan - அந்த வேதங்களானவை மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று, Mannum Aram Porul Inbam Veedu Endru - நிலை நின்ற தருமம் அர்தம் காமம் மோக்ஷம் என்று உலகில் நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே, Ulagil Nal Nerai Maempattana Naanku Andrae - இவ்வுலகில் நல்வழியாலே சிறப்பித்துக் கூறப்படுகின்ற நான்கு புருஷார்த்தங்கள் நிறைந்திருக்கப்பெற்றவையாம். நான்கினிலும், Naankinilum - அந்த நால்வகைப் புருஷார்த்தங்களிலும் பின்னையது, Pinnaithathu - கடைசியில் சொல்லப்பட்ட மோக்ஷமானது பின்னை பெயர்தரும் என்பது, Pinnaipeyartharum Enbathu - இந்த சரீரம் தொலைந்த பிறகு உண்டாகுமென்று (சாஸ்த்ரங்களில்) சொல்லப்படுகிறது, ஓர் தொல் நெறியை, Oor Thol Neriyai - விலக்ஷணமாயும் அநாதியாயு முள்ள அந்தப் பரமபதத்தை (அல்லது, அரச்சிராதி மார்கத்தை) வேண்டுவார் தாம், Vaenduvaar Thaam - அடைய விரும்புமவர்கள் வீழ் கனியும் ஊழி இலையும் என்னும் இவையே நுகர்ந்து, Veizh Kaniyum Oozhi Ilaiyum Ennum Ivaiye Nukarndhu - தானே பழுத்து விழுந்த பழங்களையும் சருகான இலைகளையுமே தின்று உடலம் வருந்தி, Udalam Varunthi - காயக்லேசங்கள் பட்டு துன்னும் இலைக்குரம்பை துஞ்சியும், Thunnum Ilaikkurambai Thunjiyeum - நெருக்கமான பர்ணசாலை களிற்கிடந்தும் வெம் சுடரோன் மன்னும் அழல் நுகர்ந்தும், Vem Sudaroon Mannum Azhal Nukarnthum - ஸூர்யனோடு பொருந்திய வெய்யிலே பக்ஷித்தும் வண் தடத்தினுள் கிடந்தும், Van Thadaththinul Kidandhum - அழகிய தடாகங்களிலே மூழ்கிக் கிடந்தும் இன்னது ஓர் தன்மையர் ஆய், Innadhu Oor Thanmaiyar Aay - ஆக இப்படிப்பட்ட ஸ்வபாவங்களையுடையராய்க் கொண்டு ஈங்கு உடலம் விட்டு எழுந்து, Eengu Udalam Vittu Ezhundhu - இவ்வுலகில் சரீரத்தைவிட்டொழிந்து மேலே கிளம்பி தொல் நெறிக்கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால், Tol Nerikkan Senraar Enappatum Sol Allaal - திரும்பி வருதலில்லாத வொருஸ்தானத்திலே போய்சேர்ந்தார்கள் என்று சொல்வதைத் தவிர, இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார் என்னவும் கேட்டு அறிவது இல்லை, Innadhu Oru Kaalaththu Inaiyaar Ithu Petraar Ennavum Kaettu Arivathu Illai - இன்ன தினத்தில் இன்ன மநுஷ்யன் இந்த மோக்ஷத்தில் போய்ச் சேர்ந்தான் என்று விளங்கச் சொல்லக் கேட்டதே யில்லை. |
| 2674 | பெரிய திருமடல் || 3 | உளது என்னில் மன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள் அன்னதோர் இல்லியினூடு போய் வீடு என்னும் தொன்னெறிக் கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே அன்னதே பேசும் அறிவில் சிறு மனத்து ஆங்கு அன்னவரைக் கற்ப்பிப்போம் யாமே அது நிற்க ——18- | உனது என்னில், Unadhu Ennil - (அடியோடு இல்லை யென்று நான் சொல்லுகிற அந்த மோக்ஷம்) உண்டு என்கிற பக்ஷத்தில், மன்னும் கடுங் கதிரோன் மண்டலத்தின் நல் நடுவுள், Mannum Kadung Kathiron Mandalaththin Nal Naduvul - நிபிடமாயும் திக்ஷ்ணமாயுமுள்ள கிரணங்களை யுடையனான ஸூர்யனுடைய மண்டலத் தின் நட்ட நடுவே அன்னது ஓர் இல்லியின் ஊடு போய், Annadhu Oru Illiyin Oodu Poi - வாய்கொண்டு சொல்ல முடியாத அப்படிப்பட்ட ஸூக்ஷ்மமான ரந்த்ரத்தின் வழியே சென்று வீடு என்னும் தொல்நெறி கண் சென்றாரை சொல்லுமின்கள், Veedu Ennum Tolneri Kan Senraarai Solluminkal - மோக்ஷ மென்று நீங்கள் சொல்லுகிற ஒரு ஸ்தாநத்திற்குப் போய்த் திரும்பி வந்தவர்களைக் காட்டுங்கள். சொல்லாதே, Solladhe - அப்படிப்பட்டவர்களைக் காட்டமாட்டாமல் அன்னதே பேசும், Annadhe Pesum - (மோக்ஷமுண்டென்று சாஸ்த்ரத்தில் சொல்லியிருக்கிறதென்று) பழம்பாட்டையே பாடிகக்கொண்டிருக்கிற அறிவு இல் சிறுமனத்து அன்னவரை, Arivu Il Sirumanaththu Annavarai - விவேகமற்றவர்களும் சிறிய மனமுடையவர்களுமான அவர்களுக்கு கற்பிப்போம் யாமே, Karppippom Yaame - நாமோ தெளிவைப் பிறப்பிக்க வல்லோம், (அந்த அவிவேகிகளுக்கு நம்மால் தெளிவு பிறப்பிக்க வொண்ணாது) அது நிற்க, Adhu Nirka - அந்த மோக்ஷ வார்த்தை அப்படி கிடக்கட்டும். |
| 2674 | பெரிய திருமடல் || 4 | முன்ன நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன் பொன்னகரம் புக்கு அமரர் போற்றி செய்யப் பொங்கொளி சேர் கொன்னவிலும் கோளரி மாத் தான் சுமந்த கோலஞ்சேர் மன்னிய சிங்காசனத்தின் மேல் வாணெடுங்கண் கன்னியரால் இட்ட கவரிப் பொதிய விழ்ந்தாங்கு இன்னிளம் பூந்தென்றல் இயங்க மருங்கிருந்த மின்னனைய நுண் மருங்குல் மெல்லியலார் வெண் முறுவல் முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்தரும்ப அன்னவர் தம் மானோக்கம் உண்டாங்கு அணிமலர் சேர் பொன்னியல் கற்பத்தின் காடுடுத்த மாடெல்லாம் மன்னிய மந்தாராம் பூத்த மதுத் திவலை இன்னிசை வண்டு அமரும் சோலை வாய் மாலை சேர் மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடம் கண் மின்னிடை யாரோடும் விளையாடி வேண்டிடத்து மன்னு மணித்தலத்து மாணிக்க மஞ்சரியின் மின்னொளி சேர் பளிங்கு விளிம்பிடத்த மன்னும் பவளக்கால் செம்பொன் செய் மண்டபத்துள் அன்ன நடைய வரம்பையர் தங்கை வளர்த்த இன்னிசை யாழ் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில் மன்னு மழை தவழும் வாணிலா நீண் மதி தோய் மின்னொளி சேர் விசும்பூரும் மாளிகை மேல் மன்னு மணி விளக்கை மாட்டி மழைக் கண்ணார் பன்னு விசித்ரமாப் பாப்படுத்த பள்ளி மேல் துன்னிய சாலேகஞ் சூழ் கதவத் தாள் திறப்ப அன்ன முழக்க நெரிந்துக்க வாணீலச் சின்ன நறுந்தாது சூடியோர் மந்தாரம் துன்னு நறு மலரால் தோள் கொட்டிக் கற்பகத்தின் மன்னு மலர்வாய் மணி வண்டு பின் தொடர இன்னிளம் பூந்தென்றல் புகுந்தீங்கு இள முலைமேல் நன்னறும் சந்தனச் சேறுள் புலர்த்தத் தாங்க அருஞ்சீர் மின்னிடை மேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலை மேல் பொன்னரும் பாரம் புலம்ப வகம் குழைந்து ஆங்கு இன்ன வுருவின் இமையாத் தடம் கண்ணார் அன்னவர் தம் மாநோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல் இன்னமுதம் மாந்தி இருப்பர் இது வன்றே அன்ன வறத்தின் பயனாவது ஒண் பொருளும் அன்ன திறத்தே யாதலால் காமத்தின் மன்னும் வழி முறையே நிற்று நாம் – ………….. | முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற அன்னவர் தாம், Munnam Naan Sonna Araththin Vazhi Muyanra Annavar Thaam - (புருஷார்த்தங்களில்) முதலதாக நான் எடுத்துச் சொன்ன தருமத்தின் வழியிலே அநுஷ்டானஞ் செய்தவர்கள் ஆயிரம் கண் வானவர் கோன் பொன் நகரம் புக்கு, Aayiram Kan Vaanavar Kon Pon Nagaram Pukku - ஆயிரங் கண்ணுடையனான இந்திரனுடைய அழகிய லோகத்திற்சென்று சேர்ந்து அமரர் போற்றி செய்ய, Amarar Potri Seyya - தேவர்கள் வாழ்த்தப்பெற்று, பொங்கு ஒளி சேர்கொல் நவிலும் கோள் அரிமாதான் சுமந்த கோலம் சேர் மன்னிய சிங்க ஆசனத்தின் மேல், Pongu Oli Serkol Navilum Kol Arimaadhan Sumandha Kolam Ser Manniya Singa Aasanaththin Mel - மேன்மேலும் வளர்கின்ற ஒளியை யுடையதும், கொல்லுந் தொழிலிற் பழகின் வலிய சிங்கத்தால் சுமக்கப்பட்டதும், அழகியதும், பொருத்தமுடையதுமான சிங்காசனத்தின் மேலே (இருந்துகொண்டு) வாள் நெடு கண் கன்னி யரால் இட்ட, Vaal Nedu Kan Kanni Yaraal Itta - வாள் போற்கூரிய நீண்ட கண்களையுடைய கன்னிகைகளாலே வீசப்பட்ட கவரிபொதி அவிழ்ந்து இன் இள பூ தென்றல் இயங்க, In Il Poo Thendral Iyanga - இனிதாயும் மந்தமாயும் பரிமள முடையதாயுமிருக்கிற தென்றல் வந்து வீசப்பெற்று மருங்கு இருந்த மின் அனையை நுண் மருங்குல் மெல் இயலார், Marungu Irundha Min Anaiyai Nun Marungul Mel Iyalaarkal - அருகே யிருக்கிற மின்போல் ஸூக்ஷமமான இடையையுடைய மாதர்கள் வெண் முறுவல், Ven Muruvil - (தங்களுடைய) வெளுத்த பற்களாலே முன்னம் முகிழ்த்த, Munnam Mukizhttha - அபிப்பிராயத்தை ஸூசிப்பிக்கின்ற முகிழ் நிலா வந்து அரும்ப, Mugizh Nila Vandu Arumba - இளநிலாவந்து மேலே ப்ரஸிக்க அன்னவர் தம், Annavar Tham - அப்படிப்பட்ட மாதர்களுடைய மான் நோக்கம் உண்டு, Maan Nokkam Undu - மானின் நோக்குப் போன்ற நோக்கை அநுபவித்து ஆங்கு, Aangu - அவ்வளவிலே அணி மலர சேர், Ani Malara Ser - அழகிய பூக்கள் நிறைந்துள்ள பொன் இயல் கற்பகத் தின் காடு உடுத்தமாடு எல்லாம், Pon Iyala Karpagath Thin Kaadu Uduthamaadu Ellam - பொன்மயமான கற்பகக்காடுகள் நிறைந்த ப்ரதேசங்க ளெல்லாவற்றிலும் மன்னிய மந்தாரம் பூத்த மது திவலை, Manniya Mandharam Pootha Madhu Thivalai - நிலைபெற்றிருக்கிற பாரிஜாத வ்ருக்ஷங்களின் பூக்களிலுள்ள மகரந்த பிந்துக்களில் இன் இசை வண்டு அமரும் சோலை வாய், In Isai Vandu Amarum Solai Vaai - இனிய இசைகளைப்பாடுகின்ற வண்டுகள் பொருந்தி யிருக்கப்பெற்ற பூஞ்சோலைகளிலே, மாலை சேர் மன்னிய மா மயில் போல் கூந்தல், Maalai Ser Manniya Maa Mayil Pol Koondhal - புஷ்பங்களை யணிந்தும் மயில் தோகை போன்றுமிருக்கிற கூந்தலை யுடையவர்களாயும் மழை தட கண், Mazhai Thada Kan - குளிர்ந்து விசாலமான கண்களை யுடையவர்களாயும் மின் இடையாரோடும், Min Idaiyaarodum - மின்போல் நுண்ணிய இடையை யுடையவ்ர்களாயு மிருக்கிற அப்ஸரஸ் ஸ்த்ரீகளோடே வேண்டிடத்து விளையாடி, Vaendidathu Vilaiyaadi - யதேஷ்டமான இடங்களில் ரமித்து மன்னும் மணி தலத்து, Mannum Mani Thalathu - சிறந்த ரத்னங்களழுத்தின ஸ்தலங்களிலே (கட்டப்பட்டு) மாணிக்கம்மஞ்சரியின், Maanikkam Manjariyin - மாணிக்க மயமான பூங்கொத்துக்களை யுடையதும் மின்னின் ஒளி சேர்பளிங்கு விளிம்பு அடுத்த, Minnin Oli Serpalinku Vilimpu Adutha - மின்னல்போலே பளபள வென்று விளங்குகின்ற ஸ்படிகக் கற்களாலே குறடு (கொடுங்கை) கட்டப்பெற்றதும் மன்னும் பவளக்கால், Mannum Pavala Kaal - சிறந்த பவழ ஸ்தம்பங்களை யுடையதும் செம்பொன் செய், Sembon Sei - செம்பொன்னால் செய்யப்பட்டதுமான அன்னம் நடைய அரம்பையர் தம் கை வளர்த்த, Annam Nadaya Arampaiyar Tham Kai Valarttha - அன்ன நடையுடைய அப்ஸரஸ்ஸுக்களின் கை வழியாக வுண்டான இன் இசை யாழ் பாடல், In Isai Yaazh Paadal - இனிய இசையை யுடையவீணையின் பாட்டை கேட்டு இன்புற்று, Kaettu Inpu Trum - கேட்டு ஆனந்தித்தும், இரு விசும்பில் மன்னு மழை தவழும், Iru Visumbil Mannu Mazhai Thavazhum - பரந்த ஆகாசத்திலே பொருந்தி யிருக்கிற மேக மண்டலங்கள் வந்து படியப்பெற்றதும் வாள் நிலா நீள் மதி தோய், Vaal Nila Neel Mathi Thoi - அழகிய நிலவையுடைய பெரிய சந்திரன் வந்து படியப் பெற்றதும் மின்னின் ஒளி சேர், Minnin Oli Cher - மின்னலின் ஒளி போன்ற ஒளியை யுடையதும் விசும்பு ஊரும், Visumbu Oorum - ஆகாசத்தில் ஸஞ்சரிப்பதுமான மாளிகை மேல், Maaligai Mael - விமாநத்திலே மழை கண்ணார், Mazhai Kannaal - குளிர்ந்த கண்களையுடையரான மாதர்கள் மன்னு மணி விளக்கை மாட்டி, Mannu Mani Vilakkai Maatti - என்று மணையாத மணி விளக்குகளைத் தொங்கவிட்டு விசித்திரமா பாப்படுத்த, Visithiramaa Paappadutha - ஆச்சரியமாக விஸ்தாரமாய்ப் பரப்பின் பன்னு பள்ளிமேல், Pannu Pallimeel - கொண்டாடத்தக்க சயனத்தின் மீது துன்னிய சாலேகம் சூழ் கதவம் தான் திறப்ப, Thunniya Saalegam Soozh Kathavam Thaan Thirappa - நெருங்கிய சன்னல்களைச் சுற்றியுள்ள கதவுகள் திறந்துகொள்ள, இன் இள பூ தென்றல், In Ilapoo Thendral - பரமபோக்யான மந்த மாருதமானது அன்னம் உழக்க நெரிந்து உக்க வாள் நீலம் நறு சின்னதாது சூடி, Annam Uzhaikka Nerinthu Ukka Vaal Neelam Naru Chinnathathu Soodi - அன்னப்பறவைகள் மிதிப்பதனாலே நெரிந்து துகளாய்ப்போன அழகிய நீலோத்பலத்தின் மணம் மிக்க சிறிய தாதுகளைச் சூடிக்கொண்டும் ஓர் மந்தாரம் துன்னு நறு மலரால் தோள் கொட்டி, Oor Mandhaaram Thunnu Naru Malaraal Thol Kotti - சிறந்த மந்தார வ்ருக்ஷத்திலே நெருங்கியுள்ளதும் மணம் மிக்கதுமான புஷ்பங்களாலே தோள்களை அலங்காரித்துக்கொண்டும் கற்பகத்தில் மன்னுமலர் வாய் மணி வண்டு பின் தொடர, Karppagathil Mannumalar Vaai Mani Vandu Pin Thodara - கல்ப வ்ருக்ஷத்திலே பொருந்திய பூக்களிலே படிந்த அழகிய வண்டுகள் பின் தொடரப் பெற்றும் ஈங்கு புகுந்து, Eengu Pugundhu - இவர்கள் ரமிக்கு மிடங்களிலே வந்து சேர்ந்து இள முலை மேல் நல் நறு சந்தனம் சேறு உள் புலர்ந்த, Ila Mulai Mael Nal Naru Chandhanam Cheru Ula Pularntha - இளமுலைகள் மேல் பூசப்பட்ட நல்ல மணமுடைய சநதனச் சேற்றை நன்கு உலர்த்த தாங்க அரு சீர் மின் இடை மேல் கை வைத்து இருந்து, Thaanga Aru Seer Min Idai Mael Kai Vaithu Irundhu - தரிக்க முடியாத (ஸூக்ஷ்மமான) அழகிய மின் போன்ற இடுப்பின் மீது கையை வைத்துக்கொண்டிருந்து எந்து இள முலை மேல் பொன் அரும்பு ஆரம் புலம்ப, Endhu Ila Mulai Mael Pon Arumbu Aaram Pulamba - உந்நதமான இள முலை மேலே காசுமாலைகள் ஒலிக்கும்படி நிற்க ஆங்கு, Aangu - அவ்விருப்பைக் கண்டு அகம் குழைந்து, Aham Kuzhainthu - மனமுருகி இன்ன உருவின் இமையா தடங்கண்ணார் அன்னவர் தம், Inna Uruvin Imaiya Thadankannaal Annavar Tham - இப்படிப்பட்ட விலக்ஷணமான வடிவுபடைத்த தேவ மாதர்களுடைய மான் நோக்கம் உண்டு, Maan Nokkam Undu - மானின் நோக்குப் போன்ற நோக்கை அநுபவித்து ஆங்கு, Aangu - அதனோடு கூட அணி முறுவல் இன்அமுதம் மாந்தி இருப்பர், Ani Muruvai Inamudham Manthi Irupper - அழகிய புன்சிரிப்பாகிற இனிய அம்ருதத்தையும் புஜித்திருப்பர்கள் அன்ன அறத்தின் பயன் ஆவது இது அன்றே, Anna Araththin Payan Aavathu Ithu Anre - அப்படிப்பட்ட (முன்னே நான் சொன்ன) தர்ம புருஷார்த்தத்திற்குப் பலனாகப் பெறும்பேறு இதுவே யாம். ஒண் பொருளும் அன்ன திறதத்தே, On Porulum Anna Thiraththae - சிறந்த அர்த்த புருஷார்த்தத்தின் பலனும் அப்படிக்கொதத்தேயாம் ஆதலால், Aadhalal - இப்படி தர்ம அர்த்தங்களாகிய இரண்டு புருஷார்த்தங்களுக்கும் காமமே பயனாகத் தேறுவதனால் காமத்தின், Kaamaththin - அக்காம புருஷார்த்தத்தினுடைய மன்னும் வழிமுறையே, Mannum Vazhimuraye - நிலை நின்றவழியாகிய பகவத் காமமார்க்கத்திலே நாம் நிற்றும், Naam Nitrum - நாம் ஊற்றமுடையரா யிருப்போம். |
| 2674 | பெரிய திருமடல் || 5 | மானோக்கின் அன்ன நடையார் அலரேச ஆடவர் மேல் மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும் தென்னுரையில் கேட்டு அறிவது உண்டு அதனை யாம் தெளியோம் மன்னும் வட நெறியே வேண்டினோம் – | மான் நோக்கின் அன்னம் நடையார், Maan Nookkin Annan Nadaiyaar - ‘மான் போன்ற நோக்கையும் அன்னம் போன்ற நடையையுமுடைய மாதர்கள் அவர் ஏச, Avar Aesa - (உலகத்தார்) பழிதூற்றும் படி ஆடவர் மேல், Aadavar Mel - புருஷர்களின் மேலே (ஆண்களை நோக்கி) மன்னும் மடல் ஊரார் என்பது ஒர் வாசகமும், Mannum Madal Ooraar Enbathu Or Vaasagamum - மடலூரக் கூடாது“ என்று சொல்லுகிற ஒரு வாக்கியத்தை தென் உரையில் கேட்டு அறிவது உண்டு, Then Uraiyil Kaettu Arivathu Undu - தமிழ்ப் பாஷையில் கேட்டு அறிந்திருக்கிறோம். யாம் அதனை தெளியோம், Yaam Adhanai Theliyom - அந்த வாக்கியத்தைத் தெளிவுடையதாக நாம் நினைக்க மாட்டோம் (அது அஸங்கதம்) மன்னும் வடநெறியே வேண்டினோம், Mannum Vadaneriyai Vendidnom - (இவ்விஷயத்தில்) சிறந்த ஸம்ஸ்க்குத நூல்ளிற் கூறிய வழியையே கைப்பற்றுவோம். |
| 2674 | பெரிய திருமடல் || 6 | வேண்டாதார் தென்னன் பொதியில் செழும் சந்தனக் குழம்பின் அன்னதோர் தன்மை யறியாதார் ஆயன் வேய் இன்னிசை யோசைக் கிரங்கா தார் மால் விடையின் மன்னு மணி புலம்ப வாடாதார் பெண்ணை மேல் பின்னு மவ் வன்றில் பேடை வாய்ச் சிறு குரலுக்கு உன்னி யுடலுருகி நையாதார் உம்பர்வாயத் துன்னு மதி யுகுத்த தூ நிலா நீள் நெருப்பில் தம்முடலம் வேவத் தளராதார் காம வேள் மன்னும் சிலை வாய் மலர் வாளி கோத்து எய்யப் பொன்னேடு வீதி புகாதார்- | வேண்டாதார், Vendaathaar - (அப்படி ஸம்ஸ்க்ருத நூல்களில் சொல்லப்பட்டுள்ளபடி காமத்தின் அதிப்ரவ்ருத்தியை) விரும்பாதவர்கள் (எப்படிப்பட்டவர்களென்றால்) தென்னன் பொதியில் செழு சந்தனம் குழம்பின் அன்னது ஓர் தன்மை அறியாதார், Thenan Pothiyil Sezhu Sandhanam Kuzhampin Annathu Or Thanmai Ariyadhaar - பாண்டிய ராஜனது நாட்டிலுள்ள விளைகிற சந்தனத்தினாலாகிய குழம்பின் அப்படிப்பட்ட தன்மையை அறியாதவர்கள் (விரஹத்தில் ‘சந்தனம் நெருப்பு‘ என்றறியாதே அதைப் பூசிக் கொண்டு குளிர்ச்சியாயிருக்கும் ஸாஹஸிகர்களென்கிறபடி) ஆயன் வேய் இன் இசை ஓசைக்கு இரங்காதார், Aayan Vei In Isai Osaikku Irangadhaar - இடையன் ஊதுகிற புல்லாங்குழலின் இனிய கானத்வனியைக் கேட்டுத் தளராதே யிருப்பவர்கள், மால் விடையின் மன்னு மணி புலம்பவாடாதார், Maal Vidaiyin Mannu Mani Pulambavaadaadhaar - (பசுவின் மேலே) வ்யாமோஹித்து வருகிற காளையின் சிறந்த (கழுத்தின்) மணியானது ஒலி செய்ய அதனைக் கேட்டு இரங்காதே யிருப்பவர்கள், பெண்ணை மேல் பின்னும், Pennai Mel Pinnum - பனைமரத்தின் மீது ஆணோடே வாயலகு கோத்துக்கொண்டிருக்கிற அவ் அன்றில் பெடை வாய் சிறு குரலுக்கு, Av Annril Pedai Vaai Siru Kuralukku - அன்றிற் பறவையின்பேடையினது வாயில்நின்றுமுண்டாகிற அப்படிப்பட்ட சிறு குரலைக் கேட்டு உன்னி, Unni - தமது நாயக விரஹத்தை நினைத்து உம்பர் வாய், Umbar Vaai - ஆகாசத்திலே துன்னுமதி உகுந்த, Thunnumathi Ukuntha - நெருங்கிய (கிரணங்களை யுடைய) சந்திரன சொரித்த தூநிலா நீள் நெருப்பில், Thoonilaa Neel Neruppil - நிர்மலமான நிலாவகிற பெரு நெருப்பில் தம் உடலம் வேவதளராதார், Tham Udalam Vevathalaradhaarkal - தங்களுடைய சரீரம் வெந்து போம்படி சிதிலராகாதவர்கள், (இப்படிப்பட்ட அரஸிகர்கள் யாரென்னில்) காமவேள் சிலை வாய் மன்னும் மலர் வாளி கோத்து எய்ய பொன் நெடுவீதி புகாதார், Kaamavel Silai Vaai Mannum Malar Vali Koathu Eyy Ponn Neduveethi Pugadhaarkal - மன்மதன் தனது வில்லிலே பொருந்திய புஷ்ப்பாணங்களைத் தொடுத்துப் பிரயோகிக்கச் செய்தே (இனி மடலூர்வதே புருஷார்த்தமென்று கொண்டு) அழகிய பெரிய வீதிகளிலே புறப்படாதவர்கள் எவரோ, அவர்கள். |
| 2674 | பெரிய திருமடல் || 7 | தம் பூவணை மேல் சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும் இன்னிள வாடை தடவத் தாம் கண் துயிலும் பொன்னனையார் பின்னும் திரு வுறுக | தம் பூ அணைமேல், Tham Poo Anaimeel - தங்களுடைய புஷ்பசயனத்தின் மீது சின்னம் மலர் குழலும், Chinnam Malar Kuzhalum - துகள்களையுடைய புஷ்பங்களையணிந்த கூந்தலையும் அல்குலும், Alkulum - நிதம்பத்தையும் மெல் முலையும், Mel Mulaiyum - மெல்லிய முலையையும் இன் இள வாடை தடவ, In Ila Vaadai Thadava - இனிதாய் இளையதாயுள்ள வாடைக் காற்றானது வந்து தடவ கண் துயிலும், Kan Thuyilum - (ஆநந்தமாகத்) தூங்குகின்ற பொன் அளையார்தாம், Ponn Alaiyaartham - ஸ்த்ரீகளானவர்கள் பின்னும் திரு உறுக, Pinnum Thiru Uruga - மேன்மேலும் மேனியழகு மேலிட்டு விளங்கட்டும். |
| 2674 | பெரிய திருமடல் || 8 | போர் வேந்தன் தன்னுடைய தாதை பணியாலர சொழிந்து பொன்னகரம் பின்னே புலம்ப வலம் கொண்டு மன்னும் வள நாடு கை விட்டு மாதிரங்கள் மின்னுருவில் வெண் தேர் திரிந்து வெளிப்பட்டுக் கன்னிரைந்து தீய்ந்து கழை யுடைந்து கால் சுழன்று பின்னும் திரை வயிற்ருப் பேயே திரிந்து உலாவக் கொன்னவிலும் வெங்கானத்தூடு கொடும் கதிரோன் துன்னு வெயில் வறுத்த வெம் பரல் மேல் பஞ்சடியால் மன்னன் இராமன் பின் வைதேவி என்றுரைக்கும் அன்ன நடைய வணங்கு நடந்திலளே—— | போர் வேந்தன், Por Vendan - ரணாசூரனாகிய இராமன் தன்னுடைய தாதைபணியால், Thannudaiya Thathaipaniyhaal - தன் தகப்பனான சதரதனுடைய சொற்படி. அரசு ஒழிந்து, Arasu Ozhinthu - ராஜ்யமாள்வதைத்தவிர்ந்து (காட்டுக்குப் புறப்பட்டபோது) பொன் நகரம், Ponn Nagaram - அழகிய அயோத்யாபுரியிலுள்ளாரடங்கலும். பின்னே புலம்ப, Pinne Pulamba - (நீ காட்டுக்குப்போகேல் என்று) பின்னா லழுது கொண்டே வந்தபோதிலும் வெண்டர், Vendhar - என்னவேணும் வலம் கொண்டு, Valam Kondu - தான்கொண்ட உறுதியை விடாமுற்கொண்டு வளம் மன்னும் நாடு கை விட்டு, Valam Mannum Naadu Kai Vittu - செல்வம் மிகுந்த நாட்டை உபக்ஷித்துவிட்டு மாதிரங்கள் மின் உருவின் வெண்தேர் திரிந்து, Madhirangal Min Uruvin Venther Thirinthu - திக்குகள்தோறும் மின் போன்ற கானலே பரவி யிருக்கப் பெற்றதும். வெளிப்பட்டு, Velippattu - எல்லாம் சூந்ய ஸ்தலமாகவுமிருக்கப் பெற்றதும் கல் நிரைந்து தீய்ந்து கழை உடைந்து கால் சுழன்று, Kal Niraindhu Theeindhu Kazhai Udaindhu Kaal Suzhndru - கல்லுகள் நிறைந்து (புல்லுகள்) தீஞ்சு மூங்கில்கள் வெடித்து சுழல்காற்று அடித்துக்கொண்டிருக்கப்பெற்றதும் திரை வயிறு பேயேதிரிந்து உலவா, Thirai Vayiru Paeyethirinthu Ulavaa - (ஆஹாரமில்லாமையால்) மடிந்த வயிற்றேயுடைய பேய்களே திரிந்துகொண்டிருக்கப்பெற்றதும் வெம்காணத்தூடு, Vemkaanaththoodu - வெவ்விய காட்டினுள்ளே கொடு கதிரோன் துன்னு வெயில் வறுத்த வெம்பால் மேல், Kodu Kathiron Thunnu Veyil Varuththa Vembaal Mel - உஷ்ண கிரணனான ஸூர்யனுடைய வெய்யிலாலே வறுக்கப்பட்ட வெவ்வியபருக்கைக் கற்களின்மேலே (எழுந்தருளின வளவிலே) வைதேவி என்று உரைக்கும், Vaidhevi Endru Uraikkum - வைதேஹீ என்று சொல்லப்பட்டவளாய் மன்ன்ன் இராமன் பின், Mannn Raaman Pin - அந்த ஸ்ரீராம மஹாராஜன் பின்னே பஞ்சு அடியால், Panchu Adiyaal - பஞ்சுபோல் மெல்லிய திருவடிகளாலே நடந்திலளே, Nadandhilale - தானும் நடந்து செல்லவில்லையா? |
| 2674 | பெரிய திருமடல் || 9 | பின்னும் கரு நெடும் கண் செவ்வாய்ப் பிணை நோக்கின் மின்னனைய நுண் மருங்குல் வேகவதி என்றுரைக்கும் கன்னி தன் இன்னுயிராம் காதலனைக் காணாது தன்னுடைய முன் தோன்றல் கொண்டேகத் தான் சென்று அங்கு அன்னவனை நோக்கா தழித் துரப்பி வாளமருள் கன்னவில் தோள் காளையைக் கைப் பிடித்து மீண்டும் போய்ப் பொன்னவிலும் மாகம் புணர்ந்திலளே – | பின்னும், Pinnum - அது தவிரவும் கரு நெடு கண்செம் வாய் பிணை நோக்கின் மின் அனைய நுண் மருங்குல், Karun Nedu Kansem Vaai Pinai Nookkin Min Anaiya Nun Marungul - கறுத்து நீண்ட கண்களையும் சிவந்த வாயையும் மான் போன்ற நோக்கையும் மின்போல் ஸூக்ஷம்மான இடையையும் உடையவளாய் வேகவதி என்று உரைக்கும் கன்னி, Vegavathi Endru Uraikkum Kanni - வேகவதியென்று சொல்லப்படுபவளான ஒரு பெண்பிள்ளை தன் இன் உயிர் ஆம் காதலனை காணாது, Than In Uyir Aam Kaadhalanai Kaanadhu - தனது இனிய உயிர்போன்ற கணவனைத்தான் காண வொட்டாமல் தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏக, Thannudaiya Mun Thondral Kondu Eka - தனது தமையன்(தடுத்துத்) தன்னைக் கொண்டுபோக அங்கு, Angu - அவ்வவஸ்தையிலே அன்னவனை, Annavanai - அந்தத் தமையனை நோக்காது, Nookkadhu - லக்ஷியம் பண்ணாமல் தான் சென்று, Thaan Sendru - தான் பலாத்காரமாகப் புறப்பட்டுப்போய் வாள் அமருள், Vaal Amarul - பெரிய போர்க்களத்திலே கல் நவில் தோள் காளையை, Kal Navil Thol Kaalaiyai - மலைபோல் திண்ணிய தேர்களையுடையவனும் காளை போல் செருக்குற்றிருப்பவனுமான தனது காதலனை அழித்து உரப்பி, Azhiththu Urappi - இழிவான சொற்களைச் சொல்லி அதட்டி கை பிடித்து, Kai Pidiththu - பாணிக்ரஹணம் செய்து கொண்டு மீண்டும் போய், Meendum Poi - அங்கிருந்து ஸ்வஸதாநந்திலே போய்ச் சேர்ந்து பொன் நவிலும் ஆகம், Pon Navilum Aagam - (அக்காதலனுடைய) பொன் போன்ற மார்பிலே புணர்ந்திலளே, Punarndhilale - அணையப்பெற்றாளில்லையோ? |
| 2674 | பெரிய திருமடல் || 10 | பூம் கங்கை முன்னம் புனல் பரக்கும் நன்னாடன் மின்னாடும் கொன்னவிலும் நீள் வேல் குருக்கள் குலமதலை தன்னிகர் ஒன்றில்லாத வென்றித் தனஞ்சயனைப் பன்னாக ராயன் மடப்பாவை பாவை தன் மன்னிய நாண் அச்சம் மடம் என்றிவை அகலத் தன்னுடைய கொங்கை முக நெரியத் தானவன் தன் பொன்வரை யாகம் தழீ இக் கொண்டு போய்த் தனது நன்னகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும் முன்னுரையில் கேட்டு அறிவது இல்லையே – | பூ கங்கை புனல் முன்னம் பரக்கும் நல் நாடன், Poo Gangai Punal Munnam Parakkum Nal Naadan - அழகிய கங்காநதியின் தீர்த்தம் முன்னே ப்ரவஹிக்கப்பெற்ற சிறந்த நாட்டுக்குத் தலைவனும் மின் ஆடும் கொல்நவிலும் நீள்வேல், Min Aadu Kolnavilum Neelvael - ஒளியையுடையதும் கொலைத் தொழிலைக் கற்றதும் நீண்டதுமான வேலாயுத்த்தைக் கையிலே உடையவனும் குருக்கள் குலம் மிதலை, Kurukkal Kulam Mithalai - குருராஜ வம்சத்தில் தோன்றினவனும் தன் நிகர் ஒன்று இல்லாத வென்றி, Than Nigar Ondru Illadha Vendri - ஒப்பற்ற வெற்றி பொருந்தி தனஞ்சயனை, Thananjayanai - அர்ஜுநனை பன்னாகராயன் மடம் பாவை, Pannagarayan Madham Paavai - கௌரவ்ய்னென்னும் ஸர்ப்ப ராஜனுடைய பாவை தன் மன்னிய நாண் அச்சம், Paavai Than Manniya Naan Acham - ஸ்த்ரீத்வத்திற்குப் பொருந்தின நாண் மடமச்சம் முதலிய குணங்கள் நீங்கப்பெற்று தன்னுடைய கொங்கை முகம் நெரி, Thannudaiya Kongai Mugam Neri - தனது கொங்கையின் முகம் நெறிக்கப்பெற்று தான், Thaan - (வெட்கத்தை விட்டுத்) தானாகவே நயந்து, Nayandhu - ஆசைப்பட்டு அவன் தன், Avan Than - அவ்வர்ஜுநனுடைய பொன்வரை ஆகம், Ponvarai Aagam - அழகிய மலைபோன்ற மார்பை தமீஇக் கொண்டு, Thameek Kondu - ஆலிங்கனஞ் செய்துகொண்டு தனது நல் நகரம் போய் புக்கு, Thanathu Nal Nagaram Poi Pukku - தன்னுடைய தழகான ஸ்தாநத்திலே (நாகலோகத்திலே) போய்ச் சேர்ந்து இனிது வாழ்ந்ததுவும், Inidhu Vazhndhadhuvum - ஆனந்தமாக வாழ்ந்தாளென்பதையும் முன் உரையில கேட்டு அறிவது இல்லையே, Mun Urayil Kaettu Arivathu Illaiye - மஹாபாரத்தில் நீங்கள் கேட்டறிந்த்தில்லையா? |
| 2674 | பெரிய திருமடல் || 11 | சூழ் கடலுள் பொன்னகரம் செற்ற புரந்தரனோடு ஒக்கும் மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன் தன்னுடைய பாவை யுலகத்துத் தன் ஒக்கும் கன்னியரை இல்லாத காட்சியால் தன்னுடைய இன்னுயிர்த் தோழியால் எம்பெருமான் ஈன் துழாய் மன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் என்னை யிது விளைத்த ஈரிரண்டு மால் வரைத் தோள் மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டு போய் கன்னி தன் பால் வைக்க மற்று அவனோடு எத்தனையோர் மன்னிய பேரின்பம் எய்தினாள் – | சூழ் கடலுள், Sool Kadalul - பரந்த கடலினுள்ளே பொன் நகரம் செற்ற, Pon Nagaram Settra - ஹிரண்யாஸுரனுடைய நகரங்களை அழித்தவனான புரந்தரனோடு ஏர் ஒக்கும், Purandharanodu Aer Okkum - தேவேந்திரனோடு ஒத்த செல்வ முடையனான மன்னவன், Mannavan - ராஜாதி ராஜனாயும் அவுணர்க்கு வாள் வேந்தன், Avaunarkku Vaal Vendan - அசுரர்களுக்குள் பிரஸித்தனான தலைவனாயு மிருந்த உலகத்து தன் ஒக்கும் கன்னியரை இல்லாத காட்சியாள், Ulagaththu Than Okkum Kanniyaire Illadha Kaatchiyaal - எவ்வுலகத்திலும் தன்னோடு டொத்தமாதர்கள் இல்லையென்னும்படி அழகிற சிறந்தவளான உஷை யென்பவள் தன்னுடைய இன் உயிர் தோழியால், Thannudaiya In Uyir Thozhiyal - தனது ப்ராண ஸகியான சித்திரலேகை யென்பவளைக் கொண்டு ஈன் துழாய் மன்னுமணிவரை தோள் மாயவன், Een Thuzhai Mannumanivarae Thol Maayavan - போத்தியமான திருத்துழாய் மாலையணிந்த ரத்ன பர்வதம் போன்ற திருத்தோள்களையுடைய ஆச்சரிய பூதனும் பாவியேன் என்னை இது விளைத்த ஈர் இரண்டுமால் வரைதோள் மன்னவன், Paaviyen Ennai Ithu Vilaittha Eer Irandumal Viraithol Mannavan - பாவியான என்னை இப்பாடு படுத்துகின்ற பெரியமலைபோன்ற நான்கு புஜங்களையுடைய ராஜாதி ராஜனுமான எம்பெருமான் தன், Emperumaan Than - கண்ணபிரானுடைய காதலனை, Kaadhalanai - அன்புக்கு உரியவனான (பௌத்திரனான) அநிருத் தாழ்வானை மாயத்தால் கொண்டுபோய் கன்னிதன்பால் வைக்க, Maayaththal Kondaipoi Kanni Thanpaal Vaikka - (யோக வித்தைக்கு உரிய மாயத்தினால் எடுத்துக் கொண்டுவந்து தன்னிடத்தில் சேர்க்கப்பெற்று மற்றவனோடு, Mattravanodu - அந்த அநிருத்தனோடே எத்தனை ஓர் மன்னிய பேர் இன்பம் எய்தினாள், Eththanai Oor Manniya Peer Inbam Eydhinhaal - பலவிதமாய் ஒப்பற்ற அமர்ந்த பெரிய ஸுகத்தை அநுபவித்தாள். |
| 2674 | பெரிய திருமடல் || 12 | மற்றிவை தான் என்னாலே கேட்டீரே ஏழைகாள் என்னுரைக்கேன் மன்னு மலை யரையன் பொற்பாவை வாணிலா மின்னு மணி முறுவல் செவ்வாய் யுமை என்னும் அன்ன நடைய வணங்கு நுடங்கிடை சேர் பொன்னுடம்பு வாடப் புலன் ஐந்தும் நொந்த அகலத் தன்னுடைய கூழைச் சடாமாரம் தான் தரித்து ஆங்கு அன்ன வரும் தவத்தினூடு போய் ஆயிரம் தோள் மன்னு கர தலங்கள் மட்டிடித்து மாதிரங்கள் மின்னி யெரி வீச மேல் எடுத்த சூழ கழற்கால் பொன்னுலகம் எழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும் தன்னினுடனே சுழலச் சுழன்று ஆடும் கொன்னவிலும் மூவிலைக் வேற்கூத்தன் பொடியாடி அன்னவன் தன் பொன்னகலம் சென்று ஆங்கு அணைந்து இலளே பன்னி யுரைக்கும் கால் பாரதமாம்- | ஏழைகள், Ezhaigal - அவிவேகிகளை! மற்று இவை தான் என்னாலே கேட்டீரே, Mattru Ivai Thaan Ennaale Kaettire - இன்னும் இப்படிப்பட்ட உதாஹரணங்களை கேட்க விருக்கிறீர்களோ? என் உரைக்கேன், En Uraikkaen - (உங்களுக்கு) எவ்வளவு சொல்லுவேன்? (இன்னும் ஒரு உதாஹரணம் சொல்லுகிறேன் கேளுங்கள்) மன்னு மலை அரையன் பொன்பாவை, Mannu Malai Arayan Ponpavai - (சலிப்பிக்க வொண்ணாமல்) நிலைநின்ற பர்வதராஜனான ஹிமவானுடைய சிறந்த பெண்ணாய் வாள் நிலா மின்னு மணி முறுவல் செம் வாய், Vaal Nila Minnu Mani Muruvai Sem Vaai - ஒளிபொருந்திய நிலாப்போல் விளங்குகின்ற அழகிய புன்னகையையுடைய சிவந்த அதரத்தையுடையளாய் உமை என்னும், Ummai Ennum - உமா என்னும் பெயரையுடையளாய் அன்னம் நடையை அணங்கு, Annam Natai Anangu - அன்ன நடையை யுடையளான (பார்வதி யென்கிற) தெய்வப் பெண்ணானவள் தன்னுடையகூழை, Thannudaiyakuzhai - தனது மயிர் முடியை சடாபாரம் தான் தரித்து, Sadaparam Thaan Thariththu - தானே ஜடா மண்டலமாக்கித் தரித்துக்கொண்டு நுடங்கு இடைசேர்பொன் உடம்பு வாட, Nudangu Idaiserpon Udam Vada - துவண்ட இடையோடு சேர்ந்த அழகிய உடம்பு வாடவும் புலன் ஐந்தும் நொந்து அகல, Pulan Aindhum Nondhu Akala - இந்திரியங்கள் ஐந்தும் வருந்தி நீங்கவும் ஆயிரம் தோள் மன்னுகாதலங்கள் மட்டித்து, Aayiram Thol Mannukathalangal Mattithu - (சிவன் தனது) ஆயிரம் புஜங்கள் பொருந்திய கைகளை (த்திசைகளிலே) வியாபிக்கச் செய்து, மாதிரங்கள் மின்னி எரி வீச, Madhirangal Minni Eri Veesa - திக்குகள் மின்னி நெருப்புப் பொறி கிளம்பும்படியாக மேல் எடுத்த, Mel Edutha - மேற்புறமாகத் தூக்கின கழல் சூழ் கால், Kazhal Soozh Kaal - வீரக்கழலணிந்த ஒரு பாதமானது பொன் உலகம் ஏழும் கடந்து, Pon Ulagam Ezhum Kadandhu - மேலுலகங்களை யெல்லாம் அதிக்கிரமித்து உம்பர் மேல் சிலும்ப, Umbar Mel Silumba - மேலே மேலே ப்ரஸரிக்கும் படியாக (ஒற்றைக்காலை உயரத்தூக்கி) மன்னு குலம் வரையும் மாருதமும் தாரகையும் தன்னினுடைனே சுழல, Mannu Kulam Varaiyum Maruthamum Thaarakaiyum Thanninudainae Suzala - ஸ்திரமாக நிற்கிற குல பர்வதங்களும் காற்றும் நக்ஷத்திரங்களும தன்னோடு கூடவே சுழன்றுவர சுழன்று ஆடும், Suzhandru Aadu - தான் சுழன்று நர்த்தனஞ் செய்பவனும் கொல் நவிலும் மூ இலை வேல், Kol Navilum Moo Ilai Vel - கொலைத்தொழில் புரிகின்ற மூன்று இலைகளை யுடைதான சூலத்தை யுடையவனும் கூத்தன், Kooththan - கூத்தாடியென்று ப்ரஸித்தனுமான அன்னவன் தன், Annavan Than - அப்படிப்பட்ட சிவபிரானுடைய பொன் அகலம் சென்று அணைந்திலளே, Pon Akalam Sendru Anaindhilale - அழகிய மார்பைக்கிட்டி ஆலங்கனம் செய்து கொள்வில்லையா? பன்னி உரைக்குங் கால், Panni Uraikkum Kaal - (இப்படிப்பட்ட உதாஹரணங்களை இன்னும்) விஸ்தரித்துச் சொல்லுகிற பக்ஷத்தில் பாரதம் ஆம், Bharatham Aam - ஒரு மஹாபாரத மாய்தலைக்கட்டும். |
| 2674 | பெரிய திருமடல் || 13 | பாவியேற்கு என்னுறு நோய் யானுரைப்பக் கேண்மின் -இரும் பொழில் சூழ் மன்னு மறையோர் திரு நறையூர் மா மலை போல் பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும் மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும் பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின் பொன்னியல் காடார் மணி வரை மேல் பூத்தது போல் மின்னி யொளி படைப்ப வீணாணும் தோள் வளையும் மன்னிய குண்டலமும் ஆரமும் நீண் முடியும் துன்னு வெயில் விரித்த சூளா மணி யிமைப்ப மன்னு மரகதக் குன்றின் மருங்கே யோர் இன்னிள வஞ்சிக் கொடி யொன்று நின்றது தான் அன்னமாய் மானாய் அணி மயிலாய் ஆங்கிடையே மின்னாய் இளவேய் இரண்டாய் இணைச் செப்பாய் முன்னாய தொண்டையாய்க் கெண்டைக் குலம் இரண்டாய் அன்ன திருவுருவம் நின்றது அறியாதே என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும் பொன்னியலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு மன்னு மறி கடலும் ஆர்க்கும் மதி யுகுத்த இந்நிலாவின் கதிரும் என்தனக்கே வெய்தாகும் தன்னுடைய தன்மை தவிரத் தான் என்கொலோ | பாவியேற்கு என்று உறு நோய், Paaviyeerkku Endru Uru Noi - பாவியாகிய எனக்கு நேர்ந்த நோயை யான் உரைப்ப கேண்மின், Yaan Uraippa Keni - நானே சொல்லக் கேளுங்கள் (என்னவென்றால்) இரு பொழில் சூழ், Iru Pozhil Soozh - விசாலமான சோலைகள் சூழப்பெற்றதும் மறையோர் மன்னும், Maraiyore Mannum - வைதிகர்கள் வாழப்பெற்றதுமான திரு நறையூர், Thiru Naraiyoor - திருநறையூரில் மா மலைபோல பொன் இயலும் மாடம் கவாடம் கடந்து புக்கு, Maa Malaipola Pon Iyalaam Maadam Kavaadam Kadandhu Pukku - பெரிய மலைபோன்றதும் ஸ்வரண மயமுமான ஸந்நிதியின் திருக் காப்பை நீக்கிச் சென்று என்னுடைய கண்களிப்ப நோக்கினேன், Ennudaiya Kankalippa Noakkinen - எனது கண்கள் களிக்கும்படி உற்றுப்பார்த்தேன் நோக்குதலும், Noakkuthalum - பார்த்தவளவில் மன்ன்ன், Mannn - (அங்குள்ள) எம்பெருமானுடைய திரு மார்பும், Thiru Maarbum - பிராட்டியுறையும் மார்வும் வாயும், Vaayum - (புன் முறுவல் நிறைந்த) அதரமும் அடி இணையும், Adi Inaiyum - உபய பாதங்களும் பன்னு கரதலமும், Pannu Karathalum - கொண்டாடத் தக்க திருக்கைகளும் கண்களும், Kankalum - திருக்கண்களும் ஓர் மணிவரைமேல் பொன் இயல் பங்கயத்தின் காடுபூத்த்துபோல் மின்னி ஒளிபடைப்ப, Oru Manivaraimeel Pon Iyala Pankayathin Kaadupoththu Pol Minnni Olipadaippa - ஒரு நீலரத்ந பர்வத்த்தின் மேல் பொன் மயமான தாமரைக் காடு புஷ்பித்தாற்போல் பளபளத்த ஒளியை வீச, வீழ்நாணும், Veelnaanum - விரும்பத்தக்க திருவரை நாணும் தோள் வளையும், Thol Valaiyum - தோள் வளைகளும் மன்னிண குண்டலமும், Mannin Kundalamum - பொருத்தமான திருக்குண்டலங்களும் ஆரமும், Aaramum - திருமார்பில் ஹாரமும் நீள் முடியும், Neel Mudiyum - பெரிய திருவபிஷேகமும் துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப, Thunnu Veyil Viritha Soolamani Imaippa - மிக்க தேஜஸ்ஸை வெளிவிடுகின்ற முடியிற் பதித்த ரத்னமும் ப்ரகாசிக்க மன்னு மாதகக்குன்றின் மருங்கே, Mannu Maathagakundrin Marunge - எல்லார்க்கும் ஆச்ரயமான மரகதமலை யென்னும்படியான எம்பெருமான் பக்கத்திலே ஓர் இன் இள வஞ்சி கொடி ஒன்று நின்றது, Oru In Ila Vanchi Kodi Ondru Nindrathu - விலக்ஷணமாய் போக்யமாய் இளைசா யிருப்பதொரு வஞ்சிக்கொடி யென்னும் படியான பிராட்டி நின்றாள். அன்னம் ஆய், Annam Aay - (நடையில்) ஹம்ஸத்தை யொத்தும் மான் ஆய், Maan Aay - (நோக்கில்) மானையொத்தும் அணி மயில் ஆய், Ani Mayil Aay - (கூந்தலில்) அழகிய மயிலை யொத்தும் இடை மின் ஆய், Idai Min Aay - இடையழகில மின்னலை யொத்தும் இள இரண்டு வேய் ஆய், Ila Irandu Vey Aay - (தோளில்) இளைதான இரண்டு மூங்கில்களையொத்தும் இணை செப்பு ஆய், Inai Seppu Aay - (ஸ்தநத்தில்) இரண்டு கலசங்களை யொத்தும் முன் ஆய் தொண்டை ஆய், Mun Aay Thondai Aay - முன்னே தோற்றுகிற (அதரத்தில்) கொவ்வைக் கனியை யொத்தும். குலம் கொண்டை இரண்டு ஆய், Kulam Konda Irandu Aay - (கண்ணில்) சிறந்த இரண்டு கெண்டை மீன்களை யொத்தும் அன்ன, Anna - அப்படிப்பட்டிருந்த திரு உருவம், Thiru Uruvam - திவ்ய மங்கள விக்ரஹம் (பிராட்டி) நின்றது அறியாது, Nindrathu Ariyadhu - (பக்கத்தில்) நிற்கும் படியை அறியாதே (எம்பெருமான் மாத்திரமே யுளனென்று ஸேவிக்கப் புகுந்த) என்னுடைய நெஞ்சும், Ennudaiya Nenjum - எனது நெஞ்சும் அறிவும், Arivum - (அந்த நெஞ்சின் தருமமாகிய) அறிவும் இனம் வளையும், Inam Valaiyum - சிறந்த கைவளையும் பொன் இயலும் மேகலையும், Pon Iyalaim Megalaiyum - ஸ்வர்ண மயமான மேகலையும் ஒழிய போந்தேற்கு, Ozhiy Pondheerkku - (எல்லாம்) விட்டு நீங்கப்பெற்ற எனக்கு (இதற்குமேலும் ஹிம்ஸையாம்படி) மன்னு மறி கடலும் ஆர்க்கும், Mannu Mari Kadhalum Aarkkum - சலியாததும் மடிந்து அலையெறிவதுமான கடலும் கோஷம் செய்யா நின்றது மதி உகுத்த இன் நிலாவின் கதிகும், Madhi Uguththa In Nilavin Kathikum - சந்திரன் வெளியிடுகின்ற இனிய நிலாவின் ஒளியும் என் தனக்கே, En Thanakke - எனக்கு மாத்திரம் வெய்து ஆகும், Veithu Aakum - தீக்ஷ்ணமாயிரா நின்றது, தன்னுடைய தன்மை தவிர தான் என்கொல், Thannudaiya Thanmai Thavira Thaan Enkol - நிலாவின் ஸ்வபாவமாகிய குளிர்த்தி தவிர்ந்து இப்படி வெப்பமாம்படி எம்பெருமான்றான் ஏதாவது செய்துவிட்டானோ. |
| 2674 | பெரிய திருமடல் || 14 | தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அலைந்து மன்னி இவ் யுலகை மனம் களிப்ப வந்து இயங்கும் இந்நிலம் பூம் தென்றலும் வீசும் எரி எனக்கே முன்னிய பெண்ணை மேல் முள் முளரிக் கூட்டகத்துப் பின்னும் அவ்வன்றில் பெடைவாய்ச் சிறு குரலும் என்னுடைய நெஞ்சுக்கோர் ஈர் வாளாம் என் செய்கேன் | தென்னன் பொதியில், Thennann Pothiyil - தென் திசைக்கு தலைவனான பாண்டிய ராஜனது மலையமலையிலுள்ள செமு சந்திரன் தா துஅளைந்து, Semum Chandiran Thaa Thuhalaindhu - அழகிய சந்தந மரத்தின் பூந்தாதுகளை அளைந்து கொண்டு மன் இ உலகை மனம் களிப்ப வந்து இயங்கும், Man I Ulagai Manam Kalippa Vandu Iyankum - நித்யமான இந்த லோகத்திலுள்ளவர்கள் மனம் மகிழும்படி வந்து உலவுகின்ற இன் இள பூ தென்றலும், In Ilapoo Thendralum - போக்யமாய் அழகான இளந்தென்றற் காற்றும் எனக்கே எரி வீசும், Enakke Eri Veesum - எனக்கு மாத்திரம் அழலை வீசுகின்றது முன்னிய பெண்ணை மேல், Munniya Pennai Mel - முன்னே காணப்படுகிற பனை மரத்தில் முள் முளரி கூடு அகத்து, Mul Mulari Koodu Akaththu - முள்ளையுடைய தாமரைத் தண்டினால் செய்யப்பட்ட கூட்டிலே பின்னும்அவ் அன்றில் பெடை வாய் சிறு குரலும், Pinnumav Anril Pedai Vaai Siru Kuralum - வாயலகு கோத்துக் கொண்டிருக்கிற அன்றிற் பேடையின் வாயிலுண்டான சிறிய குரலும் என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாள் ஆம், Ennudaiya Nenjukku Oru Eer Vaal Aam - எனது நெஞ்சை அறுக்கின்ற வொரு வாளாக இராநின்றது. என் செய்கேன், En Seigken - (தப்பிப் பிழைக்க) என்ன உபாயஞ் செய்வேன்? |
| 2674 | பெரிய திருமடல் || 15 | கன்னவில் தோள் காமன் கறுப்புச் சிலை வளையக் கொன்னவிலும் பூம் கணைகள் கோத்துப் பொத வணைந்து தன்னுடைய தோள் கழிய வாங்கித் தமியேன் மேல் என்னுடைய நெஞ்சே இலக்காக வெய்கின்றான் பின்னிதனைக் காப்பீர் தான் இல்லையே- | கல் நவில் தோள் காமன், Kal Navil Thol Kaaman - மலைபோல் (திண்ணிய) தோள்களை யுடையனான மன்மதன் கரும்பு சிலை வளைய, Karumbu Silai Valaiya - (தனது) கருப்பு வில்லை வளைத்து கொல் நவிலும் பூ கணைகள் கோத்து, Kol Navilum Poo Kanigal Koathu - (அந்த வில்லில்) கொலை செய்ய வல்ல புஷ்ப பாணங்களைத் தொடுத்து பொத அணைந்து, Potha Anaindhu - (அந்த வில்லை மார்பிலே) அழுந்த அணைத்துக்கொண்டு) தன்னுடைய தோள் கழிய வாங்கி, Thannudaiya Thol Kazhiya Vaangi - தனது தோள் வரையில் நீள இழுத்து என்னுடைய நெஞ்சே இலக்கு ஆக தமியேன் மேல் எயகின்றான், Ennudaiya Nenchae Ilakku Aaga Thamiyen Mel Eyakindraan - எனது நெஞ்சையே குறியாகக் கொண்டு துணையற்ற என்மீது (அந்த அம்புகளைப் பிரயோகிக்கின்றான். பின் இதனை காப்பீர்தான் இல்லையே, Pin Idhanai Kaappeerthaan Illaiye - இப்போது இந்த ஆபத்தில் நின்றும் என்னைத் தப்புவிக்க வல்லீரில்லையே! |
| 2674 | பெரிய திருமடல் || 16 | பேதையேன் கன்னவிலும் காட்டகத்தோர் வல்லிக் கடி மலரின் நன்னறு வாஸம் மற்று ஆரானும் எய்தாமே மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல் என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும் மன்னு மலர் மங்கை மைந்தன் கணபுரத்துப் பொன்மலை போல் நின்றவன் தன் பொன்னகலம் தோயாவேல் என்னிவைதான் வாளா வெனக்கே பொறையாகி முன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர் மன்னு மருந்து அறிவீர் இல்லையே – | கல் நவிலும் காடு அகத்து, Kal Navilum Kaadu Agathu - கல் மயமான காட்டினுள்ளே ஓர் வல்லி, Oru Valli - ஒரு கொடியில் (புஷ்பித்த) கடி மலரின், Kadi Malarin - புதுமலரினுடைய நல் நறு வாசம், Nal Naru Vaasam - நல்ல பரிமளம் மற்று ஆரானும் எய்தாமே, Mattru Aaraanum Eythaame - யார்க்கும் உபயோகப் படாமல் மன்னும் வறு நிலத்து ஆங்குவாளா உகுத்த்து போல், Mannum Varu Nilathu Aanguvaalaa Ukutthu Pol - அந்தசூன்ய ஸ்தலத்திலே வீணாகக் கழிவது போல் பேதையேன் என்னுடைய பெண்மையும், Paethaiyen Ennudaiya Penmaiyum - அறிவற்றவளான என்னுடைய ஸ்த்ரீத்வமும் என் நலனும், En Nalanum - எது குணங்களும் என் முலையும், En Mulaiyum - எனது முலைகளும் மலர் மங்கை மன்னும் மைந்தன், Malar Mangai Mannum Maindan - பூவிற் பிறந்த பெரிய பிராட்டியோடு சேர்ந்த பிரமபுருஷனாயும் கணபுரத்து பொன்மலை போல் நின்றவன் தன், Kanapurathu Ponmalai Pol Nindravan Than - திருகண்ணபுரத்தில் பொன் மலைபோல் நிற்பவனாயுமுள்ள எம்பெருமானுடைய பொன் அகலம் தோயா எல், Pon Akalam Thoayaa El - அழகிய திருமார்பிலே சேர்வதற்கு உறுப்பாகாவிடில் வாளா இவை என், Vaalaiya Ivai En - வயாத்தமான இந்த வஸ்துக்கள் எதுக்கு? (இவை), Ivai - இம்முலைகளானவை எனக்கே பொறை ஆகி, Enakke Porai Aagi - எனக்கு ஒருத்திக்கே வீண்பாரமாகி முன் இருந்து, Mun Irundhu - கண்ணெதிரே இருந்து கொண்டு மூக்கின்று, Mookkinru - மேன்மேலும் வீங்கும்போது மூவாமை காப்பது, Moovamai Kaappathu - அப்படி வீங்காமல் தடுக்க வல்ல ஓர் மன்னு மருந்து அறிவீர் இல்லையே, Oru Mannu Marundhu Ariveer Illaiye - ஒரு சிறந்த மருந்து கண்டறிவாராருமில்லையே. |
| 2674 | பெரிய திருமடல் || 17 | மால் விடையின் துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன்தொடரால் கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு மாலை வாய்த் தன்னுடைய நா வொழியாதுஆடும் தனி மணியின் இன்னிசை ஓசையும் வந்து என் செவி தனக்கே கொன்னவிலும் எக்கில் கொடிதே நெடிதாகும் என்னிதனைக் காக்குமா சொல்லீர்- | மால் விடையின், Maal Vidaiyin - (பசுவின்மேல்) வியாமோஹங்கொண்ட வ்ருஷபங்களினுடைய துன்னு பிடர் எருத்து, Thunnu Pidar Eruthu - பெருத்த பிடரியிலுள்ள முசுப்பிலே தூக்குண்டு, Thookkundu - தூக்கப்பட்டு கன்னியர் கண் மிளிர, Kanniyar Kan Milira - சிறுப்பெண்களின் கண் களிக்கும்படி வன் தொடரால் கட்டுண்டு, Van Thodaraal Kattundu - வலிதான கயிற்றாலே கட்டப்பட்டு மாலை வாய், Maalaivai - ஸாயம் ஸந்தியா காலத்தில் இன் இசை ஓசையும் வந்து, In Isai Osaikum Vandu - இனிதான இசையின் ஒலியும் வந்து தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின், Thannudaiya Naa Ozhiyadhu Aadu Thani Maniyin - தனது நாக்கு ஓயாமல் ஆடிக்கொண்டிருக்கப் பறெற சிறந்த மணியினுடைய என் செவி தனக்கே, En Sevi Thanakke - என்னுடைய காதுக்கு மாத்திரம் கொல் நவிலும் எஃகில் கொடிது ஆய் நெடிது ஆகும், Kol Navilum Eghil Kodithu Aay Nedithu Aakum - கொலை செய்ய வல்ல வேலைக் காட்டிலும் கடூரமாகி நெடுகா நின்றது இதனை காக்கும் ஆ என், Idhanai Kaakkum Aa En - இந்த ஆபத்திற்குத் தப்பிப் பிழைக்கும் வழி என்ன? சொல்லீர், Solleer - (ஏதாவது உபாயம் உண்டாகில்) சொல்லுங்கள். |
| 2674 | பெரிய திருமடல் || 18 | இது விளைத்த மன்னன் நறுந்துழாய் வாழ் மார்பன் மா மதி கோள் முன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின் சின்ன நறும் பூந்திகழ் வண்ணன் வண்ணம் போல் அன்ன கடலை மலையிட்டணை கட்டி மன்னன் இராவணனை மா மண்டு வெஞ்சமத்துப் பொன் முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து தென்னுலக மேற்றுவித்த சேவகனை – | இது விளைத்த மன்ன்ன், Idhu Vilaittha Mannn - (தென்றல் முதலானவை பாதகமாம்படி) இப்படிப்பட்ட நிலைமையை உண்டு பண்ணின மஹாநுபா பாவனாய், நறு துழாய் வாழ் மார்பன், Naru Thuzhai Vaal Maarban - மணம்மிக்க திருத்துழாய் மாலை விளங்குகின்ற திருமார்பை யுடையனாய், முன்னம் மாமதி கோள் விடுத்த முகில் வண்ணன், Munnam Maamathi Kol Vidutha Mukil Vannan - முன்னொருகால் சந்திரனுடைய துன்பத்தைப் போக்கின காளமேக வண்ணனாய், காயாவின் சின்ன நறு பூ திகழ் வண்ணன், Kaayavin Chinna Naru Poo Thigazh Vannan - “காயா” என்னும் செடியிலுண்டான சிறிய மணம் மிக்க பூப்போல் விளங்குகின்ற நிறத்தை யுடையனாய், வண்ணம் போல் அன்ன கடலை, Vannam Pol Anna Kadalai - தன்னுடைய வர்ணம் போன்ற வர்ணத்தையுடைய கடலிலே மலைஇட்டு, Malaiyittu - மலைகளைக் கொண்டெறிந்து அணை கட்டி, Anai Katti - ஸேதுவைக்கட்டி (இலங்கைக்கெழுந்தருளி) மா மண்டு வெம் சமத்து, Maa Mandu Vem Samathu - சதுரங்கபலம் நிறைந்த கொடிய போர்க்களத்தில் மன்னன் இராவணனை, Mannan Iravanai - ராக்ஷஸ ராஜனான ராவணனுடைய பொன் முடிவுகள் பத்தும் புரள, Pon Mudivugal Pathum Purala - அழகிய பத்துத்தலைகளும் (பூமியில் விழுந்து) புரளும்படியாக சரம் துரந்து, Saram Thurandhu - அம்புகளைப் பிரயோகித்து தென் உலகம் ஏற்றவித்த சேவகனை, Then Ulagam Aetravitha Sevakanai - (அவ்விராவணனை) யமலோகமடைவித்த மஹா சூரகனாய். |
| 2674 | பெரிய திருமடல் || 19 | ஆயிரக்கண் மன்னவன் வானமும் வானவர் தம் பொன்னுலகும் தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனைப் பின்னோர் அரியுருவமாகி யெரி விழித்துக் கொன்னவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே வல்லாளன் மன்னு மணிக்குஞ்சி பற்றி வர வீரத்துத் தன்னுடைய தாள் மேல் கிடாத்தி அவனுடைய பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த மின்னிலங்கு மாழிப் படைத் தடக்கை வீரனை | ஆயிரம் கண் மன்னவன் வானமும், Aayiram Kan Mannavan Vaanamum - ஆயிரங்கண்ணனான இந்திரனுடைய ஸ்வர்க்கலோகத்தையும் வானவர் தம் பொன் உலகும், Vaanavar Tham Pon Ulagum - (மற்றுமுள்ள) தேவதைகளின் திவ்ய லோகங்களையும் தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை, Thannudaiya Thol Valiyal Kaikkonda Thanavanai - தனது புஜபலத்தாலே தன் வசமாக்கிக் கொண்ட ஹிரண்யா ஸுரனை பின், Pin - சிறிது காலம் பொறுத்து ஓர் அரி உருவம் ஆதி, Oor Ari Uruvam Aadhi - ஒரு நரசிங்கமூர்த்தியாக அவதரித்து ஏரி விழித்து, Aeri Vizhithu - நெருப்புப் பொறி பறக்கப் பார்த்து, கொல் நலிலும் வெம் சமத்து கொல்லாதே, Kol Nalilum Vem Samathu Kollaadhe - கொடிய போர்க்களதிலே (பகைவரைக்கொல்லுங்கணக்கிலே சடக்கெனக்) கொன்றுவிடாதே வல்லாளன், Vallalan - மஹாபலசாலியான அவ்வசுரனுடைய மணி மன்னு குஞ்சிபற்றி வர ஈர்த்து, Mani Mannu Kunjipatri Vara Eerthu - மணிமயமான கிரீடம் பொருந்திய தலைமயிலைப் பிடித்துக் கிட்ட இழுத்து தன்னுடைய தாள் மேல் கிடாத்தி, Thannudaiya Thaal Mel Kidathi - (அவனைத்) தனது திருவடிகளின் மீது படுக்கவைத்துக் கொண்டு அவனுடைய பொன் அகலம், Avanudaiya Pon Akalam - அவனது அழகிய மார்பை வள் உதிரால் போழ்ந்து, Val Uthiraal Pozhndhu - கூர்மையான நகங்களாலே பிளந்து புகழ் படைத்த, Pugazh Padaitha - (ஆச்ரிதனான ப்ரஹ்லாதனை ரக்ஷித்தானென்கிற) கீர்த்தியைப் பெற்றவனாய் மின் இலங்கும் ஆழிபடை தட கை வீரனை, Min Ilangum Aazhipadai Thad Kai Veeranai - மின்போல் விளங்குகின்ற சுக்கராயுத்த்தைத் தடக்கையிலே உடைய மஹாவீரனாய் |
| 2674 | பெரிய திருமடல் || 20 | மன்னும் வடமலையை மத்தாக மாசுணத்தால் மின்னு மிருசுடரும் விண்ணும் பிறங்கொளியும் தன்னினுடனே சுழல மலைத் திரிந்தாங்கு இன்னமுதம் வானவரை யூட்டி அவருடைய மன்னும் துயர் கடிந்த வள்ளலை – | மன்னும் வடமலையை, Mannum Vadamalaiyai - அழுத்தமாக நாட்டப்பட்ட மந்தரகிரியை மத்து ஆக, Mattu Aaga - மத்தாகக்கொண்டு மாசுணத்தால், Masunaththal - (வாசுகி யென்னும்) பாம்பினால் (சுற்றி) மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும் தன்னினுடனே சுழல மலை திரித்து, Minnum Iru Sudarum Vinnum Pirangu Oliyum Thanninudane Suzala Malai Thiriththu - விளங்குகின்ற சந்திர ஸூர்யர்களும் ஆகாசமும், ப்ரகாசிக்கின்ற (மற்றும் பல) தேஜ பதார்த்தங்களும் தன்னோடு சுழலும்படி அந்த மந்தர மலையைச் சுழற்றி (கடலைக்கடைந்து) வானவரை இன் அமுதம் ஊட்டி, Vaanavarai In Amudham Ootti - தேவர்களுக்கு இனிய அமிருத்த்தை உண்ணக் கொடுத்து அவருடைய, Avarudaiya - அத் தேவர்களுடைய மன்னும் துயர் கடிந்த, Mannum Thuyar Kadintha - நெடுநாளைய துக்கத்தைப் போக்கடித்த வள்ளலை, Vallalai - பரம உதாரனாய் |
| 2674 | பெரிய திருமடல் || 21 | மற்றன்றியும் தன்னுருவ மாரும் அறியாமல் தான் அங்கோர் மன்னும் குறளுருவின் மாணியாய் மாவலி தன் பொன்னியலும் வேள்விக் கண் புக்கிருந்து போர் வேந்தர் மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண் மன்னா தருக என்று வாய் திறப்ப மற்றவனும் என்னால் தரப்பட்ட தென்றலுமே அத்துணைக் கண் மின்னார் மணி முடி போய் விண் தடவ மேலேடுத்த பொன்னார் கனை கழற்கால் ஏழ் உலகும் போய்க் கடந்தங்கு ஒன்னா வசுரர் துளங்கச் செல நீட்டி மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்துத் தன்னுலக மாக்குவித்த தாளானை – | மற்று அன்றியும், Mattru Andriyum - தவிரவும் தன் உருவம் ஆகும் அறியாமல், Than Uruvam Aagum Ariyamala - தனது ஸ்வரூபத்தை யாரும் தெரிந்து கொள்ள வொண்ணாதபடி. தான் ஓர் மன்னும், Thaan Oru Mannum - பரமபுருஷனான தான் ஒரு திவ்யமான வாமந வேஷங்கொண்ட பிரமசாரியாகி மா வலி தன், Maa Vali Than - மஹா பலியினுடைய தான பொன் இயலும் வேள்விக் கண் புக்கிருந்து, Pon Iyalaum Velvik Kan Pukkirundhu - ஸவர்ணதானஞ் செய்யும் யாக பூமியிலே எழுந்தருளி போர் வேந்தர் மன்னை, Por Vendar Mannai - போர் செய்யவல்ல மிடுந்தையுடைய அரசர்களில் தலைவனான அந்த மாவலியை மனம் கொள்ள வஞ்சித்து, Manam Kolla Vanchiththu - (இப்பிரமசாரி யாசிப்பதற்காகவே வந்தானென்று) நம்பும்படியாக மயக்கி நெஞ்சு உருக்கி, Nenju Urukki - (நடையழகு சொல்லழகு முதலியவற்றால) அவனது நெஞ்சை உருக்கி மன்னா, Mannaa - மஹாப்ரபுவே! என்னுடைய பாத்த்தால் யான் அளப்ப, Ennudaiya Paaththal Yaan Alappa - என் காலடியால் நாளே அளந்து கொள்ளும்படி மூ அடி மண் தருக என்று, Moo Adi Mann Tharuga Endru - மூவடி நிலம் கொடு என்று வாய் திறப்ப, Vaai Thirappa - வாய் திறந்து கேட்க, அவனும், Avanum - (அதுகேட்ட) அந்த மாவலியும் என்னால் தரப்பட்டது என்றலும், Ennal Tharappaduthu Endralum - அப்படியே என்னால் மூவடி நிலம் கொடுக்கப்பட்டது என்று சொல்ல அத்துணைக் கண், Aththunaik Kan - அந்த க்ஷணத்திலேயே மின் ஆர் மணி முடி போய் விண் தடவ, Min Aar Mani Mudi Poi Vin Thadava - விளங்குகின்ற மணிமகுடம் ஆகாசத்தே போய் அளாவ, மேல் எடுத்த, Mel Edutha - உயரத்தூக்கியருளின பொன் ஆர் களை கழல் கால், Pon Aar Kalai Kazhal Kaal - பொன்கள் நிறைந்து சப்திக்கின்ற வீரத்தண்டை யணிந்த திருவடி ஏழ் உலகும் போய் கடந்து, Ezhu Ulagum Poi Kadandhu - மேலுலகங்களெல்லாவற்றையும் தாண்டி அங்கு ஒன்னா அசுரர் துளங்க, Angu Onna Asurar Thulanga - அந்தயாக பூமியிலுள்ள (நமுசி முதலிய) பகையசுரர்கள் துன்பப்படும்படி செல நீட்டி, Sela Neetti - (மேலே) நெடுகவியாபிக்கச் செய்து மா வலியை வஞ்சித்து, Maa Valiyai Vanchiththu - (இவ்வகையாலே) மஹாபலியை வஞ்சித்து மன்னும் இ அகல் இடத்தை, Mannum I Akal Idaththai - நித்யமாய் விசாலமான இப்பூ மண்டலத்தை தன் உலகம் ஆக்குவித்த தாளானை, Than Ulagam Aakuviththa Thaalanai - தன்னுடைய லோகமாகவே ஆக்கிக்கொடுத்த திருவடிகளை யுடையனாய் |
| 2674 | பெரிய திருமடல் || 22 | தாமரை மேல் மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன் மலையைப் பொன்னி மணி கொழிக்கும் பூங்குடந்தைப் போர்விடையைத் தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர் மேல் அன்னம் துயிலும் அணி நீர் வயலாலி என்னுடைய வின்னமுதை எவ்வுள் பெரு மலையைக் கன்னி மதில் சூழ் கணமங்கைக் கற்பகத்தை மின்னை யிரு சுடரை வெள்ளறையுள் கல்லறை மேல் பொன்னை மரகதத்தைப் புட்குழி எம் போரேற்றை மன்னு மரங்கத் தெம் மா மணியை- | தாமரை மேல் மின் இடையாள் நாயகனை, Thamarai Mael Min Idaiyaal Naayakanai - தாமரைப்பூவில் பிறந்தவளும் மின் போன்ற இடையை யுடையளுமான பிராட்டிக்கு நாயகனாய் விண்ணகருள் பொன் மலையை, Vinnagarul Pon Malaiyai - திருவிண்ணகரிலே பொன்மலை போல் விளங்குமவனாய் பொன்னி மணி கொழிக்கும் பூ குடந்தை போர் விடையை, Ponni Mani Kozhikkum Poo Kudandhai Por Vidaiyai - காவேரி நதியானது ரத்னங்களைக் கொண்டு தள்ளுமிடமான அழகிய திருக்குடந்தையிலே யெழுந்தருளியிருக்கிற தென் நன் குறுங்குடியுள் செம்பவளம் குன்றினை, Then Nan Kurungudiyul Sempavalam Kunrinai - தென் திசையிலுள்ள விலக்ஷணமான திருக்குறுங்குடியிலே சிவந்த பவழமலைபோல விளங்குமவனாய், தண் சேறை மன்னிய வள்ளலை, Than Serai Manniya Vallalai - குளிர்ந்த திருச்சேறையிலே பொருந்தி யெழுந்தருளி யிருக்கிற பரம உதாரனாய், மா மலர் மேல் அன்னம் துயிலும் அணி நீர் வல் ஆலி என்னுடைய இன் அமுதை, Maa Malar Mael Annan Thuyilum Ani Neer Val Aali Ennudaiya In Amuthai - சிறந்த தாமரைப் பூக்களின் மேலே அன்னப்பறவைகள் உறங்கப் பெற்ற அழகிய நீர் நிறைந்த வயல்களை யுடைத்தான திருவாலியிலே எனக்குப் பரம போக்யனாக ஸேவை ஸாதிப்பவனாய். எவ்வுள் பெருமலையை, Evvul Perumalaiyai - திருவெவ்வுளுரில் பெரிய தொரு மலை சாய்ந்தாற் போலே சாய்ந்தருள்பவனாய் கன்னி மதில் சூழ் கணமங்கை கற்பகத்தை, Kanni Mathil Soozh Kanamangai Karppagaththai - சாச்வதமான மதில்களாலே சூழப்பட்ட திருக்கண்ண மங்கையில் கல்பவ்ருக்ஷம்போல் எழுந்தருளியிருப்பவனாய் மின்னை, Minnai - மின்போல் விளங்குகின்ற பெரிய பிராட்டியாரை யுடையனாய் இரு சுடரை, Iru Sudarai - ஸூர்ய சந்திர்ர்களோ என்னும்படியான திருவாழி திருச்சங்குகளை யுடையனாய் வெள்ளறையுள், Vellaraiyul - திருவெள்ளறையிலே கல் அறை மேல், Kal Arai Mel - கருங்கல் மயமான ஸந்நிதி யினுள்ளே பொன்னை, Ponnai - பொன் போல் விளங்குமவனாய் மரதகத்தை, Marathakathai - மரதகப்பச்சை போன்ற வடிவை யுடையனாய் புட்குழி எம் போர் எற்றை, Putkuzhi Em Por Ettrai - திருப்புட் குழியிலே எழுந்தருளி யிருக்கிற அஸ்மத்ஸ்வாமியான ஸமரபுங்கவனாய், அரங்கத்துமன்னும், Arangathumannum - திருவரங்கத்தில் நித்யவாஸம் பண்ணுகிறவனாய் எம் மா மணியை, Em Maa Maniyai - நாம் கையாளக்கூடிய நீல மணி போன்றவனாய் |
| 2674 | பெரிய திருமடல் || 23 | வல்ல வாழ் பின்னை மணாளனைப் பேரில் பிறப்பிலியைத் தொன்னீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை என் மனத்து மாலை யிடவெந்தை ஈசனை மன்னும் கடன்மலை மாயவனை வானவர்தம் சென்னி மணிச் சுடரைத் தண் கால் திறல் வலியைத் தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை அன்னத்தை மீனை யரியை யருமறையை முன்னிவ் வுலகுண்ட மூர்த்தியைக் கோவலூர் மன்னு மிடை கழி எம்மாயவனைப் பேயலறப் பின்னும் முலையுண்ட பிள்ளையை அள்ளல் வாய் அன்னம் இரை தேரழுந்தூர் எழுஞ்சுடரைத் தென் தில்லைச் சித்திர கூடத்தென் செல்வனை மின்னி மழை தவழும் வேங்கடத் தெம் வித்தகனை | வல்லவாழ், Vallavaazh - திருவல்லவாழிலே எழுந்தருளியிருக்கிற பின்னை மணாளனை, Pinnai Manaalanai - நப்பின்னை நாயகனாய் பேரில் பிறப்பு இலியை, Peril Pirappu Ilaiyi - திருப்பேர் நகரிலெழுந்தருளியிருக்கிற நித்யஹித்தனாய் தொல் நீர் கடல் கிடந்த, Thol Neer Kadal Kidantha - என்று மழியாத நீரையுடைய கடலிலே பள்ளிகொள்பவனாய் தோளா மணி சுடரை, Thola Mani Sudarai - துளைவிடாத ரத்னம்போலே ஜ்வலிப்பவனாய் என் மனத்து மாலை, En Manaththu Maalai - என்மேல் வ்யாமோஹ்முடையனாகி எனது நெஞ்சை விட்டுப்பிரியாதவனாய் இடவெந்தை ஈசனை, Idaventhai Eesanai - திருவிடவெந்தையிலெழுந்தருளியிருக்கிற ஸர்வேவரனாய் கடல் மல்லை மன்னும் மாயவனை, Kadal Mallai Mannum Maayavanai - திருக்கடலமல்லையிலே நித்யவாஸம் செய்யும் ஆச்சரியானாய் வானவர் தம் சென்னி மணி சுடரை, Vaanavar Tham Senni Mani Sudarai - நித்ய ஸூரிகளுடைய சிரோபூஷணமாக விளங்குமவனாய் தண்கால் திறல் வலியை, Thankaal Thiral Valiyi - திருத்தண்காலில் எழுந்தருளியிருக்கிற மஹா பலசாலியாய் தன்னை பிறர் அறியா த்த்துவத்தை, Thannai Pirar Ariya Ththuvaththai - (தனது திருவருளுக்கு விஷயமாகாத) பிறர் அறிந்துகொள்ள முடியாத ஸ்வரூபத்தை யுடையனாய் முத்தினை, Muththinai - முத்துப்போன்றவனாய் அன்னத்தை, Annaththai - ஹம்ஸாவதாரஞ் செய்தவனாய் மீனை, Meenai - மத்ஸ்யாவதாரஞ் செய்தவனாய் அரியை, Ariyai - நரஸிம்ஹாவதாரஞ் செய்தவனாய் (அல்லது) ஹயக்ரீ வாவதாரஞ் செய்தவனாய் அருமறையை, Arumaraiai - ஸகல விதயாஸ்வருபியாய் முன இ உலகு உண்ட முர்த்தியை, Muna I Ulagu Unda Murththiyai - முன்னொருகால் இவ்வுலகங்களையெல்லாம் திருவயிற்றிலே வைத்து நோக்கின ஸ்வாமியாய் கோவலூர் இடைகழி மன்னும் எம்மாயவனை, Kovalur Idaikazhi Mannum Emmayavanai - திருக்கோவலூரடை கழியில் நித்யவாஸம் பண்ணுகிற எங்கள் திருமாலாய் பேய் அலற முலை உண்ட பிள்ளையை, Pei Alara Mulai Unda Pillaiyai - பூதனையானவள் கதறும்படியாக அவளது முலையை உண்ட பிள்ளையாய் அன்னம், Annam - ஹம்ஸங்களானவை அள்ளல் வாய், Allal Vaai - சேற்று நிலங்களில் இரை ரே அழுந்தூர், Irai Rae Azhundhoor - இரைதேடும்படியான திருவழுந்துரில் எழும் சுடரை, Ezhum Sudarai - விளங்கும் சோதியாய் தென் தில்லை சித்தரை கூடத்து என் செலவனை, Then Thillai Siththarai Koodathu En Selavanai - தென் திசையிலுள்ள தில்லைத் திருச்சித்திர கூடத்தில் (எழுந்தளியிருக்கிற) எனது செல்வனாய் மழை, Mazhai - மேகங்களானவ மின்னி, Minnni - பளபளவென்று மின்னிக் கொண்டு தவழும், Thavazhum - சிகரங்களில் ஸஞ்சரிக்கப்பெற்ற வேங்கடத்து, Vengadaththu - திருவேங்கட மலையில் (எழுந்தருளியிருக்கிற) எம் பித்தகனை, Em Piththakanai - நமக்கு ஆச்சர்யகரமான குண சேஷ்டிதங்களை யுடையனாய். |
| 2674 | பெரிய திருமடல் || 24 | மன்னனை மாலிருஞ்சோலை மணாளனைக் கொன்னவிலும் ஆழிப் படையானைக் கோட்டியூர் அன்ன வுருவில் அரியைத் திரு மெய்யத்து இன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை மன்னு மதிட் கச்சி வேளுக்கை யாளரியை மன்னிய பாடகத் தெம் மைந்தனை -வெக்காவில் உன்னிய யோகத் துறக்கத்தை- | மன்ன்னை, Mannnai - ஸர்வேச்வரனாய் மாலிருஞ்சோலை, Malirunjolai - திருமாலிருஞ் சோலையில் எழுந்தருளியிருக்கிற மணவாளப் பிள்ளையாய் கொல் நவிலும் ஆழிபடையானை, Kol Navilum Aazhipadayanai - பகைவரைக் கொல்ல வல்ல திருவாழியை ஆயுதமாகவுடையனாய் கோட்டியூர், Kottiyur - திருக்கோடியூரில் அன்ன உருவின் அரியை, Anna Uruvin Ariyai - அப்படிப்பட்ட (விலக்ஷணமான) திருமேனியையுடைய நரஸிம்ஹ மூர்த்தியாய் திரு மெய்யத்து, Thiru Meyyathu - திருமெய்யமலையில் இன் அமுதம் வெள்ளத்தை, In Amudham Vellathai - இனிதான அம்ருத ப்ரவாஹம் போல் பரம போக்யனாய் இந்தளூர், Indhalur - திருவிந்தளூரில் அந்தணனை, Andhananai - பரமகாருணிகனாய் மன்னு மதிள், Mannu Mathil - பொருந்திய மதிகள்களையுடைய கச்சி, Kachchi - காஞ்சிநகரத்தில் வேளுக்கை ஆனரியை, Velukkai Anariyai - வேளுக்கை யென்கிற தலத்திலுள்ள ஆளழகிய சிங்கராய் பாடகத்து மன்னிய எம்மைந்தனை, Padagathu Manniya Emmaindhanai - திருப்பாடகத்தில் நித்யவாஸம் பண்ணுகிற எமது யுவரவாய், வெஃகாவில், Vekavil - திருவெஃகாவில் உன்னியயோகத்து உறக்கத்தை, Unniyayogathu Urakkathai - ஜாகரூகனாகவே யோகநித்ரை செய்பவனாய் |
| 2674 | பெரிய திருமடல் || 25 | ஊரகத்துள் அன்னவனை அட்ட புயகரத் தெம் மானேற்றை என்னை மனம் கவர்ந்த வீசனை வானவர் தம் முன்னவனை மூழிக் களத்து விளக்கினை அன்னவனை யாதனூர் ஆண்டளக்கும் ஐயனை நென்னலை இன்றினை நாளையை நீர்மலை மேல் மன்னு நான் மறை நான்கும் ஆனானைப் புல்லாணித் தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் மன்னு மணி மாடக் கோயில் மணாளனை நன்னீர்த் தலைச் சங்க நாண் மதியை நான் வணங்கும் கண்ணனைக் கண்ணபுரத் தானைத் தென்னறையூர் மன்னு மணிமாடக் கோயில் மணாளனைக் கன்னவில் தோள் காளையைக் கண்டாங்குக் கைதொழுது என்னிலைமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான் தன்னருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான் மின்னிடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும் தன்னடியார் முன்பும் தரணி முழுதாளும் கொன்னவிலும் வேல் வேந்தர் கூட்டகத்தும் நாட்டகத்தும் தன்னிலை எல்லாம் அறிவிப்பன் | ஊரகத்துள் அன்னவனை, Ooragaththul Annavanai - திருவூரகத்தில் விலக்ஷணனாய் அட்ட புயகரத்து எம்மான் எற்றை, Atta Puyakarathu Emman Ettrai - அட்டபுயகரதலத்திலுள்ள அஸ்மத் ஸ்வாமி சிகா மணியாய் என்னை மனம் கவர்ந்த ஈசனை, Ennai Manam Kavarndha Eesanai - எனது நெஞ்சைக் கொள்ளைகொண்ட தலைவனாய் வானவர் தம் முன்னவனை, Vaanavar Tham Munnavanai - தேவாதிராஜனாய் மூழிக்களந்து விளக்கினை, Moozhikkalandhu Vilakkinai - திருமூழிக்களத்தில் விளங்குபவனாய் அன்னவனை, Annavanai - இப்படிப்பட்டவனென்று சொல்ல முடியாதவனாய் ஆதனூர், Aadhanur - திருவாதனூரில் ஆண்டு அளக்கும் ஐயனை, Aandu Alakkum Aiyyanai - ஸகல காங்களுக்கும் நிர்வாஹகனான ஸ்வாமியாய் நென்னலை இன்றினை நாளையை, Nennalai Indrinai Naalaiyai - நேற்று இன்று நாளை என்னும் முக்காலத்துக்கும் ப்ரவர்த்தகனாய் நீர்மலை மேல் மன்னும், Neermalai Mel Mannum - திருநீர்மலையிலெழுந்தருளியிருக்கிற மறை நான்கும் ஆனானை, Marai Nankum Aanana - சதுர்வேத ஸ்வரூபியாய் புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியி லெழுந்தருளியிருக்கிற தென்னன் தமிழை வடமொழியை, Thenan Tamizhai Vadhamozhiyai - உபயவேத ப்ரதிபாதயனாய் நாங்கூரில், Naangooril - திருநாங்கூரில் மணிமாடக்கோயில் மன்னு மணாளனை, Manimaadakoyil Mannu Manaalanai - மணிமாடக் கோயிலில் நித்ய வாஸம் பண்ணுகிற மணவாளப் பிள்ளையாய் நல் நீர் தலைச் சங்கம் நாண்மதியை, Nal Neer Thalaich Sangam Naanmadhiyai - நல்ல நீர்சூழ்ந்த தலைச்சங்க நாட்டிலுள்ள நாண் மதியப் பெருமாளாய் நான் வணங்கும் கண்ணனை, Naan Vanangum Kannanai - நான் வணங்கத்தக்க கண்ணனாய் கண்ணபுரத்தானை, Kannapurathaanai - திருக்கண்ணபுரத் துறைவானாய் தென் நறையூர்மணி மாடக்கோயில் மன்னுமணுள்னை, Then Naraiyoormani Maadakoyil Mannumanulnai - திருநறையூர் மணிமாடமென்று ப்ரஸித்தமான ஸந்நிதியில் எழுந்தருளியிருக்கிற மணவாளனாய் கல் நவில் தோள் காளையை, Kal Navil Thol Kaalaiyai - மலையென்று சொல்லத்தக்க தோள்களையுடைய யுவாவாயுள்ள ஸர்வேச்வரனை ஆங்கு கண்டு கை தொழுது, Aangu Kandu Kai Thozhuthu - அவ்வவ்விடங்களில் கண்டு ஸேவித்து என் நிலைமை எல்லாம் அறிவித்தால், En Nilaimai Ellam Ariviththal - எனது அவஸ்தைகளையெல்லாம் விண்ணப்பஞ்செய்து கொண்டால் (அதுகேட்டு) எம்பெருமான், Emperumaan - அப்பெருமான் தன் அருளும் ஆக மும் தாரான்ஏல், Than Arulum Aaga Mum Thaaranael - தனது திருவருளையும் திருமார்பையும் எனக்குத் தக்க தருவானாகில் தன்னை, Thannai - அவ்வெம்பெருமானை நான், Naan - (அவனது செயல்களையெல்லாமறிந்த) நான் மின் இடையார் சேரியிலும், Min Idaiyaar Seriyilum - ஸ்த்ரீகள் இருக்கும் திரள்களிலும் வேதியர்கள் வாழ்வு இடத்தும், Vedhiyarkal Vazhvu Idaththum - வைதிகர்கள் வாழுமிடங்களிலும் தன் அடியார்முன்பும், Than Adiyaarmunbum - அவனது பக்தர்கள் முன்னிலையிலும் தரணி முழுதும் ஆளும் கொல் நலிலும் வேல்வேந்தர் கூட்டத்தும், Tharani Muzhudhum Aalum Kol Nalilum Velvendhar Koottaththum - பூ மண்டலம் முழுவதையும் ஆள்கின்றவராயும் கொடிய படைகளை யுடையவராயுமிருக்கிற அரசர்களுடைய ஸபைகளிலும் நாடு அநத்து, Naadu Anathu - மற்றுமு தேசமெங்கும் தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன், Than Nilaimai Ellam Arivippan - அவன் படிகளை யெல்லாம் பிரகாசப்படுத்தி விடுவேன். |
| 2674 | பெரிய திருமடல் || 26 | தான் முன நாள் மின்னிடை யாய்ச்சியர் தம் சேரிக் களவின் கண் துன்னு படல் திறந்து புக்குத் தயிர் வெண்ணெய் தன் வயிறார விழுங்கக் கொழும் கயற்கண் மன்னு மடவோர்கள் பற்றியோர் வான் கையிற்றால் பின்னு முரலோடு கட்டுண்ட பெற்றிமையும் | முனம் நாள், Munam Naal - முற்காலத்தில் (கிருஷ்ணாவதாரத்தில்) மின் இடை ஆச்சியர் தம் சேரி, Min Idai Aachiyar Tham Cheri - மின்போல் நுண்ணியஇடையையுடைய இடைச்சிகளின் சேரியிலே தன்னு படல் திறந்து, Thannu Patal Thirandhu - நெருக்கமாகக் கட்டிவைத்த படலைத்திறந்து களவின்கண் புக்கு, Kalavinkal Pukku - திருட்டுத்தனமாகப் புகுந்து தயிர் வெண்ணெய், Thayir Vennai - தயிரையும் வெண்ணெயையும் தன் வயிறு ஆர தான் விழுங்க, Than Vayiru Aara Than Vizunga - தனது வயிறு நிறையும்படி வாரியமுதுசெய்த வளவில் கொழு கயல் கண்மன்னு மடவோர்கள், Kozhu Kayal Kanmannu Madavorkal - நல்ல கயல்மீன் போன்ற கண்களையுடைய அவ்வாயர் மாதர் பற்றி, Patri - பிடித்துக்கொண்டு ஓர் வான் கயிற்றால், Oru Vaan Kayitral - ஒரு குறுங்கயிற்றால் உரலோடு, Uralodu - உரலோடே பிணைத்து (க்கட்டிவிட) கட்டுண்ட பெற்றிமையும், Kattundu Pettrimaiyum - (கட்டையவிழ்த்துக் கொள்ளமாட்டாமல்) கட்டுண்டு கிடந்தன்மை யென்ன. |
| 2674 | பெரிய திருமடல் || 27 | அன்னதோர் பூதமாய் ஆயர் விழவின் கண் துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றை முன்னிருந்து முற்றத் தான் துற்றிய தெற்றனவும் | ஆயர் விழவின் கண், Aayar Vizavin Kan - இடையர்கள் (இந்திரனுக்குச் செய்த) ஆராதனையில் துன்னு சகடத்தால் புக்க பெரு சோற்றை, Thunnu Sakadathal Pukka Peru Sotrrai - பலபல வண்டிகளால் கொண்டுசேர்த்த பெருஞ்சோற்றை அன்னது ஓர் பூதம் ஆய், Annathu Oru Poodham Aayi - வருணிக்க முடியாத வொருபெரும் பூகவடிவு கொண்டு முன் இருந்து, Mun Irundhu - கண் முன்னேயிருந்து கொண்டு முற்ற, Mutra - துளிகூட மிச்சமாகாதபடி தான், Thaan - தானொருவனாகவே தூற்றிய, Thooriya - உட்கொண்ட தெற்றௌவும், Thetrouvum - வெட்கக்கேடென்ன. |
| 2674 | பெரிய திருமடல் || 28 | மன்னர் பெரும் சவையுள் வாழ வேந்தர் தூதனாய் தன்னை இகழ்ந்துரைப்பத் தான் முன நாள் சென்றதுவும் | முனம் நாள், Munam Naal - முன்னொரு காலத்தில் வாழ்வேந்தர் தூதன் ஆய், Vazhvendhar Thoodhan Aayi - பாண்டவர்களுக்குத் தூதனாய் தன்னை இகழ்ந்து உரைப்ப, Thannai Ikazhndhu Uraippa - (கண்டாரங்கலும்) இழிவாகச் சொல்லும்படியாக மன்னர் பெருசவையுள் சென்றதும், Mannar Perusavayul Senrathum - (துரியோதனாதி) அரசர்களுடைய பெரிய சபையிலே சென்றதென்ன |
| 2674 | பெரிய திருமடல் || 29 | மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப கொன்னவிலும் கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி என்னிவன் என்னப் படுகின்ற ஈடறவும் | மங்கையர் தம் கண் களிப்ப, Mangaiyar Tham Kan Kalippa - (இடைப்) பெண்களின் கண்களிக்கும்படி மன்னு பறை கறங்க, Mannu Parai Karang - (அரையிலே) கட்டிக்கொண்ட பறை ஒலிக்க கொல்சவிலும் கூத்தன் ஆய், Kolchavilum Koothan Aayi - (பெண்களைக்) கொலை செய்கின்ற கூத்தையாடுபவனாய் போத்தும், Poththum - மேன்மேலும் குடம் ஆடி, Kudam Aadi - குடங்களை யெடுத்து ஆடி என் இவன் என்னப்படுகின்ற ஈடறவும், En Ivan Ennapadugindra Eedharavum - “இப்படியும் கூத்தாடுவானொருவனுண்டோ!“ என்னும்படி பெற்ற சீர்கேடென்ன |
| 2674 | பெரிய திருமடல் || 30 | தென்னிலங்கை யாட்டி யரக்கர் குலப்பாவை மன்னன் இராவணன் தன நல் தங்கை வாள் எயிற்றுத் துன்னு சுடு சினத்துச் சூர்பணகாச் சோர்வெய்திப் பொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால் தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கரிந்து மன்னிய திண் எனவும் – | தென் இலங்கை யாட்டி, Then Ilangai Yaatti - தென்னிலங்கைக்கு அரசியும் அரக்கர் குலம் பாவை, Arakkar Kulam Paavai - ராக்ஷஸ குலத்தில் தோன்றிய புதுமை போன்றவளும் மன்ன்ன் இராவணன் தன் நல் தங்கை, Mannn Raavanan Than Nal Thangai - பிரபுவாகிய ராவணனது அன்புக்குரி தங்கையானவளும் வாள் எயிறு, Vaal Eiyiru - வாள் போன்றபற்களையுடையளும் துன்னு சுடு சினத்து, Thunnu Suthu Sinaththu - எப்போதும் (எதிரிகளைச்) சுடக்கடவதான் கோபத்தை யுடையளுமான சூர்ப்பணகா, Soorppanagaa - சூர்பணகை யென்பவள் புலர்ந்து எழுந்த காமத்தால், Pularnthu Ezhundha Kaamaththal - அதிகமாக வுண்டான காம நோயினால் பொன் நிறம் கொண்டு, Pon Niram Kondu - வைவர்ணிய மடைந்து சோர்வு எய்தி, Soarvu Eydhi - பரவசப்பட்டு (தளர்ந்து) தன்னை நயந்தானை, Thannai Nayandhaanai - தன்னை ஆசைப்பட அந்த அரக்கியை தான் முனிந்து, Thaan Muninthu - தான் சீறி மூக்கு அரிந்து, Mookku Arinthu - மூக்கையறுத்து மன்னிய திண்ணெனவும், Manniya Thinnenavum - இதையே ஒரு ப்ரதிஷ்டையாகநினைத்துக கொண்டிருப்பதென்ன. |
| 2674 | பெரிய திருமடல் || 31 | வாய்த்த மலை போலும் தன்னிகர் ஓன்று இல்லாத தாடகையை மா முனிக்காத் தென்னுலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்றிவை தான் உன்னி யுலவா யுலகறிய ஊர்வன் நான் முன்னி முளைத்து எழுந்து ஓங்கி யொளி பரந்த மன்னிய பூம் பெண்ணை மடல் – | வாய்த்த மலை போலும், Vaiththa Malai Polum - பெரியமலை போன்ற உருவமுடையளும் தன் நிகர் ஒன்று இல்லாத, Than Nigar Ondru Illadha - (கொடுமையில்) ஒப்பற்றவளுமான தாடகையை, Thadakaiyai - தாடகை யென்பவளை மா முனிக்கா, Maa Munikka - விச்வாமித்ர் முனிவர்க்காக தென் உலகம் எற்றுவித்த, Then Ulagam Etruvitha - யமலோக மடைவித்த திண் திறலும், Thin Thiralum - மிக்க பராக்ரமமென்ன மற்று இவை தான், Mattru Ivai Thaan - இப்படியாகவுள்ள மற்றும் பல செய்கைகளும் உன்னி உலவா, Unni Ulavaa - நினைத்து முடிய மாட்டா (வாசாம கோசரம்) உலகு அறிய, Ulagu Ariya - அப்படிப்பட்ட சேஷ்டிதங்களை யெல்லாம் உலகத்தாரறியும்படி பிரகரப்படுத்திக் கொண்டு நான், Naan - பரகால நாயகியாகிய நான் முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒளி பரந்த மன்னிய பூபெண்ணை மடல் ஊர்வன், Munni Mulaiththu Ezhunthu Ongi Oli Parandha Manniya Poopennai Madal Oorvan - முன்னே முளைத்து எழுந்து வளர்ந்து விளங்குகின்ற சிறந்த அழகிய பனைமடலைக்கொண்டு மடலூரக்கடவேன். |