Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 10 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
10திருப்பல்லாண்டு || ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –அவதாரிகை --கீழில் பாட்டில் புகுந்த அநந்ய பிரயோஜனர் தேக யாத்ரையிலும் தங்கள் பாரதந்த்ர்யமே ஸ்வரூபமாய் இருக்கிற ஏற்றத்தை சொல் லிக் கொண்டு புகுந்தார்கள் – இதில் -பிரயோஜநாந்த பரர் புகுருகிரார்கள் ஆகையாலே -தங்கள் பக்கல் அங்கன் இருப்பதோர் ஏற்றம் காண விரகு இல்லாமையாலே -பகவத் பிரபாவத்தால் தங்களுக்கு பிறந்த ஏற்றத்தை சொல்லிக் கொண்டு வந்து புகுருகிரார்கள் – ஐஸ்வர்யார்த்தியும் சங்கதனாகிற போது -சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல -என்று பகவத்ப்ரபாவத்தை சொல்லிக் கொண்டு வந்து இ றே புகுந்தது – அவன் தான் நான் அபேஷித்த சூத்திர புருஷார்த்தத்தை தந்து வைத்து -என்னை சுத்த ஸ்வபாவன் ஆக்கினான் -என்று ஆச்சர்யப் பட்டான் – கைவல்யார்திகள் தங்கள் ஷூ த்ர புருஷார்த்த சம்பந்தம் யாவதாத்மபாவி விநாசகரம் ஆகையாலே ஆஸ்ரயண வேளையில் மீட்ட ஆச்சர்யத்தைக் கொண்டாடுகிறார்கள் – 10
எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடி
யோம் என்று எழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில்
வீடுபெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திரு மதுரையிற்
சிலை குனித்து ஐந்தலைய
பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே உன்னைப்
பல்லாண்டு கூறுதுமே
எம்பெருமான், Emperumaan - எங்களுக்கு ஸ்வாமியானவனே !
உன் தனக்கு, Un Thanakku - (ஸர்வசேஷியான) உனக்கு
அடியோமென்று, Adiyomendru - அடிமைப்பட்டவர்கள் நாங்கள் என்று
எழுத்துப்பட்ட, Ezuthuppatta - அடிமை ஓலை எழுதிக்கொடுத்த
எந்நாள், Ennnaal - நாள் எதுவோ
அந்தாளே, Andhaale - அந்த நாளே
அடியோங்கள், Adiyongal - சேஷபூதர்களான எங்களுடைய
அடி, Adi - அடிமைப்பட்ட
குடில், Kudil - தாய் வீட்டிலுள்ள புத்ரபௌத்ராதிகளெல்லாம்
வீடு பெற்று, Veetu Petru - கைவல்யமோக்ஷத்திலிருந்து விடுதலை பெற்று
உய்ந்தது, Uyindhadhu - உஜ்ஜீவித்தது
செம் நாள், Sem Naal - அழகியதான திருநாளிலே
தோற்றி, Thorri - திருவவதாரம் செய்து
திரு மதுரையுள், Thiru Madhuraiyul - அழகிய வட மதுரையில்
சிலை குனித்து, Silai Kunithu - (கம்ஸனுடைய ஆயுதசாலையில்) வில்லை முறித்து
ஐந்தலைய, Aindhalaiya - ஐந்து தலைகளை உடையதாய்
பை, Pai - பாந்த படங்களையுமுடையதான
நாகம், Naagam - காளியனென்னும் நாகத்தின்
தலை, Talai - தலையின் மேல்
பாய்ந்தவனே, Paaindhavane - ஏறிக் குதித்தருளிள ஸர்வேச்வரனே !
உன்னை, Unnai - உனக்கு
பல்லாண்டு கூறுதும், Pallandu Koorudhum - மங்களாசாஸனம் பண்ணக்கடவோம்