Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: திருப்பல்லாண்டு (15 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
0திருப்பல்லாண்டு - தனியன் || (இது தான் திருப்பல்லாண்டுத் தனியனாயிருக்கும் . அந்தத் திருப்பல்லாண்டு பாடுகைக்கடியான பெரியாழ்வார் வைபவத் தைப் பெருக்கப் பேசி , அவரை ப்ரணிபாத நமஸ்காரம் பண்ணும்படி சொல்லுகிறது ) 6
குருமுகம் அநதீத்ய ப்ராஹ வேதான் அசேஷான்
நர பதி பரிக்லிப்தம் சுல்கம் ஆதாதுகாம
ஸ்வசுரம் அமர வந்த்யம் ரங்க நாதஸ்ய ஸாக்ஷாத்
த்விஜகுல திலகம் தம் விஷ்ணு சித்தம் நமாமி
Guru Mukham,குருமுகம் - ஆசார்ய முகத்தாலே
Anaditya,அநதீத்ய - அப்யசிக்காமலே
Prah,ப்ராஹ - உபன்யசித்தாரோ
Vedhan,வேதான் - வேதங்களை
Aseshan,அசேஷான் - சமஸ்தமாகிய
Nara Pathi,நர பதி - ஸ்ரீ வல்லப தேவன் என்கிற ராஜாவினால்
Parikliptham,பரிக்லிப்தம் - ஏற்படுத்தப்பட்ட
Sulkam,சுல்கம் - வித்யா சுல்கத்தை
Adhathukama,ஆதாதுகாம - க்ரஹிப்பதற்கு ஆசை உள்ளவராய்
Svasuram,ஸ்வசுரம் - மாமனாரும்
Amara,அமர - தேவதைகளால்
Vandhyam,வந்த்யம் - ஸ்தோத்ரம் செய்வதற்கு தக்கவரும்
Ranga Nathasya,ரங்க நாதஸ்ய - ஸ்ரீ ரெங்க அதிபனுக்கு
Saakshath, ஸாக்ஷாத் - பிரத்யக்ஷமாய்
Dwija Kula,த்விஜகுல - ப்ராஹ்மண வம்சத்துக்கு
Thilagam,திலகம் - அலங்கார பூதருமாகிய
Tham Vishnu Sitham,தம் விஷ்ணு சித்தம் - அந்த பெரியாழ்வாரை
Namami,நமாமி - சேவிக்கிறேன்
0திருப்பல்லாண்டு - தனியன் || (இதில் ஸ்ரீ வில்லி புத்தூர் பட்டர்பிரானான பெரியாழ்வார் அவதரண ஸ்தலத்தை அனுசந்திப்பார்- திருவடிகளைத் தொழுகையால் உண்டான ப்ரீதியையும்- அவர் செயலைச் சொல்லுகையால் உண்டான விரோதி நிவர்த்தியாதிகளில் த்ருப்தியையும் மனசோடே சொல்லி உலாவுகிறதாய் இருக்கிறது) 7
மின்னார் தட மதிள் சூழ் வில்லிபுத்தூர் என்று ஒரு கால்
சொன்னார் கழல் கமலம் சூடினோம் -முன்னாள்
கிழி யறுத்தான் என்று உரைத்தோம் கீழ்மையினில் சேரும்
வழி யறுத்தோம் நெஞ்சமே வந்து
Min,மின் - மின்னுதல் (மணிகளால் ஒளி விடுதல்)
Ar,ஆர் - நிறைந்த அதிகமான
Thadam,தடம் - அகலப்பரப்பும் உயர்ந்து ஓங்குகையும் உள்ள
Mathil,மதிள் - திரு மதிளாலே
Soozh,சூழ் - வளைக்கப்பட்ட
Villi Puthoor endru,வில்லி புத்தூர் என்று - ஸ்ரீ வில்லி புத்தூர் என்று
Oru kaal sonnaar,ஒரு கால் சொன்னார் - ஒரு தரம் உச்சரிதவருடைய
Kazhal Kamalam,கழல் கமலம் - திருவடித் தாமரைகளை
Soodinom,சூடினோம் - விசேஷ புஷ்பமாக முடித்தோம்
Munnal,முன்னாள் - புருஷார்த்தம் வெளியாக காலத்தில்
Kizhi,கிழி - பொருள் முடிப்பை
Aruthaan endru,அறுத்தான் என்று - அறுத்து வெளி இட்டவர் என்று
Uraththom,உரைத்தோம் - சொல்லப் பெற்றோம் ஆகையால்
Keezhmai,கீழ்மை - நரகத்தில்
Ini,இனி - இனிமேல்
Seerum,சேரும் - முன் போல் செல்லுகிற
Vazhi,வழி - மார்க்கத்தை
Aruththom,அறுத்தோம் - அறப் பண்ணினோம்
Nenje,நெஞ்சே - மனசே
Vandhu,வந்து - சம்ஸார ரஹீதராய் வந்து
0திருப்பல்லாண்டு - தனியன் || (இதில் பிரபந்த வக்தவான பெரியாழ்வார் திருவடிகளில் உபாய ச்வீகாரத்தை -சொல்கிறது) 8
பாண்டியன் கொண்டாட பட்டர்பிரான் வந்தான் என்று
ஈண்டிய சங்கம் எடுத்தூத -வேண்டிய
வேதங்களோதி விரைந்து கிழி யறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று
Pandiyan,பாண்டியன் - ஸ்ரீ வல்லப தேவன் என்கிற பாண்டிய ராஜன்
Kondada,கொண்டாட - மேன்மேல் ஏத்த
Pattar Piran,பட்டர்பிரான் - ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு தலைவன்
Vandhaan endru,வந்தான் என்று - எழுந்து அருளினான் என்று
Eendiya,ஈண்டிய - கூடின அநேகமான
Sangam eduthu,சங்கம் எடுத்து - சங்குகளைக் கொண்டு
Ootha,ஊத - அநேகர் சப்திக்க
Vendia,வேண்டிய - அக்காலத்துக்கு ஆவஸ்யகமாகிய
Vedhangal,வேதங்கள் - வேதார்தங்களை
Oodhi,ஓதி - தெரியச் சொல்லி
Viraindhu,விரைந்து - தாமசியாமல்
Kizhi,கிழி - வித்யா சுல்கமாகிய பொருள் முடிப்பை
Yaruthaan,யறுத்தான் - அறுத்தவனுடைய
Paadhangal,பாதங்கள் - திருவடிகளே
Yaamudaiya,யாமுடைய - நாங்கள் ஆஸ்ரயமாக உடைய
Patru,பற்று - ஆதாரம்
1திருப்பல்லாண்டு || 1
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!
உன் செவ்வடி செவ்விதிருக் காப்பு
பல்லாண்டு, pallaandu - பல(எண்‌ண முடியாக) வருஷங்கள்‌. இங்கு ஆண்டு மனுஷ்ய லோகத்தில்‌ ஆண்டைக்‌ குறிக்கும்‌
பல்லாண்டு, pallaandu - தேவ வருஷத்தில்‌ எண்ண முடியாக வருஷங்கள்‌
பல்லாயிரத்தாண்டு, pallayiraththaandu - பிரஹ்மாவின்‌ வருஷக்‌ கணக்கில் எண்ண முடியாத வருஷங்கள்‌
பலகோடி நூறாயிரம், palakodi nooraayiram - எண்‌ண முடியாத பிரஹ்மாக்களுடைய கணக்கில்லாத வருஷங்கள்‌- அதாவது: கால தத்த்வம்‌ உள்ளவரை
மல்லாண்ட, mallanda - மல்‌-சாணூரன்; முஷ்டிகன் முதலிய மல்லர்களை. ஆண்ட-அடக்கிக்‌ கொன்ற
திண்தோள், thinthol - திண்‌-திடமான ; மஹா பலம்‌ பொருந்திய தோள்‌ -இருத்‌ தோள்களை உடைய
மணிவண்ணா, manivanna - மாணிக்கம் போன்ற வர்ணத்தையும்‌ ஸ்வபாவத்தையும்‌ உடையவனே
உன், un - உன்னுடைய
செவ்வடி, chevvadi - செம்‌-அடி ; சிவந்த திருவடியின்‌
செவ்விதிருக் காப்பு, chevvi thiruk kaappu - அழகுக்கு குறைவற்ற ரக்ஷை உண்டாக
வேணும் . )
2திருப்பல்லாண்டு || 2
அடியோமோடும் நின்னொடும் பிரிவு இன்றி
ஆயிரம் பல்லாண்டு
விடிவாய் நின் வல மார்வினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்து உறையும் சுடர்
ஆழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச
சன்னியமும் பல்லாண்டே
அடியோமோடும், adiyoomodum - தாஸரான எங்களோடும்
நின்னோடும், ninnodum - ஸ்வாமியான உன்னோடும்
பிரிவின்றி, pirivinri - பிரிவில்லாமல்
இருக்கும் ஸம்பந்தம்

ஆயிரம் பல்லாண்டு, aayiram pallaandu - எந்நாளும் நித்யமாய்ச்
செல்ல வேண்டும்

வடிவாய், vativai - அழகே உருவெடுத்தவளும் ஸர்வாபரணபூஷிதையுமான
வலமார்பினில் வாழ்கின்ற, valamaarpinil vaazhginra - வலத்திருமார்பில் நித்யவாஸம் பண்ணுகிற
மங்கையும், mangaiyum - நங்கை; ஸ்த்ரீத்வத்தில் பரிபூர்ணமானவள்; நித்ய யௌவனத்தை உடையவள். ('உம்' என்பதினால்
பூமி நீளாதேவிகளும் காப்பிடப்படுகிறார்கள்.)

பல்லாண்டு, pallaandu - நித்யமாகக் கூடி இருக்கவேண்டும் ('உம்' என்பதினால் பூமி நீளாதேவிகளும் காப்பிடப்படுகிறார்கள்)
வடிவார் சோதி, vativar jodhi - பகவானுடைய திவ்யசரீரத்தையும் சூழும் ஒளியையுடைய
வலத்துறையும், valathuraiyum - உன் வலது திருக்கையில் நித்ய வாஸம் பண்ணுகிற
சுடராழி, sudaraazhi - எதிரிகளை எரிக்கும் சக்கரத்தாழ்வானும்
பல்லாண்டு, pallaandu - சாச்வதமாய்ச் சேர்ந்து இருக்கவேண்டும்
படை போர் புக்கு, padai por pukku - ஆயுதமாய் போரிலேபுகுந்து
முழங்கும், muzhangum - சப்திக்கும்
அப்பாஞ்ச சன்னியமும், appaanja sanniyamum - அந்தபாஞ்சு சன்னியம் என்று பெயர் பெற்ற சங்கமும்
பல்லாண்டே, pallaandae - அத்யமாய் இருக்கவேண்டும்.
இருக்கவேண்டும்
3திருப்பல்லாண்டு || 3
வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து
மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள்
குழுவினிற் புகுதலொட்டோம்
ஏழாட்காலும் பழிப்பு இலோம் நாங்கள்
இராக்கதர் வாழ் இலங்கை
பாழாள் ஆகப் படை பொருதானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே
வாழ் ஆள் - Vaazh Aal - கைங்கர்யமாகிற போகத்துக்கு
பட்டு - Pattu - பொருந்தி
நின்றீர் - Nindreer - நிலைநின்றவர்களாய்
உள்ளீரேல் - Ulleerel - இருப்பீர்க ளானால்
வந்து - Vandhu - (விரைவாக)
மண்ணும் - Mannum - (திருமுளைத் திருநாளைக்குப்) புழுதிமண் சுமக்கையையும்
மணமும் - Manamum - (அந்தக்கலியாணத்திற்கு) அபிமானிகளாய் இருக்கையையும்
கொண்மின் - Konmin - ஸ்வீகரியுங்கள்
கூழ் - Koozh - சோற்றுக்காக
ஆள் பட்டு - Aal Pattu - (பிறர்க்கு) அடிமைப்பட்டு
நின்றீர்களை - Nindreergalai - (எங்கும் பரந்து) நிற்கும் உங்களை
எங்கள் - Engal - (அநந்யப்ரயோஜனரான) எங்களுடைய
குழுவினில் - Kuzhuvinil - கூட்டத்திலே
புகுதல் ஒட்டோம் - Puguthal Ottom - சேரவிடமாட்டோம்
நாங்கள், Naangal - நாங்களோவெனில்
ஏழ் ஆள் காலும், Ezh Aal Kaalum - முன்னேழ் பின்னேழ் நடுவேழாகிய இருபத்தொரு தலைமுறைகளிலும்
பழிப்பு இலோம், Pazhippu Ilom - (ஒருவித மான) குற்றமும் இல்லாதவர்கள்
இராக்கதர், Iraakkathar - (ராவணன் முதலிய) ராக்ஷஸர்கள்
வாழ், Vaazh - வாழ்ந்துவந்த
இலங்கை, Ilankai - லங்கையானது
பாழ் ஆள் ஆக, Paazh Aal Aaga - பாழடைந்த ஆளை உடையதாம்படி
படை, Padai - யுத்தத்திலே
பொருதானுக்கு, Poruthaanukku - (அன்று) சண்டை செய்தருளிய எம்பிரானுக்கு
பல்லாண்டு கூறுதும், Pallaandu Koordhum - (இன்றிருந்து) திருப்பல்லாண்டு பாடுமவர்களாயிருக்கிறோம்.
4திருப்பல்லாண்டு || 4
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து
எங்கள் குழாம் புகுந்து
கூடு மனம் உடையீர்கள் வரம்பு ஒழி
வந்து ஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கு அறிய நமோ
நாராயணாய என்று
பாடு மனம் உடைப் பத்தருள்ளீர் வந்து
பல்லாண்டு கூறுமினே
ஏடு, Aedu - பொல்லாங்கான
நிலத்தில், Nilathil - நிலமாகிய மயானத்தில்
இடுவதன் முன்னம், Idhuvadhan Munnam - (உங்களைச் ) சேர்ப்பதற்கு முன்
வந்து, Vandhu - (உங்கள் திரளிலிருந்து ) வந்து
எங்கள் குழாம், Engal Kuzhaam - எங்கள் கோஷ்டியிலே
புகுந்து, Pugundhu - ப்ரவேசித்து
கூடும் மனம் உடையீர்கள், Koodum Manam Udaieergal - கூடுவோம் என்னும் நினைவுள்ளவர்களாகில்
வரம்பு ஒழி வந்து, Varambu Ozi Vandhu - (ஆத்மான மாவை மட்டும் அனுபவிப்பது என்னும் ) வரம்பை விட்டு வந்து
ஒல்லை, Ollai - விரைவாக
கூடுமினோ, Koodumino - (எங்கள் கோஷ்டியில்) கூடுங்கள்
நாடும், Naadum - நாட்டுப்புறங்களிலுள்ள ஸாமாந்யரும்
நகரமும், Nagaramum - நகரத்திலுள்ள அறிவாளிகளும்
நன்கு அறிய, Nangu Ariya - நன்றாக அறியும்படி
நமோ நாராயணாய என்று, Namo Naaraayanaaya Endru - திருமந்திரத்தை அனுஸந்தித்து
பாடும், Paadum - ( ப்ரீதிக்குப் போக்கு விட்டுப் ) பாடக்கூடிய
மனம் உடை, Manam Udaie - நினைவுள்ள
பத்தர் உள்ளீர், Pathar Ullireergal - பக்தியை உடையவர்களாகில்
வந்து பல்லாண்டு கூறுமினே, Vandhu Pallaandu Kooremine - வந்து திருப்பல்லாண்டு பாடுங்கள்
5திருப்பல்லாண்டு || 5
அண்டக் குலத்துக்கு அதிபதி ஆகி
அசுரர் இராக்கதரை
இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த
இருடிகேசன் தனக்கு
தொண்டக் குலத்தில் உள்ளீர் வந்து அடிதொழுது
ஆயிர நாமம் சொல்லிப்
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்
லாயிரத்தாண்டு என்மினே
அண்டக் குலத்துக்கு, Andak Kulathukku - அண்டங்களின் ஸமூஹத்துக்கு
அதிபதி ஆகி, Adhipathi Aagi - நியமிப்பவனாகி
அசுரர், Asurar - அஸுரர்களும்
இராக்கதரை, Iraakkatharai - ராக்ஷஸர்களுமாகிற
இண்டக் குலத்தை, Indak Kulathai - நெருக்கின கூட்டத்தை
எடுத்து, Eduthu - திரட்டி
களைந்த, Kalaindha - ஒழித்த
இருடீகேசன் தனக்கு, Irudeekesan Thaankku - இந்திரியங்களுக்கு அதிபதியான எம்பெருமானுக்கு
தொண்டக் குலத்தில் உள்ளீர், Thondak Kulathil - அடிமை செய்பவர்கள் குலத்திலே
உள்ளீர், Ullireer - உள்ளவர்களான
வந்து, Vandhu - எங்கள் கோஷ்டிக்கு வந்து
அடி, Adi - அச்சுதனுடைய திருவடிகளை
தொழுது, Thozhudhu - ஸேவித்து
ஆயிர நாமம் , Ayira Naamam - அவனுடைய ஆயிரம் பெயர்களையும்
சொல்லி, solli - வாயாரச்சொல்லி
பண்டைக் குலத்தை, Pandai Kulathai - புருஷோத்தமனிடம் சென்று மற்றொரு பலனைப் பெற்று அகலுபவர்களாயிருந்த பழைய ஜன்மத்தை
தவிர்ந்து, Thavirndhu - நீக்கி
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே, Pallaandu Pallaayiraththaandu Enmine - பலகால் மங்களாசாஸனம் செய்யுங்கள்
6திருப்பல்லாண்டு || 6
எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்
ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திரு
வோணத் திருவிழவில்
அந்தியம் போதில் அரியுரு ஆகி
அரியை அழித்தவனைப்
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்
தாண்டு என்று பாடுதுமே
எந்தை, Endhai - நானும் என் தகப்பனும் இருவர்
தந்தை தந்தை தந்தை, Thandhai Thandhai Thandhai - என்று ஒரு மூவர்
தம் மூத்தப்பன், Tham Moothappan - அவனுக்குத் தந்தையும் பாட்டனுமாகிய
ஏழ் படி கால் தொடங்கி, Ezh Padi Kaal Thodangi - ஏழு தலைமுறைகள் தொடங்கி
வந்து, Vandhu - மங்களாசாஸநம் பண்ணத்தக்க ஸமயங்கங்களிலே வந்து
வழி வழி, Vazhi Vazhi - முறை முறையாக
ஆட்செய்கின்றோம்,Aatcheikinrom - அடிமை செய்கிறோம்
திருவோணத் திருவிழவில், Thiruvonath Thiruvizhavil - திருவோணமென்கிற திருநாளிலே
அந்தியம் போதில், Andhiyam Pothil - (அஸுரருடைய பலம் வளரும்) அந்திவேளையிலே
அரியுருவாகி, Ariyuruvagi - நரஸிம் ஹரூபத்தை உடையவனாய்
அரியை , Ariyai - (தன் அடியவனான ப்ரஹ்லாதனுக்கு) சத்துருவான இரணியனை
அழித்தவனை, Azhithavannai - உருவழித்தவனுக்கு
பந்தனை தீர, Pandhanai Theera - (அவனை ஸம் ஹரித்ததினால் உண்டான) ஆயாஸம் தீரும்படியாக
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதும், Pallaandu Pallaayiraththaandendru Paaduthum - காலதத்வமுள்ள வரையில் மங்களாசாஸநம் செய்வோம்
7திருப்பல்லாண்டு || 7
தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி
திகழ் திருச்சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று
குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொருபடை வாணனை ஆயிரந்
தோளும் பொழி குருதி
பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே
தீயில், Theeyil - அக்னி/ஸூரியன் முதலிய பொருள்களைக் காட்டிலும்
பொலிகின்ற, Polikindra - மிகவும் விளங்குகிற
செம்சுடர், Semsudar - சிவந்த ஒளியை உடையவனாய்
ஆழி, Aazhi - வட்டமாக
திகழ், Thigazh - பிரகாசிக்கிற
திருச் சக்கரத்தின் கோயில், Thiru Chakkarathin Koyil - ஸ்ரீஸுதர்சநாழ்வானுடைய இருப்பிடத்
தின்

பொறியாலே, Poriyale - சிந்தத்தாலே
ஒற்றுண்டு நின்று, Ottrundu Nindru - அடையாளம் செய்யப்பட்டவராய் நின்று
குடிகுடி, Kudikudi - தலைமுறை தலைமுறையாக
ஆட்செய்கின்றோம், Aatcheikinrom - அடிமை செய்வதற்காக வந்தோம்
மாயப் பொரு படை, Maaya Poru Padai - வஞ்சனையாகப் போர் செய்யும் ஸேனையை உடைய
வாணனை, Vaananai - பாணாஸுரனுடைய
ஆயிரம் தோளும், Ayiram Tholum - ஆயிரம் தோள்களிலிருந்தும்
பொழி குருதி பாய, Pozhi Kuruthi Paaya - பொழியாநின்றுள்ள ரத்த வெள்ளம் பாயும்படியாக
சுழற்றிய, Suzhatriya - சுழற்றப்பெற்ற
ஆழி, Aazhi - திருவாழி யாழ்வானை
வல்லானுக்கு, Vallaanukku - ஏந்தி நிற்க வல்லவனுக்கு
பல்லாண்டு கூறுதுமே, Pallaandu Koordhume - திருப்பல்லாண்டு பாடுகிறோம்
8திருப்பல்லாண்டு || 8
நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும்
அத்தாணிச் சேவகமும்
கை அடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு
காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை
வெள்ளுயிர் ஆக்கவல்ல
பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப்
பல்லாண்டு கூறுவனே
நெய் இடை, Nei Idai - நெய்யின் நடுவிலிருக்கும்
நல்லது ஓர் சோறும், Nalladhu Or Sorum - பாவசுத்தியுடன் இடப்பட்டதாய்(ஒப்பற்ற சுவையை உடையதான ப்ரஸாதத்தையும்)
நியதமும், Niyadhamum - எப்போதும்
அத்தாணிச் சேவகமும், Athaanich Sevakamum - பிரிவில்லாத ஸேவையையும்
கை, Kai - (எம்பெருமான் தன்) திருக்கையாலே இட்ட
அடைக்காயும், Adaikkaayum - வெற்றிலைப் பாக்கையும்
கழுத்துக்குப் பூணொடு, Kazhuthukkup Poonodu - கழுத்துக்கு ஆபரணமான குண்டலத்தையும்
காதுக்குக் குண்டலமும், Kaadhukkuk Kundalamum - காதுக்கு ஆபரணமான குண்டலத்தையும்
மெய்யிட, Meyyida - உடம்பிலே பூசத்தக்க
நல்லது ஓர் சாந்தமும், Nalladhu Or Saanthamum - பரிமளம் நிறைந்த ஒப்பற்ற சந்தனமும்
தந்து, Thandhu - கொடுத்து
என்னை, Ennai - (மிகவும் நிஹீனனான) என்னை
வெள் உயிர் ஆக்கவல்ல, Vel Uyir Aakkavalla - சுத்த ஸ்வபாவனாக ஆக்கவல்ல
பை உடை, Pai Udai - படங்களை உடைய
நாகம், Naagam - ஸர்ப்பத்துக்கு
பகை, Pagai - விரோதியான கருடனை
கொடியானுக்கு, Kodiyaanukku - கொடியாக உடையவனுக்கு
பல்லாண்டு கூறுவன், Pallaandu Kooruvan - மங்களாசாஸனம் பண்ணக்கடவேன்
9திருப்பல்லாண்டு || 9
உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை
உடுத்து கலத்தது உண்டு
தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன
சூடும் இத்தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திரு
வோணத் திருவிழவில்
படுத்த பைந் நாகனைப் பள்ளி கொண்டானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே
உடுத்து, Uduthu - திருவரையில் உடுத்து
களைந்த, Kalaindha - கழித்த
நின், Nin - (ஸ்வாமியான) உன்னுடைய
பீதக ஆடை, Peethaka Aadai - திருப்பீதாம் பரத்தை
உடுத்து, Uduthu - உடுத்தும்
கலத்தது, Kalathadhu - (நீ அமுது செய்த) கலத்தில் மிகுந் திருப்பதை
உண்டு, Undu - உண்டும்
சூடிக்களைந்தன, Soodikkalaindana - (உன்னால்) சூட்டிக்கொள்ளப்பட்டு களையப்பட்டதும்
தொடுத்த, Thodutha - (உன்னுடைய அடியாரான எங்களால் ) தொடுக்கப்பட்டதுமான
துழாய் மலர், Thuzhaai Malar - திருத்துழாய் மலர்களை
சூடும், Soodum - சூட்டிக்கொள்ளும்
இத்தொண்டர்களோம், Iththondarkalom - இப்படிப்பட்ட அடியார்களாயிருக்கிறோம் நாங்கள்
விடுத்த, Vidutha - ஏவின
திசைக் கருமம், Thisai Karumam - திக்கிலுள்ள காரியங்களை
திருத்தி, Thiruththi - நன்றாகச்செய்து
திருவோணத் திருவிழவில், Thiruvonath Thiruvizhavil - திருவோண மென்னும் திருநாளிலே
படுத்த, Padutha - படுக்கப்பட்டு
பை, Pai - (அதனாலே ) பணைத்த படங்களையுடைய
நாக அணை, Naaga Anai - திருவனந்தாழ் வானாகிற படுக்கையிலே
பள்ளி கொண்டானுக்கு, Palli Kondaanukku - திருக்கண் வளர்ந்தருளுகிற உனக்கு
பல்லாண்டு கூறுதும், Pallaandu Koorudhum - திருப்பல்லாண்டு பாடுவோம்
10திருப்பல்லாண்டு || 10
எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடி
யோம் என்று எழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில்
வீடுபெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திரு மதுரையிற்
சிலை குனித்து ஐந்தலைய
பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே உன்னைப்
பல்லாண்டு கூறுதுமே
எம்பெருமான், Emperumaan - எங்களுக்கு ஸ்வாமியானவனே !
உன் தனக்கு, Un Thanakku - (ஸர்வசேஷியான) உனக்கு
அடியோமென்று, Adiyomendru - அடிமைப்பட்டவர்கள் நாங்கள் என்று
எழுத்துப்பட்ட, Ezuthuppatta - அடிமை ஓலை எழுதிக்கொடுத்த
எந்நாள், Ennnaal - நாள் எதுவோ
அந்தாளே, Andhaale - அந்த நாளே
அடியோங்கள், Adiyongal - சேஷபூதர்களான எங்களுடைய
அடி, Adi - அடிமைப்பட்ட
குடில், Kudil - தாய் வீட்டிலுள்ள புத்ரபௌத்ராதிகளெல்லாம்
வீடு பெற்று, Veetu Petru - கைவல்யமோக்ஷத்திலிருந்து விடுதலை பெற்று
உய்ந்தது, Uyindhadhu - உஜ்ஜீவித்தது
செம் நாள், Sem Naal - அழகியதான திருநாளிலே
தோற்றி, Thorri - திருவவதாரம் செய்து
திரு மதுரையுள், Thiru Madhuraiyul - அழகிய வட மதுரையில்
சிலை குனித்து, Silai Kunithu - (கம்ஸனுடைய ஆயுதசாலையில்) வில்லை முறித்து
ஐந்தலைய, Aindhalaiya - ஐந்து தலைகளை உடையதாய்
பை, Pai - பாந்த படங்களையுமுடையதான
நாகம், Naagam - காளியனென்னும் நாகத்தின்
தலை, Talai - தலையின் மேல்
பாய்ந்தவனே, Paaindhavane - ஏறிக் குதித்தருளிள ஸர்வேச்வரனே !
உன்னை, Unnai - உனக்கு
பல்லாண்டு கூறுதும், Pallandu Koorudhum - மங்களாசாஸனம் பண்ணக்கடவோம்
11திருப்பல்லாண்டு || 11
அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர்
கோன் அபிமானதுங்கன்
செல்வனைப் போல திருமாலே நானும்
உனக்குப் பழ அடியேன்
நல் வகையால் நமோ நாராயணா என்று
நாமம் பல பரவி
பல் வகையாலும் பவித்திரனே உன்னைப்
பல்லாண்டு கூறுவனே
அல்வழக்கு, Alvazhakku - தவறான வழக்குகளில்
ஒன்றும் இல்லா, Ondrum Illa - சிறிதும் இல்லாதவராய்
அணி, Ani - (ஸம்ஸாரத்துக்கு) ஆபரணமான
கோட்டியர், Kottiyar - திருக்கோட்டியூரிலுள்ளவர்களுக்கு
கோன், Kon - தலைவராய்
அபிமான துங்கன், Abimaana Thungan - நான் எம்பெருமானுக்கு அடியேன் என்னும் அபிமானத்தில் உயர்ந்தவராயுள்ள
செல்வனைப்போல், Selvanai Pol - செல்வநம்பியைப்போல
திருமாலே, Thirumale - லஷ்மீநாதனே !
நானும், Naanum - அடியேனும்
உனக்கு, Unakku - ஸ்வாமியான உனக்கு
பழ அடியேன், Pazha Adiyen - பழமையான அடிமையாயிருக்கிறேன்
நல் வகையால், Nal Vagaiyaal - அழகிய வகையில்
நமோ நாராயணா என்று, Namo Narayana Endru - திருமந்திரத்தை அனுஸந்தித்து
நாமம் பல, Naamam Pala - உன்னுடைய பல திருநாமங்களையும்
பரவி, Paravi - க்ரமமில்லாமல் சொல்லி
பல்வகையாலும் பவித்திரனே, Palvakaiyaalum Pavithirane - (ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி முதலிய) எல்லாவற்றாலும் பாபத்தைப் போக்குபவனே !
உன்னைப் பல்லாண்டு கூறுவன், Unnaip Pallandu Kooruvan - உனக்கு மங்களாசாஸனம் செய்வேன்
12திருப்பல்லாண்டு || 12
பல்லாண்டு என்று பவித்திரனைப் பர
மேட்டியைச் சார்ங்கம் என்னும்
வில் ஆண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டு
சித்தன் விரும்பிய சொல்
நல் ஆண்டு என்று நவின்று உரைப்பார் நமோ
நாராயணாய என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து
ஏத்துவர் பல்லாண்டே
பல்லாண்டு என்று, Pallandu Endru - நித்யமாய் மங்கள முண்டாகவேண்டும் என்று
பவித்திரனை, Pavithiranai - (இயற்கையாகவே) பரிசுத்தனாய்
பரமேட்டியை, Paramettiyai - மேலான ஸ்தானமான வைகுண்டத்தில் எழுந்தருளியிருப்பவனாய்
சார்ங்கம் என்னும், Saarngam Ennum - சார்ங்கமென்று திருநாமத்தை உடைய
வில், Vil - வில்லை
ஆண்டான் தன்னை, Aandaan Thannai - ஆளும் எம்பெருமானைக் குறித்து
வில்லிபுத்தூர், Villiputhoor - ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த
விட்டுசித்தன், Vittu Chithan - விஷ்ணுசித்தன் என்ற திருநாமத்தையுடைய பெரியாழ்வார்
விரும்பிய, Virumbiya - விருப்பத்துடன் அருளிச்செய்த
சொல், Sol - ஸ்ரீஸூக்தியை
நல் ஆண்டு என்று, Nal Aandu Endru - (பல்லாண்டு பாடத்தக்க) நல்ல காலம் (நேர்படுவதே!) என்று
நவின்று உரைப்பார், Navinru Uraippar - இடைவிடாமல் சொல்லுமவர்கள்
நமோ நாராயணாய், Namo Narayanaaya - திருமந்திரத்தை அனுஸந்தித்து
பல்லாண்டும், Pallandum - கணக்கற்ற காலங்கள்
பரமாத்மனை, Paramaathmanai - பரமாத்மா நாராயணனை
சூழ்ந்து இருந்து, Soozhnthu Irundhu - சுற்றிலும் இருந்து
ஏத்துவர் பல்லாண்டே, Ethuvar Pallande - பல்லாண்டு பாடுவார்கள்