திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1003 | பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜீவஹிம்ஸைகள் பண்ணித் திரிந்ததற்கும் எல்லையில்லையென்கிறார். கோடியமனமாவது வழியைவிட்டு விலகின மனம்; ருஜு வான வழியில் போகாமல் கோணலாகச் செல்லுகின்ற மனம் என்றபடி. புத்தி கெட்டுச் சினத்தொழில்களைச் செய்தேனென்கிறார்.) 6 | கோடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து திரிந்து நாயினத்தொடும் திளைத்திட்டு
ஓடியும் உழன்றும் உயிர் களே கொன்றேன் உணர்விலேன் ஆதலால் நமனார்
பாடியைப் பெரிதும் பரிசழித்திட்டேன் பரமனே பாற் கடல் கிடந்தாய்
நாடி நான் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-6 | பதவுரை Show / Hideபரமனே, Paramaney - புருஷோத்தமனே! பாற்கடல் கிடந்தாய், Paarkadal Kidandhai - திருப்பாற்கடலில் திருக்கண் வளர்ந்தருளுமவனே! கோடிய மனத்தால், Kodiyamanathal - கோணலான நெஞ்சோடே சினம் தொழில் புரிந்து, Sinam Thozhil Purinthu - பிறர்க்கு விரோதமான காரியங்களைச் செய்து நாய் இனத்தொடும் திரிந்து திளைத்திட்டு, Nai Inathodum Thirinthu Thilaithittu - நாய் முதலிய துஷ்ட ஜந்துக்களோடு கூடித்திரிந்து வேட்டையாடிக்களித்து ஓடியும் உழன்றும், Oadiyum Uzhanthum - இங்குமங்கும் ஓடித்திரிந்தும் உயிர்களே கொன்றேன், Uyirgale Konren - பிராணி ஹிம்ஸையையே செய்துகொண்டிருந்தவனாய் உணர்வு இலேன் நான், Unarvu Ilen Naan - விவேக சூந்யனாயிருந்த நான் நமனார் பாடியை பெரிதும் பரிசு அழித்திட்டேன், Namanar Paadiyai Peridum Parisu Azhithitten - யமபட்டணமான நரகத்தின் நிலைமையை மிகவும் அழித்து விட்டேன். |