திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1014 | பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நரசிங்கமூர்த்தி இரணியன் மீது கொண்ட கோபம் அளவற்றிருந்ததனால் அந்தக் கோபாக்நி மேலுலகமளவும் போய்ப் பரவி எங்கும் தஹிக்கப்புகவே ஸர்வலோக ஸம்ஹாரஸமயம் பிறந்துவிட்ட தென்று மூவுலகத்திலுள்ளோரும் அஞ்சி நடுங்கும்படியா யிருந்ததாம். அப்படிப்பட்ட உக்ர நரஸிம்ஹன் எழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேள் குன்றம்.) 7 | முனைத்த சீற்றம் விண் சுடப் போய் மூ வுலகும் பிறவும்
அனைத்தும் அஞ்ச வாளரியாய் இருந்த வம்மானிதிடம்
கனைத்த தீயும் கல்லும் அல்லா வில்லுடை வேடருமாய்
தினைத்தனையும் செல்ல ஒண்ணாச் சிங்க வேள் குன்றமே –1-7-7 | பதவுரை Show / Hideமுனைத்த சீற்றம், Munaiththa Seetrum - மிக்க கோபமானது போய், Poy - வளர்ந்து சென்று விண் சுட, Vin Sudha - ஆகாயத்தைக் கொளுத்தவும் மூ உலகும்பிறவும், Moo Ulagum Piravum - மூன்று லோகங்களும் மற்றுமுள்ளவைகளும் அனைத்தும், Anaiththum - எல்லாம் அஞ்ச, Anja - பயப்படவும் கனைத்த தீயும், Kanaittha Theeyum - ஒலி செய்கின்ற நெருப்பும் கல்லும், Kallum - (அந்த நெருப்பினால் வேகின்ற) கற்களும் அல்லா வில் உடை வேடரும் ஆய், Allaa Vil Udai Veadarum Aayi - உலகத்தில் கண்டறியாத விற்களையுடைய வேடர்களும் நிறைந்திருப்பதனாலே தினை தனையும் செல்ல ஒண்ணா, Thinai Thanaiyum Sella Onna - க்ஷணகாலமும் கிட்ட வொண்ணாததான |