திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1017 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1017பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வீரலக்ஷ்மி விளங்குங் கண்களையுடைய சிங்கங் களானவை யானைக்கோடு முதலியவற்றைக் கொண்டு ஸமர்ப்பித்து வணங்குமிட மான சிங்கவேழ் குன்றத்திலே யெழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான் விஷயமாகத் திருமங்கை மன்னன் அருளிச்செய்த சொல்மாலையை ஓதவல்லவர்கள் தீங்கின்றி வாழ்வார்கள் என்று – இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.) 10
செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன் மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன் செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே –1-7-10
பதவுரை Show / Hide
செம்கண் ஆளி, Semkan Aali - சிவந்த கண்களையுடைய சிங்கங்கள்
இட்டு, Ittu - (தமக்குக் கிடைத்த யானைத் தந்தம் முதலியவற்றைத்) திருவடிகளிலே ஸமர்ப்பித்து
இறைஞ்சும், Iraichum - வணங்குமிடமான
சிங்க வேழ் குன்று உடைய, Singam Vezh Kuntru Udaiya - சிங்கவேழ் குன்றத்தை இருப்பிடமாகவுடையனாய்
எங்கள் ஈசன், Engal Eesan - ஸம்ஸாரிகளான நமக்கெல்லார்க்கும் ஸ்வாமியாய்
எம் பிரானை, Em Piraanai - நமக்கு உபகாரகனாயுமுள்ள ஸ்ரீ நரஸிம்ஹமூர்த்தி விஷயமாக,
இரு தமிழ் நூல் புலவன், Iru Tamil Nool Pulavan - பெரிய தமிழ் சாஸ்த்ரத்தில் வல்லவராய்
மங்கை ஆளன், Mangai Aalan - திருமங்கை நாட்டுக்குத் தலைவராய்
மன்னு தொல்சீர், Mannu Tholseer - நித்யஸித்தமான ஸ்ரீ வைஷ்ணவலஷ்மியை உடையவராய்
வண்டு அறைதார், Vandu Araidhaar - வண்டுகள் படிந்து ஒலி செய்கின்ற மாலையை யணிந்தவராய்
செம் கை ஆளன், Sem Kai Aalan - மிக்க உதாரரான
கலியன், Kaliyan - ஆழ்வாரருளிச்செய்த
செம் சொல் மாலை, Sem Sol Maalai - செவ்விய இச்சொல் மாலையை
வல்லவர், Vallavar - ஓதவல்லவர்கள்
தீது இலர், Theethu Ilar - தீமை யொன்றுமின்றி நன்மை பெற்றவராவர்.