திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1019 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1019பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கம்ஸனால் ஏவப்பட்டு முலை கொடுக் கிற வியாஜத்தாலே ஸ்ரீ க்ருஷ்ண சிசுவை முடித்திடவேணுமென்று முலையிலே விஷம் தடவிக்கொண்டு தாய்போல வந்த பூதனையென்னும் பேய்ச்சியானவள் கதறும்படியாக அவளுடைய முலையையும் உயிரையும் உறிஞ்சியுண்ட பெருமான், பிரமன் முதலியோர்க்கு முகங்கொடுப்பதற்காகப் பள்ளி கொண்டருளுமிடம் திருப்பாற்கடல்;) 2
பள்ளியாவது பாற் கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை பிள்ளையாய் உயிர் உண்ட வெந்தை பிரானவன் பெருகுமிடம் வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள் தொறும் தெள்ளியார் வணங்கும் மலைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே –1-8-2
பதவுரை Show / Hide
வன் பேய், Van Pei - கல்நெஞ்சை யுடையளான பூதனை யென்பவள்
இரங்க, Iranga - கதறும்படியாக
முலை, Mulai - (அவளது) முலையை
பிள்ளை ஆய், Pillai Aay - சிறு குழந்தையாயிருக்கச் செய்தே
உயிர், Uyir - உயிருடன்
உண்ட, Unda - உறிஞ்சி அமுதுசெய்த
எந்தை பிரான், Endhai Piraan - ஸ்ரீக்ருஷ்ணபகவான்
பள்ளி ஆவது, Palli Aavathu - பள்ளி கொள்ளுமிடமாவது
பாற்கடல் அரங்கம், Paarkadal Arangam - திருப்பாற்கடலும் திருவரங்கமுமாம்;
அவன், Avan - அப்பெருமான்
பெருகும் இடம், Perugum Idam - வளருகிற இடமாயும்,
தெள்ளியார், Thelliyar - தெளிந்த ஞானிகள்,
வெள்ளியான் கரியான் மணி நிறம் வண்ணன் என்று எண்ணி, Velliyan Kariyan Mani Niram Vannan Endru Enni - (கிருதயுகத்தில்) வெளுத்த நிறத்தனாயும் (கலியுகத்தில்) கறுத்த நிறத்தனாயும் (த்வாபரயு கதில்) சாமநிறத்தனா யுமிருப்பவன் என்று தியானித்துக் கொண்டு
நாள் தொறும், Naal Thorum - ஒவ்வொரு நாளும்
வணங்கும், Vanangum - வணங்கப்பெற்றதாயு முள்ள
திருவேங்கடம் மலை, Thiruveengadam Malai - திருமலையை
நெஞ்சே அடை, Nenje Adai - மனமே! ஆச்ரயி.