திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1033 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1033பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சரீரமென்பது பஞ்சபூமயமாயிருக்கும். மண்ணையும் மணலையும் கல்லையும் நீரையும் சேற்றையுங்கொண்டு வீடு கட்டுமா போலே, ப்ருதிவி, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் என்கிற பஞ்சபூதங்களைக் கொண்டு இந்த மாம்ஸபிண்டம் நிருமிக்கப்பட்டிராநின்றது.) 6
மண்ணாய் நீர் எரி கால் மஞ்சுளாவு மாகாசமுமாம் புண்ணார் ஆக்கை தன்னுள் புலம்பித் தளர்ந்து எய்த்து ஒழிந்தேன் விண்ணார் நீள் சிகர விரையார் திருவேங்கடவா அண்ணா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-6
பதவுரை Show / Hide
விண் ஆர் நீள் சிகரம், Vin Ar Neel Sikaram - ஆகாசத்தையளாவி உயர்ந்திருக்கிற கொடுமுடிகளையுடையதும்
விரை ஆர், Virai Aar - பரிமளம் மிக்கதுமான
திருவேங்கடவா, Thiruveengadavaa - திருமலையிலே எழுந்தருளியிருக்கிற
அண்ணா, Anna - ஸ்வாமிந்!,
மண்ஆய் நீர் எரி கால் மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம், Manai Neer Eri Kaal Manju Ulaavum Aakachamum Aam - பூமி, ஜலம், அக்நி, வாயு, மேகங்களு லாவுகின்ற ஆகாசம் ஆகிய பஞ்சபூதங்களினாலாகியதும்
புண் ஆர், Pun Ar - புண்கள் நிறைந்ததுமான
ஆக்கை தன்னுள், Aakkai Thannul - சரீரத்திலே (அகப்பட்டுக் கொண்டு)
புலம்பி தளர்ந்து எய்த்து ஒழிந்தேன், Pulambi Thalarndhu Eyththu Ozhindhen - கதறியழுது உடல் மெலிந்து மிகவும் கஷ்டப்பட்டவனான அடியேன்