திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1034 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1034பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (“கிளரொளியிளமை கெடுவதன் முன்னம்” என்றும்) 7
தெரியேன் பாலகனாய்ப் பல தீமைகள் செய்துமிட்டேன் பெரியேனாயின பின் பிறர்க்கே வுழைத்து ஏழை யானேன் கரிசேர் பூம் பொழில் சூழ் கனமா மலைவேங்கடவா அரியே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-7
பதவுரை Show / Hide
கரி சேர், Kari Ser - யானைகள் மிகுந்திருக்கப் பெற்றதும்
பூ பொழில் சூழ், Poo Pozhil Soozh - அழகிய சோலைகளாலே சூழப்பட்டும்
கனம் மா மலை வேங்கடவா, Kanam Maa Malai Vengadavaa - திண்ணியதாயு மிருக்கிற திருமலையிலே வாழ்பவனே!
அரியே, Ariye - ஹரியே!
பாலகன் ஆய், Palagan Aayi - சிறியேனாயிருந்தபோது
தெரியேன், Theriyeen - அறிவில்லாதவனாய்
பல தீமைகள், Pala Theemaigal - பல பாவங்களை
செய்தும் இட்டேன், Seithum Ittaein - செய்து தீர்த்தேன்;
பெரியேன் ஆயின பின், Periyeen Aayin Pin - யௌவன பருவ மடைந்த பின்பு
பிறர்க்கே உழைத்து, Pirarkke Uzhaiththu - விஷயாந்தர பரனாய் ச்ரமப் பட்டு
ஏழை ஆனேன், Ezhaai Aanen - சதிர்கெட்டுப்போனேன்;