திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1035 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1035பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நோற்கையாவது – ஸங்கல்பிக்கை; பல பிறவிகளை ஸங்கல்பிக்கையாவது – பலபிறவிகள் உண்டாகும்படி கருமங்களைச் செய்தலாம்.) 8
நோற்றேன் பல் பிறவி உன்னைக் காண்பதோர் ஆசையினால் ஏற்றேன் இப் பிறப்பே இடர் உற்றனன் எம்பெருமான் கோல் தேன் பாய்ந்து ஒழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-8
பதவுரை Show / Hide
கோல் தேன் பாய்ந்து ஒழுகும், Kol Then Paayndhu Ozhugum - கோல்களின்றும் தேன் இழிந்து வெள்ளமிடா நின்ற
குளிர் சோலை சூழ் வேங்கடவா, Kulir Solai Soozh Vengadavaa - குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருமலையில் வாழ்பவனே!
எம்பெருமான், Emperumaan - அஸ்மத் ஸ்வாமியே!,
பல் பிறவி நோற்றேன், Pal Piravi Nootren - எனக்குப் பல பிறவிகள் உண்டாகும்படி காரியம் செய்து வைத்தேன்.
உன்னை காண்பது ஓர் ஆசையினால், Unnai Kaanbathu Oor Aasaiyin Aal - உன்னை ஸேவிக்கவேணுமென்று ஒரு காதல் கிளர்ந்த படியினாலே
இப்பிறப்பே ஏற்றேன், Ippirappe Aetren - இந்த ஜந்மத்திலே உனக்கு அன்பனாக ஏற்பட்டேன்.
இடர்உற்றனன், Idarutranan - (இன்னமும் நேரக்கூடிய பிறவிகளை நினைத்து) துக்கப்படா நின்றேன்;