திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1038 | பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மிகப் பெரிய கடலையே அகழாகவுடைத்தான இலங்கைக்குத் தலைவனான இராவணனுடைய திண்மை பொருந்திய சரீரம் இருபிளவாகப் பிளவுறும்படியாக அவன் மீது அம்புகளைப் பிரயோகித்தவனே! என்று ஸ்ரீராமபிரானாக விளிக்கின்றார் திருவேங்கடமுடையானை;) 1 | கண்ணார் கடல் சூழ் இலங்கைக் கிறைவன் தன்
திண்ணாகம் பிளக்கச் சரம் செல வுய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய
அண்ணா வடியேன் இடரைக் களையாயே –1-10-1 | பதவுரை Show / Hideகண் ஆர் கடல் சூழ், Kan Aar Kadal Soozh - விசாலமான கடலாலே சூழப்பட்ட இலங்ககைக்கு இறைவன் தன், Ilankakaikku Iraivan Than - லங்காபுரிக்கு தலைவனான இராவணனுடைய திண்ஆகம் பிளக்க, Thinagham Pilakka - திண்ணிய சரீரம் பிளந்துபோம் படியாக சரம், Saram - அம்புகளை செல உய்த்தாய், Sela Uyththai - செலுத்தினவனே! விண்ணோர் தொழும், Vinnor Thozhum - (பிரமன் முதலிய) தேவர்கள் வந்து ஸேவிக்கப் பெற்ற வேங்கடம் மாமலை, Vengadam Mamalai - திருமலையிலே மேய அண்ணா, Meya Annan - எழுந்தருளி யிருக்கிற பெருமானே! அடியேன் இடரை களையாய், Adiyen Idarai Kalaiyai - என் துன்பங்களை நீக்கியருள வேணும். |