திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1040 | பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மற்ற பேர்களை ரக்ஷிக்க நான் சக்தனாயினும் பாவிகளில் தலைவரான உம்மை ரக்ஷித்தல் எனக்கு எளிதன்றே; இஃது அருமையான காரியமாயிற்றே!’ என்று எம்பெருமான் திருவுள்ளமாக;) 3 | நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு
ஏரால மிளந்தளிர் மேல் துயில் எந்தாய்
சீரார் திருவேங்கட மா மலை மேய
ஆராவமுதே அடியேற்கு அருளாயே –1-10-3 | பதவுரை Show / Hideநீர் ஆர் கடலும், Neer Aar Kadhalum - நீர் நிரம்பியிருக்கிற கடலையும் நிலனும், Nilanum - பூமியையும் முழுது, Muzhuthu - மற்றுமுள்ள எல்லாவற்றையும் (பிரளயம் கொள்ளாதபடி) உண்டு, Undu - அமுது செய்து ஏர், Aer - அழகியதும் இள, Ila - இளையதுமான ஆலந்தளிர் மேல், Aalanthazhirk Mel - ஆலந்தளிரின் மேலே துயில், Thuyil - திருக்கண்வளர்ந்தருளின எந்தாய், Endhai - ஸ்வாமியே!, சீர் ஆர், Seer Aar - சிறப்புப் பொருந்திய திருவேங்கடம் மா மலை மேய, Thiruveengadam Maa Malai Maeya - திருமலையிலே எழுந்தருளியிருக்கிற ஆரா அமுதே, Aaraa Amudhe - ஆராவமுதமான எம்பெருமானே! அடியேற்கு அருளாய், Adiyeerkku Arulai - அடியேன் மீது கிருபை செய்தருளவேணும். |