திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1041 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1041பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருமலையிலெழுந்தருளியிருக்கிற இருப்பில் பரத்வ ஸௌலப்யங்களிரண்டும் ஒருங்கே விளங்குகின்றன வென்ன வேண்டி இரண்டுக்கும் ப்ரகாசகமான இரண்டு சேஷ்டிதங்களை முன்னடிகளிற் கூறுகின்றார்.) 4
உண்டாய் உறி மேல் நறு நெய்யமுதாக கொண்டாய் குறளாய் நிலமீரடியாலே விண டோய் சிகரத் திருவேங்கடம் மேய அண்டா வடியேனுக்கு அருள் புரியாயே –1-10-4
பதவுரை Show / Hide
உறி மேல், Uri Mel - உறிகளின் மேல் வைக்கப்பட்டிருந்த
நறு நெய், Naru Ney - நல்ல நெய்யை
அமுது ஆக உண்டாய், Amuthu Aaga Undaai - அமுதமாகக் கொண்டு புஜித்தவனே!
குறள் ஆய், Kural Aai - வாமநனாகி
நிலம், Nilam - பூமியை
ஈர் அடியாலே, Eer Adiyaale - இரண்டடியாலே
கொண்டாய், Kondai - அளந்து கொண்டவனே!
விண் தோய் சிகரம், Vin Thoy Sikaram - பரமபதம் வரையில் சென்று ஓங்கின சிகரத்தையுடைய
திருவேங்கடம் மேய, Thiruveengadam Maeya - திருமலையிலே நித்யவாஸம் பண்ணுகிற
அண்டா, Andaa - தேவாதி தேவனே!
அடியேனுக்கு அருள் புரியாய், Adiyenukku Arul Puriyai - அடியேன் மீது கிருபை செய்தருளவேணும்.