திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1042 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1042பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பக்தர்களின் சத்துருக்களிடத்தில் சீற்றமும், பக்தர்களிடத்தில் வாத்ஸல்யமும் விளங்கத் திருமலையிலே ஸேவைஸாதிக்கிறபடியைப் பேசுகிறார். தூணினுள்ளே நரசிங்கமாய்த் தோன்றி இரணியனுடலைப் பிளந்தெறிந்து சிறுக்கனான ப்ரஹ்லாதாழ்வானுக்கு அருள் செய்தாப்போலே அடியேன் மீதும் அருள் செய்யவேணு மென்கிறார்.) 5
தூணாய தனூடு அரியாய் வந்து தோன்றி பேணா வவுணனுடலம் பிளந்திட்டாய் சேணார் திருவேங்கட மா மலை மேய கோணா கணை யாய் குறிக்கொள் எனை நீயே –1-10-5
பதவுரை Show / Hide
தூணாயதனூடு, Thoonayathanoodu - வெறும் தூணாகவேயிருக் கிறவதற்குள்ளே
அரி ஆய், Ari Aai - நரஸிம்ஹமாகி
வந்து தோன்றி, Vandhu Thondri - திருவவதரித்து,
பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய், Pena Avunan Udalam Pilandittai - (தன்னை) மதியாத ஹிரண்ய கசிபுவின் சரீரத்தைக் கிழித்துப் போகட்டவனே!
சேண் ஆர், Seen Aar - மிக்க உயர்த்தி பொருந்திய
திரு வேங்கடம் மா மலை மேய, Thiru Vengadam Maa Malai Maeya - திருமலையிலே எழுந்தருளியிருப்பவனும்
கோள் நாகம் அணைபாய், Kol Naagam Anaipai - மிடுக்கையுடைய திருவனந்தாழ்வானைப் பள்ளியாகவுடையனுமான பெருமானே!
எனை, Enai - அடியேனை
நீயே குறிக்கொள், Neeye Kurikkol - நீயாகவே திருவுள்ளம் பற்றியருளவேணும்.