திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1044 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1044பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அண்ணா வடியே னிடரைக் களையாயே” என்று முதற்பாட்டிலே தாம் பிரார்த்தித்தபடியே தம்முடைய இடர்களைக் களைந்து அருளினது, முன்பு நப்பின்னைப்பிராட்டியின் கலவிக்கு விரோதிகளாயிருந்த ஏழு ரிஷபங்களை வலியடக்கினதுபோலே யிருக்கையாலே அதனைப்பேசி இனியராகிறார்.) 7
மானேய் மட நோக்கி திறத்து எதிர் வந்த ஆனேழ் விடை செற்ற அணி வரைத் தோளா தேனே திருவேங்கட மா மலை மேய கோனே என் மனம் குடி கொண்டு இருந்தாயே –1-10-7
பதவுரை Show / Hide
மான் ஏய் மட நோக்கி திறத்து, Maan Aey Mad Nookki Thirathu - மானினுடைய நோக்குப் போன்ற அழகிய நோக்குடையளான நப்பின்னைப் பிராட்டிக்காக,
எதிர் வந்த, Edhir Vanda - செருக்குடன் வந்த
ஆன் விடை ஏழ் செற்ற, Aan Vidai Aezh Settra - ஏழு ரிஷபங்களைக் கொன்ற
அணி வரை தோளா, Ani Varai Thoalaa - அழகிய மலைபோன்ற திருத்தோள்களை யுடையவனே
தேனே, Thene - தேன்போல் போக்யனானவனே!
திருவேங்கடம் மா மலை மேய கோனே, Thiruveengadam Maa Malai Maeya Kone - திருமலையிலே எழுந்தருளியிருக்கிற ஸ்வாமியே!
என் மனம், En Manam - என்னுடைய நெஞ்சை
குடிகொண்டு, Kudikondru - இருப்பிடமாகக்கொண்டு
இருந்தாய், Irundhai - நிலைபெற்றிரா நின்றாய்.