திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1045 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1045பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்படி என்னெஞ்சிலே நப்பின்னைப்பிராட்டியோடுங்கூட வந்து புகுந்தானானபின்பு இவன் திருவடிகளிலே கைங்கரியம் பண்ணுகையொழிய வேறொன்றும் நானறியேன் என்கிறார்.) 8
சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற மாயன் மணி வாள் ஒளி வெண்டரளங்கள் வேய் விண்டுதிர் வேங்கட மா மலை மேய ஆயன் அடி அல்லது மற்று அறியேனே –1-10-8
பதவுரை Show / Hide
சேயன், Seyan - (பக்தியற்றவர்களுக்கு) எட்டாதவனும்
அணியன், Aniyan - (பக்தர்களுக்குக்) கையாளாயிருப்பவனும்
என சிந்தையுள் நின்ற மாயன், En Sinthaiyul Nindra Maayan - என் நெஞ்சினுள்ளே வந்து நின்ற ஆச்சரியபூதனும்,
வேய் விண்டு, Vey Vindu - மூங்கில்களானவை பிளவுபட்டு
ஒளி வெண்தரளங்கள், Oli Ventharalangkal - பிரகாசமுள்ள வெளுத்த முத்துக்களையும்
வாள்மணி, Vaalmani - ஒளியுள்ள ரத்னங்களையும்
உதிர், Uthir - உதிர்க்குமிடமான
வேங்கடம் மா மலை மேய, Vengadam Maa Malai Meya - திருமலையில் எழுந்தருளியிருப்பவனுமான
ஆயன், Aayan - ஸ்ரீக்ருஷ்ணனுடைய
அடி அல்லது, Adi Allathu - திருவடிகளையொழிய
மற்று, Mattru - வேறொன்றையும்
அறியேன், Ariyeen - அறியமாட்டேன்.