திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1046 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1046பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தாம் பெற்ற பேற்றை வாயாரச் சொல்லி மகிழ்கிறார். “வந்து என் மனம் புகுந்து மன்னிநின்றாய்” என்று ஒரு வாக்கியமாகவே சொல்லிவிடலாமாயினும் தம்முடைய ஆநந்தம் நன்கு விளங்குமாறு ”வந்தாய் – என் மனம் புகுந்தாய் – மன்னிநின்றாய் ” என்று தனித்தனி வாக்கியமாக நீட்டி நீட்டி யுரைக்கின்றார்.) 9
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ சிந்தா மணியே திருவேங்கடம் மேய எந்தாய் இனி யான் உன்னை என்றும் விடேனே –1-10-9
பதவுரை Show / Hide
நந்தாத, Nandhaadha - ஒருகாலும் அணையாத
கொழு சுடரே, Kozhu Sudare - சிறந்த தேஜஸ்ஸாயிருப்பவனே!
எங்கள் நம்பீ, Engal Nambi - எங்களுடைய குறையை நிரப்பவல்ல பூர்ணனே!
சிந்தாமணியே, Sindhamaniye - நினைத்த மாத்திரத்தில் எல்லாவற்றையும் கொடுத்தருள வல்லவனே!
திருவேங்கடம் மேய எந்தாய், Thiruveengadam Meya Enthaai - திருமலையிலெழுந்தருளியிருக்கும் பெருமானே!
வந்தாய், Vandhaai - என்பக்கல் வந்தாய்;
என் மனம் புகுந்தாய், En Manam Pugundhaai - எனது நெஞ்சினுள்ளே புகுந்தாய்;
மன்னி நின்றாய், Manni Nindraai - உள்ளேயே பொருந்தி நின்றாய்;
இனி, Ini - இனிமேல்
யான், Yaan - அடியேன்
உன்னை என்றும் விடேன், Unnai Endrum Vidaen - உன்னை ஒருநாளும் விடமாட்டேன்.