திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1047 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1047பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருமலையிலே வில்லுங்கையுமான வேடர்கள் நிறைந்து கிடப்பது வருணிப்பதன் கருத்து யாதெனில்; ஆழ்வார் மங்களாசாஸநபரராகையாலே தம்மைப்போன்ற மங்களாசாஸநபரர்கள் திருமலையிலே பலருளர் என்றபடி.) 10
வில்லார் மலி வேங்கட மா மலை மேய மல்லார் திரடோள் மணி வண்ணன் அம்மானை கல்லார் திரடோள் கலியன் சொன்ன மாலை வல்லார் வர் வானவர் ஆகுவர் தாமே –1-10-10
பதவுரை Show / Hide
வில்லார் மலி, Villaar Mali - வேடர்கள் நிறைந்திருக்கப்பெற்ற
வேங்கடம் மாமலை, Vengadam Mamalai - திருவேங்கடமென்னும் சிறந்த மலையிலே
மேய, Meya - எழுந்தருளியிருப்பவனும்
மல் ஆர் திரள் தோள், Mal Aar Thiral Thol - மிடுக்குமிக்குத் திரண்ட திருத்தோள்களை யுடையவனும்
மணிவண்ணன், Manivannan - நீலமணி போன்ற திருநிறத்தையுடையவனுமான
அம்மானை, Ammanai - எம்பெருமானைக் குறித்து,
கல் ஆர் திரள் தோள், Kal Aar Thiral Thol - மலைபோன்ற திரண்ட தோள்களையுடையரான
கலியன், Kaliyan - திருமங்கைமன்னன்
சொன்ன, Sonna - அருளிச்செய்த
மாலை, Maalai - இச்சொல்மாலையை
வல்லாரவர் தாம், Vallaaravar Thaam - ஓதவல்லவர்கள்
வானவர் ஆகுவர், Vaanavar Aaguvar - நித்யஸூரிகளாகப் பெறுவர்கள்.