திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1051 | பெரிய திருமொழி || (2-1–வானவர்) (திருவேங்கடம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜ்ஞாநீத்வாத் மைவ மே மதம் -என்கிறபடியே ஜ்ஞாநிகளைத் தனக்கு ஆத்ம பூதராக உடையவனாய் இருக்கிறவனுக்கு நீயும் ஆவி ஆனாயோ-என்கிறார் நாலாம் பாசுரத்தில்) 4 | பாவி யாதுசெய் தாயென் னெஞ்சமே! பண்டு தொண்டுசெய் தாரை, மண்மிசை
மேவி யாட்கொண்டு போய்வி சும்பேற வைக்குமெந்தை,
கோவி நாயகன் கொண்ட லுந்துயர் வேங்க டமலை யாண்டு, வானவர்
ஆவி யாயிருப் பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே. –2-1-4 | பதவுரை Show / Hideஎன் நெஞ்சமே, En Nenjame - என் மனமே! (- (அடிமைத்தொழில் பூண்டாயே-.)) பாவியாது செய்தாய், Paaviyadhu Seithai - அலைபாயாமல் திண்ணிதான அத்யவஸாயம் கொண்டாய்; பண்டு மண்மிசை மேவி, Pandhu Manmichai Mevi - முன்பு இந்நிலத்திலே வந்தவதரித்து, தொண்டு செய்தாரை ஆள் கொண்டுபொய், Thondu Seithaarai Aal Kondupoi - அடிமை செய்தவர்களை ஆட்படுத்திக்கொண்டு போய் விசும்பு ஏற வைக்கும் எந்தை, Visumbu Eera Vaikkum Endhai - பரமபதத்திலே ஸ்தாபித்தருளும் ஸ்வாமியும், கோவி நாயகன், Kovi Naayagan - கோபிகளுக்கு நாதனும், கொண்டல் உந்து உயர், Kondal Unthu Uyar - மேகங்களைத் தள்ளும்படியான உயர்த்தியையுடைய (சிகரங்கள் பொருந்திய) வேங்கடம் மலை, Vaengadam Malai - திருமலையை ஆண்டு, Aandu - அரசாட்சி செய்துகொண்டு வானவர் ஆவியாய் இருப்பாற்கு, Vaanavar Aaviyai Iruppaarku - ஞானிகளைத் தனக்கு உயிர் நிலையாகவுடையவனுமான அப்பனுக்கு |