திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1053 | பெரிய திருமொழி || (2-1–வானவர்) (திருவேங்கடம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ த்ரி பாத் விபூதி-அதிலே உண்டான ஸ்ரீ அநந்த ஸ்ரீ வைநதேயாதிகளுக்கு நிர்வாஹகன் ஆனவனுக்கு – அமரருடைய வ்யாபாரத்தை அநாதரித்து நித்ய ஸூரிகள் உடைய யாத்ரைகளிலே அன்வயித்தாயே- என்கிறார் ஆறாம் பாசுரத்தில்) 6 | துவரி யாடையர் மட்டை யர்சமண் தொண்டர் கள்மண்டி யுண்டு பின்னரும்,
தமரும் தாங்களுமே தடிக்கஎன் நெஞ்சமென்பாய்,
கவரி மாக்கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்டகண் ணார்வி சும்பிடை,
அமர நாயகறகு இன்றடிமைத் தொழில் பூண்டாயே. –2-1-6 | பதவுரை Show / Hideஎன் நெஞ்சம் என்பாய், En Nenjam Enbai - ஓ மனமே!, (- (நீயும் அவர்களைப்போலே உண்டு தடிக்க நினையாமல்) (இன்று அடிமைத்தொழில் பூண்டாயே-.)) துவரி ஆடையர், Thuvari Aadaiyar - காஷாய வஸ்த்ரமுடுத்தவர்களாய் மட்டையர், Mattaiyar - மொட்டைத்தலையரா யிருக்கிற சமண் தொண்டர்கள், Saman Thondargal - சமணமதக்காரர்கள் மண்டி, Mandi - ஒருவர்க்கொருவர் மேல் விழுந்து உண்டு, Undu - (மனம்போன படி) உணவுகளை உட்கொண்டு பின்னரும், Pinnarum - மேலும் தாங்களும் தமரும் தடிக்க, Thangalum Thamarum Thadikka - அவர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் உடல் தடித்துக்கிடக்க, கவரி மா கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்ட, Kavari Maa Kanam Serum Vengadam Koyil Konda - சவரிமான்கள் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்திருக்கப்பெற்ற திருமலையைக் கோயிலாகக் கொண்டவனும் கண் ஆர் விசும்பிடை அமரர் நாயகற்கு, Kan Aar Visumpidai Amarar Nayakarukku - விசாலாமான பரமபதத்திலேயுள்ள நித்யஸூரிகளுக்குத் தலைவனுமான பெருமானுக்கு |