திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1054 | பெரிய திருமொழி || (2-1–வானவர்) (திருவேங்கடம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆதித்ய அந்தராத்மாவாய் இருக்கும் என்று அனுசந்தித்துப் போகை அன்றிக்கே கண்ணாலே கண்டு அடிமை செய்து அனுபவிக்கப் பெற்றாயே நீ –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்) 7 | தருக்கி னால்சமண் செய்து சோறுதண் தயிரினால்திரளை,மிடற்றிடை
நெருக்கு வார்அலக் கணது கண்டென் நெஞ்சமென்பாய்,
மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டத னோடும், வானிடை
அருக்கன் மேவிநிற் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே. –2-1-7 | பதவுரை Show / Hideதருக்கினால், Tharukkinaal - வெறும் தர்க்கங்களாலே (- (அடிமைத்தொழில் பூண்டாயே-.)) சமண் செய்து, Saman Seythu - தங்களுடைய சமண மதத்தைப்பற்றி வாது செய்துகொண்டு தண் தயிரினால், Than Thayirinaal - நல்ல தயிரோடு கூடிய சோறு திரளை, Sooru Thiralai - சோற்றுக் கவளத்தை மிடறு இடை, Mitaru Idai - கழுத்துக்குள்ளே யிட்டு நெருக்குவார், Nerukkuvaar - அடைப்பவர்களான அந்தச் சமணருடைய அலக்கண் அது, Alakkan Adhu - அப்படிப்பட்ட திண்டாட்டத்தை கண்டு, Kandu - பார்த்து என் நெஞ்சம் என்பாய், En Nenjam Enbai - ஓ மனமே! (நீ அவர்களுடைய திரளில் சேராமல்) வண்டுகள், Vandugal - வண்டுகளானவை மருட்கள், Marutkal - மருள் முதலிய இசைகளை பாடும், Paadum - பாடுமிடமான வேங்கடம், Vengadam - திருமலையை கோயில் கொண்டு, Koyil Kondu - திருக்கோயிலாகக் கொண்டு அதனோடும், Adhanodum - அவ்வளவுமாத்திரமன்றிக்கே வானிடை, Vaanidai - ஆகாசத்திலே (திரிகிற) அருக்கன், Arukkan - ஸூர்யமண்டலத்திலும் மேவி நிற்பாற்கு, Mevi Nirpaaruku - பொருந்தியிருக்கும் பெருமானுக்கு |