திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1056 | பெரிய திருமொழி || (2-1–வானவர்) (திருவேங்கடம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பலரும் அவனை ஆஸ்ரயித்து பின்னையும் காணப் பெறார்கள் – ப்ரஹ்மாதிகள் அநந்தரம் தம் தாம் அதிகார அர்த்தமாக ஆஸ்ரயியா நிற்பர்கள் – நீ இவ்விரண்டு கோடியிலும் இன்றிக்கே அவன் பக்கலிலே அடிமை புக்காயே-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்) 9 | கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய் என்நெஞ்சமென் பாய் துணிந்துகேள்,
பாடி யாடிப் பலரும் பணிந்தேத்திக் காண்கிலா,
ஆடு தாமரை யோனு மீசனும் அமர் கோனும்நின் றேத்தும்,வேங்கடத்து
ஆடு கூத்தனுக் கின்று அடிமைத்தொழில் பூண்டாயே. –2-1-9 | பதவுரை Show / Hideகூடி, Koodi - உலகத்தாரோடே கூடி (- (இதற்கு முன்பெல்லாம்) (இன்று அடிமைத்தொழில் பூண்டாயே-.)) ஆடி, Aadi - அவர்கள் எந்த விஷயங்களிலே ஊன்றுவர்களோ அந்த விஷயங்களிலே ஊன்றி, உரைத்ததே உரைத்தாய், Uraiththade Uraiththai - அவர்கள் என்ன வார்த்தைகளைச் சொல்லுவார்களோ அந்த வார்த்தை களையே சொல்லிக் கொண்டிருந்த என் நெஞ்சம் என்பாய், En Nenjam Enbai - என் மனமே! துணிந்து கேள், Thuninthu Kela - (இப்போது நான் உனக்கு மகிழ்ந்து சொல்வதை) விச்வஸித்துக் கேள்; பலரும், Palarum - எத்தனையோ பேர்கள் பாடி, Paadi - (பகவத் குணங்களைப்) பாடிக் கொண்டும் ஆடி, Aadi - கூத்தாடிக்கொண்டும் பணிந்து, Paninthu - ஆச்ரயித்து ஏத்தி, Aethi - துதித்தும் காண்கிலா, Kankila - ஸாக்ஷாத்கரிக்க முடியாதவனும், ஆடு தாமரையோனும் ஈசனும் அமரர் கோனும் நின்று ஏத்தும் வேங்கடத்து ஆடு கூத்தனுக்கு, Aadu Thamaraiyonum Eesanum Amarar Konum Ninru Aethum Vengadathu Aadu Koothanukku - வெற்றியையுடைய பிரமனும் சிவனும் இந்திரனும் நிலை நின்று போற்றுமிடமான திருமலையிலே நிற்பவனும் (முன்பு) குடக்கூத்தாடினவனுமான பெருமானுக்கு |