திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1059 | பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திரியட்டும் ஸ்ரீ ராமாவதாரம் அனுவர்த்தித்த படி –-அவன் வந்து -சாய்ந்தான்-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்) 2 | தைய லாள்மேல் காதல்செய்த தானவன் வாளரக்கன்,
பொய்யி லாத பொன்முடிக ளொன்பதோ டொன்றும்,அன்று
செய்த வெம்போர் தன்னி லங்கோர் செஞ்சரத் தாலுருள,
எய்த வெந்தை யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. –2-2-2 | பதவுரை Show / Hideதையலாள்மேல், Thaiyalalmael - அழகிற் சிறந்த பிராட்டி விஷயத்திலே (- (எவ்வுள் கிடந்தானே-.)) காதல்செய்த, Kaadhalseitha - காமம் கொண்ட தானவன், Thaanavan - ஆஸூரப்ருக்ருதியாய் வாள், Vaal - வாளாயுதத்தை யுடையவனான அரக்கன், Arakkan - இராவணனுடைய பொய் இலாத பொன் முடிகள், Poi Iladha Pon Mudigal - மெய்யான பொன்முடிகள் ஒன்பதோடு ஒன்றும், Onpathodu Ondrum - பத்தையும் அன்று அங்கு செய்த வெம்போர் தன்னில், Andru Angu Seitha Vembor Thannil - முன்பு ராமாவதாரத்திலே கடற்கரையில் செய்த கோரமான யுத்தத்திலே ஓர் செம் சரத்தால் உருள எய்த எந்தை எம் பெருமான், Oru Sem Sarathaal Urula Eytha Endhai Em Perumaan - ஒப்பற்ற சிவந்த பாணத்தினாலே உருட்டின எம் பெருமான் |