திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1061 | பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திரியவும் ஸ்ரீ கிருஷ்ண அவதாரமே பின்னாட்டிற்று –சமஸ்த கல்யாண குணாத்மகனாய்ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்த இருப்பிலும் இங்கே வந்து அவதரித்து தான் தாழ நின்ற பின்பு ஆயிற்று –பூரணன் ஆயிற்று – சர்வ வித பந்துவானவனை காணலாவது ஸ்ரீ பரம பதத்திலே என்று அவ்விடத்துக்கு போக பொதி சோறு கட்ட வேண்டாதே பந்து க்ருத்யம் பண்ணலாம் படி ஸ்ரீ திரு வெவ் வுள்ளிலே வந்து சாய்ந்தான் ஆயிற்று – என்கிறார் நாலாம் பாசுரத்தில்) 4 | பந்த ணைந்த மெல்விரலாள் பாவைதன் காரணத்தால்,
வெந்தி றலே றேழும்வென்ற வேந்தன் விரிபுகழ்சேர்,
நந்தன் மைந்த னாகவாகும் நம்பி நம்பெருமான்,
எந்தை தந்தை தம்பெருமானெவ்வுள் கிடந்தானே. –2-2-4 | பதவுரை Show / Hideபந்து அணைந்த மெல் விரலாள் பாவைதன் காரணத்தால், Pandhu Anaindha Mel Viralal Paavaithan Kaaranaththal - பந்து பொருந்திய மெல்லிய விரல்களை யுடையளான நப்பின்னைப்பிராட்டி நிமித்தமாக (- (எவ்வுள் கிடந்தான்-.)) வெம் திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன், Vem Thiral Aeru Aezhum Vendhan - க்ரூரமான மிடுக்கையுடைய ஏழுரிஷபங்களையும் வென்று முடித்த அரசனும், விரி புகழ் சேர் நந்தன், Viri Pugazh Cher Nandhan - உலகமெங்கும் பரந்த புகழையுடையனான நந்தகோபனுக்கு மைந்தன் ஆக ஆகும் நம்பி, Maindhan Aaga Aagum Nambi - திருக்குமாரனாக அவதரித்த பரிபூர்ணனும் நம்பெருமான், Namberumaan - நமக்கு ஸ்வாமியும் எந்தை தந்தை தம்பெருமான், Endai Thandai Thamberumaan - நம்குலத்துக்கெல்லாம் நாதனுமானவன் |